என் மலர்
விருதுநகர்
- விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முள் வேலி அமைக்கக்கூடாது என்று ஊராட்சி மன்றத்தலைவர் கோரிக்கை விடுத்தார்.
- பாதையை மறிக்காமல் தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் நாகராஜ் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி யிருப்பதாவது:-
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சியில் சிவகாசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது இந்த இடம் தரிசு நிலமாக முள் செடிகள் படர்ந்து காணப் படுகிறது. இந்த இடத்தில் சுமார் 150 மீட்டர் நீளத்திற்கு ஓ.பி.ஆர் நகர், பெரியார் நகர், டிப்ஜி நகர், ஏ.ஆர் நகர் போன்ற குடியிருப்பு கிராம மக்கள் அணுகு சாலையாக கடந்த 50வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த கோவில் இடத்தை சுற்றி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக முள்வேலி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த பாதையில் முள்வேலி அமைத்தால் இப்பகுதி மக்கள் 1 கிலேமீட்டர் சுற்றி செல்ல வேண்டும். 5ஆயிரம் மக்கள் பாதிக்கப்படு வார்கள்.
மேலும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்கள் பயன் படுத்தும் பாதையை மறிக்காமல் தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்கும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
- ராஜபாளையத்தில் மோட்டார் வாகன அலுவலகம் திறக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி ரோட்டில் ராஜபாளையம் மோட்டார் வாகன ஆய்வா ளர் புதிய பகுதி அலுவல கத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் மற்றும் போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த பயனா ளிக்கு புதிய அலுவலகத்தின் மூலம் முதல் பழகுநர் உரி மத்தை அவர்கள் வழங்கி னார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் பேசுகையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், ஒவ்வொரு திட் டங்களையும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை யிலும், பெண்களின் முன் னேற்றத்தை மேம்படுத்தும் வகையிலும் செயல்படுத்தி வருகிறார்.
ராஜபாளையம் பகுதி மக்கள் முன்பு போக்கு வரத்துத்துறை சார்ந்த பணி களுக்காக கிருஷ்ணன் கோவில் அலுவலகம் வரை செல்ல வேண்டி இருந்தது. பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று, ராஜபாளை யம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தொடர் முயற்சி மேற்கொண்டதின் பலனாக அமைச்சரின் உறுதுணையுடன் போக்கு வரத்துறை மூலம் தற்போது மோட்டார் வாகன ஆய்வா ளர் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக கலைஞரின் மகளிர் தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் பெற்று பயன்பெற்று வருகின்றனர். மேலும், மேல்முறையீட்டிற்கு விண்ணப்பித்துள்ள பெண்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான வர்களுக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.
விண்ணப்பம் செய்துள்ள வர்களில் தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபடாத வண்ணம் அதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கின்றது என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில்,
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமை பெண் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை என பெண்களின் பொருளா தார ரீதியான முன்னேற்றத் திற்கு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையி லான அரசிற்கு அனைவரும் உறுதுணையாகஇருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ், ராஜ பாளையம் நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம், துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கான்கிரீட் கலவை எந்திரம் மோதி நிச்சயதார்த்த விழாவுக்கு வந்தவர் பலியானார்.
- பொம்முசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் மாடசாமி கோவில் ெதருவைச் சேர்ந்தவர் பரமகுரு (வயது 39). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவரது சகோதரிக்கு திருமண நிச்சயதார்த்த விழா ராஜபாளையம் அருகேயுள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற் காக பரமகுரு நேற்று சங்கர பாண்டியபுரம் சென்றிருந் தார். இதற்கிடையே காலையில் திறந்தவெளி கழிப்பி டத்தை நோக்கி உறவினரின் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார்.
வழியில் வாகைக்குளம் கண்மாய் பகுதியில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கான்கிரீட் கலவை எந்திரம் அங்கு வந்தது.
அப் போது எதிர்பாராதவித மாக பரமகுரு மீது அந்த வாகனம் மோதியது. இதில் லாரியின் டயருக்கு அடியில் சிக்கிக்கொண்ட பரமகுரு உடல் நசுங்கி பலியானார்.
இந்த விபத்து குறித்து பரமகுருவின் பெரியப்பா இருளப்பன் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜ குலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியதாக கலவை எந்திரத்தின் டிரைவர் என்.புதூரை சேர்ந்த பொம்முசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- சங்கரய்யா மறைவுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
- மவுன ஊர்வலத்துக்கு தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார்.
