என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
    • மோசமான சாலையால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

    ராஜபாளையம்

    சிவகாசி காக்கிவாடன்பட்டியை சேர்ந்தவர் தளவாய்பாண்டியன் (வயது45), ஆட்டோ டிரைவர். இவர் காக்கிவாடன்பட்டியில் இருந்து சவாரி ஏற்றி கொண்டு ராஜபாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்குள் சிக்கிய தளவாய் பாண்டியன் காயமடைந்து பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து தளவாய் பாண்டியன் மகன் முரளி மனோஜ் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமலும், செப்பனிடபடாமலும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை களை விரைவாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ராஜபாளையம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் சாலைகளில் புதிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்தில் சிக்குகின்றனர். தொடர் விபத்துக்களையும், உயிர் பலிகளையும் தடுக்க முறையான வடிகால் வசதியுடன் சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது.
    • நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், உப தொழில்களான காகித ஆலைகள், அச்சுத்தொழில் உள்ளிட்டவற்றில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

    நாடு முழுவதிலும் ஒன்றரை கோடி பேர் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன.

    2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளுக்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையானது. கொரோனா கால கட்டங்களில் 2020-ல் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை முறையே முந்தைய ஆண்டுகளின் சராசரியை விட குறைவாக இருந்தது.

    தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது. அதனை முறியடித்து கடந்தாண்டு (2022) தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையானதால், ரூ.6 ஆயிரம் கோடிக்கு முதல் முறையாக வர்த்தகம் நடைபெற்றது.

    இந்நிலையில் நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தொடர் வெடி விபத்துகள், சீதோஷ்ண நிலை காரணமாக கடைசி கட்ட உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவைகளால் கடந்த ஆண்டு விற்பனை இலக்கை ஒட்டியே இந்த ஆண்டும் பட்டாசு பட்டாசுகள் விற் றுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டு ரூ.5,950 கோடிக்கு மட்டுமே பட்டாசுகள் விற்பனையாகி கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.50 கோடிக்கு குறைவாகவே இருந்துள்ளது.

    இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் இளங்கோவன் கூறும்போது, தொடர் மழையினால் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு, தொடர் பட்டாசு வெடி விபத்துகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடர் ஆய்வுகள், நடவடிக்கையால் கடந்த ஒரு மாத காலத்தில் பட்டாசு உற்பத்தியில் 10 சதவிகிதம் பாதிக்கப்பட்டது.

    மேலும் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விற்பனைக்கு உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமும் விற்பனை குறைவுக்கு முக்கிய காரணமாகும். தமிழக பட்டாசு விற்பனையில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை விட நடப்பாண்டில் ரூ.50 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்தார்.

    • சிவகாசி அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • திருத்தங்கல் ேபாலீசார் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நமஸ் கரித்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). பந்தல் அமைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இளையமகன் பொன்னு பாண்டி (23). கூலி வேலைக்கு சென்ற இவர் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக வசித்து வந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு பொன்னுபாண்டி தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயம் காளீஸ்வரி என்பவர் தனது மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். பட்டாசு வெடி சத்தத்தில் அந்த மாடுகள் மிரண்டன.

    உடனே காளீஸ்வரி வீரபாண்டியை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதையடுத்து அங்கு வந்த பொன்னு பாண்டியின் சகோதரர் முனிராஜ் இருவரையும் சமாதானம் செய்துவைத் தார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்த வீரபாண்டி முனிரா ஜிடம், இந்த பிரச்சினை யில் நீ தலையிடாதே என்று எச்சரித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    பின்னர் வீரபாண்டி தனது தோட்டத்திற்கு சென்றார். வடமலாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவ ருக்கு சொந்தமன இந்த தோட்டத்தை வீரபாண்டி குத்தகைக்கு எடுத்திருந்தார். இதற்கிடையே பொன்னு பாண்டி, முனிராஜ் ஆகி யோரை பத்திரமாக பார்த் துக்கொள்ளுமாறும், பிரச்சி னைகளுக்கு செல்லவேண் டாம் என்று அறிவுரை கூறு மாறும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வத்தி டம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு பொன்னுபாண்டி தனது இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியின் தோட்டத் திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதுபற்றி அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் செல்வம் அங்கு சென்றுபார்த்தபோது, பொன்னுபாண்டி அரிவா ளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந் தார்.

    அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பொன்னுபாண்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீ சார், வடமலாபுரம் கார்த்திக், வீரபாண்டி, அசோக் என்ற அய்யாதுரை உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகி றார்கள்.

    • நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • பிரதமருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    விருதுநகர்

    நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    இதுகுறித்து அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் ஒரு நிறுவனம் வெளியிட்ட தகவல் தொடர்பானது மிகுந்த கவலையளிப் பதாக உள்ளது. அவர்களின் அறிக்கையின் படி ஆதார் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் உட்பட்ட 8.15 மில்லியன் இந்திய குடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடையாளம் காணக்கூடிய இணையத் ளத்தில் விற்கப்படுகிறது.

    நமது குடிமக்களின் முக்கியமான தரவுகளின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த தரவு வெறும் 80 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனைக்கு வழங்கப்படு கிறது. இது தனி உரிமை யின் கடுமை யான மீறல் மட் டுமல்ல. தேசிய பாதுகாப்பு விஷய மும் கூட. இன்னும் குழப்ப மான விஷயம் என்ன வென்றால் தரவு செல்லுபடி யாகும் என்று தோன்றுகிறது. இது தரவு பாதுகாப்பு நடவ டிக்கைகளில் குறிப்பிடத்தக்க குறைப்பாட்டை குறிக்கிறது.

    எதிர்காலத்தில் இது போன்ற மீறல்களை தடுக்க அனைத்து அரசமைப்புகள் மற்றும் அமைப்புகளில் இணைய பாதுகாப்பு உட்கட்டமைப்பை மதிப்பாய்வு செய்து மேம்படுத்து மாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக வும் பாதுகாக்கப்பட்ட தாகவும் இருக்க உறுதி அளிக்க வேண்டும். எனவே டிஜிட் டல் மய மாக்கல் மற்றும் இணைய அச்சு றுத்தல்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் நமது தரவு மற்றும் தனி உரிமை பாதுகாப்பதில் அரசு ஒரு முறையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம்.

    இந்த சூழலை சரி செய்வ தற்கும் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்ப டுத்துவதற்கு நடவடிக்கை கள் பற்றி அறிய விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இதேபோல் மற்றொரு அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் சந்திப்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்தியாவை கணினி மயமாக்கிய ராஜீவ் காந்தியின் சிலை அமைக் கப்பட்டு இருந்தது. இந்த சிலை அந்த பகுதி மக்களுக்கும், குறிப்பாக காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களுக்கும் உத்வேகத்தையும், நாட்டுப்பற்றையும் தந்து கொண்டிருந்தது.

    ராஜீவ் காந்தியின் சிலையை யாரோ மர்ம மனிதர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதனால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தியவர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையம் அருகே தடுப்பு சுவரில் மோதி ராணுவ வீரர் பலியானார்.
    • தீபாவளி பண்டிகைக்காக தனது 2-வது மனைவி வீட்டிற்கு சென்றிருந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது37), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரோஷி என்ற சூர்யபிரபா. இவர் வ.உ.சி. நகரில் குடியிருந்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியாபுரத்தில் உள்ள தனது 2-வது மனைவி குருலட்சுமி வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு பண்டிகையை முடித்து விட்டு தனது முதல் மனைவியை பார்ப்பதற்காக காரில் புறப்பட்டார். அவர் ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் வந்தபோது திடீரென சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த காளி முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது சகோதரி பரமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 நாள் வேலை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி நடைபயண போராட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
    • சம்பளம் வழங்கப்படாதது குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி மத்திய அரசு சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு 14 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த வகையில் ரூ.87 கோடி அளவிற்கு சம்பள பாக்கி உள்ளது. இந்த நிலையில் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    மேலும் பிரதமர், நிதிய மைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவ டிக்கையும் எடுக்காமல் உள்ளதால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகருக்கு வரும்போது மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் எனவும் மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் 100 நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி மாவட்ட காங்கிரஸ் சார்பில் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபயண போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் செங்க மல நாச்சியார்புரத்தில் தொடங்குகிறது. சுமார் 100 கிராமங்களுக்கு நடந்து சென்று 100 நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி மத்திய அரசு சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்த புரம் பச்சமடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரம சிவம் (வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது மனைவி மகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, கண வரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றி ருந்தார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரமசிவத்தை உள்நோயாளியாக அனு மதித்தனர். இதற்கிடையே அவர்களது மகள் தனலட்சுமி தந்தைக்கு உடைகள் எடுப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து இந்த திருட்டை அரங்கேற்றியுள்ள னர்.

    இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இதற் கிடையே பாளையங் கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவமும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • மது போதையில் இளைஞர்களுக்கிடையே மோதல்-சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வடபுறம் சர்ச் தெரு, எதிர்புறம் 7 தெருக்களும் உள்ளன. இதில் இரு சமுதாயத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

    நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்ச் தெரு பகுதியில் சில இளை ஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியில் 7-வது தெருவை சேர்ந்த இளை ஞர்கள் சென்று கொண்டி ருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு மதுபாட்டில் களை தட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    இதில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சர்ச் தெருவை சேர்ந்த ஏசா. மணிகண்டன், மணி உள்ளிட்ட 4 இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப் பட்டது. இதை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் பழைய பஸ் நிலையம் அருகே மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்பொழுது விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அந்த வழியாக வந்த பொழுது அவர் வாகனத்தை மறித்து தங்கள் பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட னர். உடனடியாக போலீசார் அவர்களை அப்புற படுத்தினர்.

    பின்னர் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த மறியல் போ ராட்டத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    • போதையில் வாலிபருக்கு பீர் பாட்டில் அடி விழுந்தது.
    • அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் லட்சுமியாபுரத்தில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் தனது தம்பியான அருண்பாண்டியுடன் அங்குள்ள பெட்டிக்கடை அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயம் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் போதையில் வந்த துரைசாமிபுரத்தை சேர்ந்த அபிஷேக் (22) என்பவர் வாயில் பத்தியை வைத்துக்கொண்டு பட்டாசு வெடித்தவாறும், பீர் அருந்திக்கொண்டும் சென்றுள்ளார். இதனை ஹரிகிருஷ்ணன் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அபிஷேக், பீர் பாட்டிலால் ஹரிகிருஷ்ணனை தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் அளித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் விசா ரித்து வருகிறார்கள். ஹரிகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.

    • கல்லூரி மாணவி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி ஜெயராம் நகரை சேர்ந்தவர் முத்துசெல்வி. இவரது மகள் அபிதா(வயது19), தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். கல்லூரிக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டி ருந்தது. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் பலனில்லை.

    இதுகுறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் முத்துசெல்வி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் சுபலட்சுமி(24). அங்குள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். பெற்றோர்கள் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் சுபலட்சுமி செல்போனில் அதிகநேரம் மூழ்கியிருந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை.

    இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள சின்னகொள்ளபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்புத்தாய்(73). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுப்பையா பாண்டியன் ரெயிலில் தகராறு செய்தது குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
    • மதுரை ரெயில் நிலையத்தில் காத்திருந்த ரெயில்வே போலீசார் சுப்பையா பாண்டியனை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர்.

    விருதுநகர்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன்(வயது 35). சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை செல்வதற்காக சங்கரன் கோவில் ரெயில் நிலையத்திற்கு தனது நண்பர் அருண்(34) என்பவருடன் வந்தார். அங்கு வந்த செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருவரும் ஏறினர். இவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்தபோது பரிசோதகர் சுப்பையா பாண்டியனிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது அவர் தான் ஆயுதப்படை காவலர் என்பதற்கான விவரங்களை தெரிவித்துள்ளார். பின்னர் அருணிடம் பரிசோதகர் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் டிக்கெட் இல்லை. அவரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு பரிசோதகர் கூறி உள்ளார். ஆனால் சுப்பையா பாண்டியன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இருவரும் மது போதையில் இருப்பதை உணர்ந்து கொண்ட பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தார். அவர்களும் வந்து சுப்பையா பாண்டியனிடம் சமாதானமாக பேசி அருணுக்கு டிக்கெட் வாங்குமாறு கூறி உள்ளனர்.

    ஆனால் சுப்பையா பாண்டியன் அவர்களிடமும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அருணை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர். சுப்பையா பாண்டியன் தொடர்ந்து பயணம் செய்தார். இதற்கிடையே சுப்பையா பாண்டியன் ரெயிலில் தகராறு செய்தது குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    மதுரை ரெயில் நிலையத்தில் காத்திருந்த ரெயில்வே போலீசார் சுப்பையா பாண்டியனை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அபராதம் விதித்தனர். அவரது நண்பர் அருண் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் முன்னிலையில் போலீஸ்காரர், டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரெயில்வே போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் உரிமைத்தொகை வழங்கும் விழா நடந்தது.
    • விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் 2-ம் கட்ட மகளிர் உரிமைதொகை விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து ெகாண்டு புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு 17,417 புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசிய தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சத்து 6 ஆயிரத்து 919 பெண்களுக்கும், இன்று 2-ம் கட்டமாக 17 ஆயிரத்து 417 பெண்களுக்கும் என மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 336 பெண்களுக்கு இந்த கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வா தாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்க மாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×