என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
விருதுநகரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவின் பெயரில் கஞ்சா வைத்திருப்பவர்கள், புகையிலை வைத்திருப்பவர்கள் ஆகியோரை கண்காணிக்க போலீசில் தனி குழு அமைக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வன்னியம்பட்டி பேச்சியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் சோதனை செய்ததில் பேச்சியம்மாள் வீட்டில் இருந்த அவரது மருமகன் சேதுபதிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, ரூ. 4,680ஐ பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சேதுபதியை கைது செய்தனர்.
சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 44). இவர் கஞ்சா விற்பனை செய்வதாக நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், ரொக்கம் ரூ. 22 ஆயிரத்து 500, 2 செல்போன்கள், எடை அளவு எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சுப்புராஜை கைது செய்தனர்.
Next Story