சிவகாசி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவிற்கு சிவகாசியில் பல்வேறு கட்சி சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி மவுன ஊர்வலம் நடந்தது. காமராஜர் சிலையில் இருந்து சிவன் கோவில் முன்பு வரை நடந்த ஊர்வலத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மவுன ஊர்வலத்துக்கு தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் தி.மு.க. சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபிக்கண்ணன், மாநகர பகுதி செயலாளர்கள் காளிராஜன், கருணாநிதிப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவா, பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா, சமுத்திரம், பா.ஜ.க. மாநகர தலைவர் பாட்டாகுளம் பழனிச்சாமி, தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநகர கவுன்சிலர் ராஜேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் செல்வின் யோசுதாஸ், பைக்பாண்டி, பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.
- ஒண்ட வந்த பிடாறி, ஊர் பிடாறியை விரட்டிய கதையாக, வேலைக்கு வந்தவர் சொத்தை வளைத்து போட தொடக்கம் முதலே திட்டம் தீட்டியுள்ளார்.
- சிவக்குமார் வசம் இருந்த ஒரு சில சொத்துக்களை பிள்ளையின் எதிர்கால நலனை கூறி தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கியுள்ளார்.
'காட்டன் சிட்டி' என்று அழைக்கப்படும் ராஜபாளையம் 100-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், பேண்டேஜ் துணி தயாரிப்பு என 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் ஒரு தொழில் நகரமாகும். விசுவாசத்திற்கும், வேட்டைக்கும் பயன்படுத்தப்படும் ஐந்தறிவு ஜீவனான நாய்க்கும் புகழ்பெற்ற ராஜபாளையத்தின் பெயரை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கொடூர கொலை சம்பவம் சற்றே மறக்கடித்து இருக்கிறது.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்த குருசாமி ராஜாவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் சிவக்குமார் (வயது 43) தொடர்ந்து அந்த கடையை நடத்தி வந்தார். பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு கசந்ததால் அவரை கோர்ட்டுக்கு சென்று விவகாரத்து பெற்ற சிவக்குமார் தன்னுடைய கடைக்கு வேலைக்கு வந்த நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தன்னை விட 20 வயது குறைந்த காளீஸ்வரி (23) என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு குருசரண் (2) என்ற ஒரு மகன் உள்ளார். தீபாவளி பண்டிகை அன்று ஒரே வண்ணத்தில் கணவன், மனைவி, குழந்தை புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடிய சிவக்குமார், அதேநாள் தந்தையின் நினைவு தினம் என்பதால் மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு ராஜபாளையம் சஞ்சீவி மலை அடிவாரத்தில் உள்ள தந்தையின் கல்லறை தோட்டத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றார்.
அப்போது அங்கு 4 பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்ததாகவும், அவர்களை சிவக்குமார் கண்டித்ததால் அவர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதில் சிவக்குமார் மயங்கி விட்டதாகவும் பதறியடித்துக்கொண்டு சிவக்குமாரின் மனைவி காளீஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு சென்று போலீசார் பார்த்த போது, சிவக்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
அங்கேயே போலீசாருக்கு சந்தேகப்பொறி தட்டியது. இருந்தபோதிலும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதேநேரத்தில் காளீஸ்வரியையும் போலீசார் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது கூட கணவர் கொலை செய்யப்பட்ட சலனம் சற்றும் இல்லாமல் இயல்பாக நடந்து கொண்ட காளீஸ்வரியிடம் பிடியை இறுக்கிய போலீசார், அவர் கூறிய தகவல்களை கேட்டு உறைந்து போனார்கள்.
அதாவது ஒண்ட வந்த பிடாறி, ஊர் பிடாறியை விரட்டிய கதையாக, வேலைக்கு வந்தவர் சொத்தை வளைத்து போட தொடக்கம் முதலே திட்டம் தீட்டியுள்ளார். இவரிடம் மயங்கிய பின்னரே சிவக்குமார் முதல் மனைவியை விவகாரத்தும் செய்ய துணிந்துள்ளார். பஸ் நிலையம் எதிரே சுமார் ரூ.15 கோடிக்கும் மேல் பெறுமானமுள்ள ஸ்வீட் ஸ்டால், ஏராளமான வீடுகள், பல ஏக்கர் பரப்பளவில் நிலங்கள், தந்தையின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்கள் அனைத்தும் தனக்கே, தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த காளீஸ்வரி, கணவரை கொலை செய்யவும் நேரம் குறித்தார். கொலை செய்யும் அளவுக்கு செல்ல முக்கிய காரணம், ஸ்வீட் ஸ்டால் நிர்வாகத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கன்சல்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்த சிவக்குமாருக்கு, அங்கும் ஒரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு தொடர்பு நீடித்துள்ளது. இதனை அறிந்துகொண்ட காளீஸ்வரி சொத்தில் பங்கு போட அந்த பெண்ணும் வந்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சிவக்குமார் வசம் இருந்த ஒரு சில சொத்துக்களை பிள்ளையின் எதிர்கால நலனை கூறி தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கியுள்ளார். இதற்கிடையே சிவக்குமார் ராஜபாளையத்தை சேர்ந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த யோகா மாஸ்டர் அய்யப்பனுக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராததோடு, பணத்தை திரும்ப தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவரை தனக்கு சொந்தமான வீட்டிலேயே சிவக்குமார் வாடகைக்கு வைத்துள்ளார்.
யோகா பயிற்சியாளராக இருந்த அய்யப்பன், காலப்போக்கில் அதனை மறந்து அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த காளீஸ்வரிக்கும் யோகா, சிலம்பம் கற்றுத்தரும் சாக்கில் ஒட்டி, உறவாடி அவரை மடக்கிப்போட்டார். கணவர் இருப்பதோ சென்னை, கள்ளக்காதலன் வசிப்பதோ தனது வீட்டில்..., யாருக்கும் சந்தேகம் வராது என்று எண்ணிய காளீஸ்வரி அய்யப்பனுக்கு நாள்தோறும் உல்லாச விருந்து படைத்து வந்துள்ளார். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல், சிவக்குமாருக்கு இந்த கள்ளக்காதல் விஷயம் தெரியவந்து, மனைவியை கண்டித்துள்ளார். மேலும் காளீஸ்வரியின் சகோதரி ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானம் கிராமத்தில் வசித்து வருகிறார். திருமணம் ஆகாத அவரையும் அழைத்து வா உன்னுடன் சேர்த்து அவருடனும் குடும்பம் நடத்துகிறேன் என்றும் சிவக்குமார் கூறி உள்ளார்.
அப்போது முதல் கணவரை தீர்த்துக்கட்ட தருணம் பார்த்த காளீஸ்வரிக்கு கிடைத்ததோ, தீபாவளி பண்டிகையுடன் மாமனாரின் நினைவு தினம். தந்தை இறந்த நாளிலேயே மகனுக்கு நினைவு தினத்தை தீர்மானித்த காளீஸ்வரி, அதற்கு பகடைக்காயாக கள்ளக்காதலன் அய்யப்பன், அவரது நண்பர் விக்னேஸ்வரன், மேல ஆப்பனூரை சேர்ந்த மருதுபாண்டியன் ஆகியோரை பயன்படுத்தினார். பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பகல் முழுவதும் கணவரை மகிழ்வித்த காளீஸ்வரி, அந்திசாயும் மாலை வேளையில் மாமனாரின் கல்லறை அமைந்துள்ள பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
முதலில் அங்கு தயாராக இருந்த அய்யப்பன், விக்னேஸ்வரன், மருதுபாண்டியன் ஆகியோர் மூலம் சொத்துக்களை காளீஸ்வரியின் பெயருக்கு மாற்றி எழுதித்தருமாறு மிரட்டியுள்ளார். ஆனால் மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் இருந்து தீபாவளி கொண்டாட வந்த சிவக்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்ய கூறியுள்ளார். அவர் திட்டமிட்டபடியே கொலையும் அரங்கேறியுள்ளது.
இதில் அதிர்ச்சி தரும் மற்றொரு தகவல் நமக்கு தனிப்படை போலீஸ் மூலம் கிடைத்தது. என்னவென்றால், காளீஸ்வரியின் கள்ளக்காதலை அறிந்து முதலில் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், இவளை இப்படியே விட்டுவைத்தால் சமுதாயத்தில் தனக்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டுவிடும், எனவே தக்க சமயம் பார்த்து காளீஸ்வரியை போட்டுத்தள்ள நினைத்திருந்தார். ஆனால் முந்திக் கொண்ட காளீஸ்வரி சற்றும் சலனமின்றி கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இன்று உள்ளே சென்ற காளீஸ்வரியால் தவிப்பது சிவக்குமார் மூலம் பெற்றெடுத்த 2 வயது குழந்தைதான்.
- ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளவில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் புகாராளிக்கப்பட்டது.
- ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் வேளானேரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலி (வயது 55). இவரது குடும்பத்தினர் கடந்த பல வருடங்களாக பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவரை கட்டி தெருவை மறைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களை சங்கிலியும், அவரது குடும்பத்தினரும் நாள்தோறும் ஆபாசமாகவும் மிகவும் தரக்குறைவாக பேசி வருவதாகவும் புகார் எழுந்தது. இதனால் அந்த பாதையை கடந்து தங்களது வீடுகளுக்கு சென்று வருவதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தனிப்பட்ட ஒரு குடும்பத்தினர் பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ளது குறித்து வேளானேரி ஊராட்சி மன்றத்தலைவரான போதும்பொண்ணு முனியாண்டியிடம் அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் போதும்பெண்ணு, இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய பி.டி.ஓ., திருச்சுழி தாசில்தார் ஆகியோரிடம் புகாரளித்தார். அந்த பகுதியை அளந்து ஆக்கிரமிப்பு இருந்தால் பாரபட்சமின்றி அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றிய நிலையில் அளவீடுகள் செய்வதற்கான கட்டணமும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செலுத்தப்பட்டது. இதனால் சங்கிலி குடும்பத்தினருக்கும், ஊராட்சி மன்றத்தலைவர் போதும்பொண்ணுவுக்கும் இடையே பகை மூண்டது. இதற்கிடையில் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 10 அடி பொதுப்பாதையை மறைத்து சங்கிலி குடும்பத்தினர் காம்பவுண்டு சுவர் கட்டியது உறுதியானது. அந்த காம்பவுண்டு சுவரை அகற்ற வருவாய்த்துறையினர் தயாராகினர்.
இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அங்கு சென்றபோது கடும் எதிர்ப்பு தெரிவித்த சங்கிலி குடும்பத்தினர் திடீரென தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த சங்கிலி குடும்பத்தினரை போலீசார் எச்சரித்தனர். அதன் பிறகு ஓரிரு நாட்களில் தாங்களாகவே ஆக்கிரமிப்பை எடுத்துக்கொள்வதாக சங்கிலி குடும்பத்தினர் கேட்டு கொண்டதன் பேரில் அரசு அதிகாரிகள் சில நாட்கள் அவகாசம் அளித்தனர்.
அதற்கு பிறகும் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளவில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் புகாராளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சங்கிலி குடும்பத்தினர் இதற்கெல்லாம் ஊராட்சி மன்றத் தலைவர் போதும்பொண்ணுதான் காரணம் என்று கூறி பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசி வந்தனர்.
கடந்த மாதம் 18-ந்தேதி மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சியும் தள்ளிப்போனது. இதனால் காம்பவுண்டு சுவரை கடந்து செல்லும் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் சங்கிலி குடும்பத்தினர் பொதுமக்கள் நடந்து செல்லும் பொதுப்பாதையை மண் கொண்டு வழி மறித்து அடைத்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்ட ஊராட்சி மன்றத்தலைவர் போதும் பொண்ணுவை வெட்ட அரிவாளுடன் சங்கிலி ஆவேசமாக வந்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த போதும்பொண்ணு தனது கணவரான முனியாண்டியுடன் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். தனது உயிருக்கு பாதுகாப்பு கோரியதுடன் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சங்கிலி மற்றும் அவரை தூண்டிவிட்ட சங்கிலியின் மனைவியான ஜோதிலட்சுமி ஆகியோர் மீதும் புகார் அளித்தார்.
அத்துடன் ஆக்கிரமித்து கட்டியுள்ள காம்பவுண்டு சுவரால் உயிர் பலி போன்ற பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்விரைவில் அந்த சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
- சந்தேகத்தின் அடிப்படையில் கொலையுண்ட சிவக்குமாரின் 2-வது மனைவி காளீஸ்வரியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
- பணத்தை திரும்ப வாங்குவதில் சிவக்குமாருக்கும், ஐயப்பனுக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே குருசாமிராஜா என்பவர் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அந்த கடையை குருசாமி ராஜா இறந்ததையடுத்து அவரது மகன் சிவக்குமார் (வயது 43) கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி தந்தையின் நினைவு நாளையொட்டி, ராஜபாளையம் சஞ்சீவி மலைக்கு பின்புறம் இ.எஸ்.ஐ. காலனி பகுதியில் உள்ள தனது தந்தையின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கு அஞ்சலி செலுத்த சிவக்குமார் தனது இரண்டாவது மனைவி காளீஸ்வரி (23), மகன் குருசரனுடன் (2) ஆகியோருடன் சென்றிருந்தார்.
அப்போது அங்கு 4 பேர் மது அருந்திக் கொண்டிந்தனர். அவர்களை இங்கு மது அருந்தக்கூடாது என சிவக்குமார் கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் அந்த 4 பேரும் சேர்ந்து சிவக்குமாரை அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். கொலை செய்யப்பட்ட சிவக்குமாருக்கு முதல் திருமணம் செய்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்ற சிவக்குமார் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஸ்வீட் கடைக்கு வேலைக்கு வந்த காளீஸ்வரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே சந்தேகத்தின் அடிப்படையில் கொலையுண்ட சிவக்குமாரின் 2-வது மனைவி காளீஸ்வரியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. சிவக்குமாருக்கு சொந்தமான வீடு சுப்பாராஜா மடம் தெருவில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் யோகா மாஸ்டர் ஐயப்பன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அப்போது அவருக்கும், சிவக்குமாரின் மனைவி காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதேபோல் சிவக்குமாரிடமும் மிகவும் நட்பாக பழகிய ஐயப்பன் தொழில் தேவைக்காக ரூ.நான்கரை லட்சம் பணத்தை கொடுத்து இருந்தார். அந்த பணத்தை திரும்ப வாங்குவதில் சிவக்குமாருக்கும், ஐயப்பனுக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில்தான் சிவக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே கள்ளக்காதல் பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை நடந்ததா? என்று விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே வெளியூரில் பதுங்கியிருந்த கொலையாளிகளான ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி, விக்னேஸ்வரன் மற்றும் ஐயப்பனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும். இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தீபாவளிக்கு மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர்கள் 4 பேரும் மாலையில் ஆலைக்கு அருகிலேயே மது அருந்த சென்றனர்.
- மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் சுந்தரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகேயுள்ள வெற்றிலையூரணி அரசரடி தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அதே ஆலையில் விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். நண்பர்களான 4 பேரும் பெரும்பாலான நேரங்களில் பணி முடிந்ததும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
தீபாவளிக்கு மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர்கள் 4 பேரும் மாலையில் ஆலைக்கு அருகிலேயே மது அருந்த சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் சுந்தரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் மற்ற மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுந்தரை மீட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கொலையுண்ட சுந்தரின் தாய் வெள்ளத்தாய் (70) கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மதன்குமார், சரவணக்குமாரை கைது செய்த போலீசார் தலைமறைவான நாகேந்திரனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தான் சுந்தர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- விருதுநகரில் 2-வது புத்தக திருவிழா வருகிற 16-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது.
- காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 16-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர். மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த புத்தக திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி கள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவு கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.மேலும் புத்தக திருவிழா நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர் களுக்கான கலை நிகழ்ச்சிகளும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மாலையில் தலைசிறந்த ஆளுமைகள் கலந்து கொள்ளும் சிறப்புரைகள், பட்டிமன்றம், இலக்கிய அரங்கு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
- விருதுநகரில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
விருதுநகர்
விருதுநகரில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயசீலன் ெதாடங்கி வைத்தார்.
பேரணியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்தல், குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதி செய்தல், அனைத்து தளங்களிலும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அள விலான வன்முறை, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், பெண் சிசு கொலை, பாலின பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப் பட்டது.
இந்த பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா, குழந்தைகள் நலக்குழு தலைவர் கெங்கா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் சதீஸ்குமார், துணை தொழிலாளர் ஆய்வாளர் சதாசிவம், மனித வர்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் அருகே சிற்பக்கூட ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி(வயது58). அங்குள்ள சிற்பக்கூடம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் சிற்பக்கூடத்தில் பணியில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.
இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கார் ஷெட்டில் உள்ள வாட்ச்மேன் அறையில் தூக்கில் தொங்கியபடி இருப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மனைவி, உறவினர்களுடன் அங்கு சென்று அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பாண்டியன் நகர், கே.டி.கே. தங்கமணி காலனியை சேர்ந்தவர் ராமர்(வயது50). இவர் தனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் ஏற்படுவதாக மனைவியிடம் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ஹரி முனீஸ்வரன், பாண்டியன் நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் நேருவின் 135-வது பிறந்த நாள் விழா நடந்தது.
- என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் 135-வது பிறந்த நாள் விழாவை யொட்டி அவரது சிலைக்கு பராமரிப்பு குழு சார்பில் கொண்டாடப்பட்டது. நேரு சிலைக்கு பராமரிப்பு குழுவின் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் நாகராஜன், வருவாய் அலுவலர் முத்துசெல்வம், அனைத்துமகளிர் காவல் ஆய் வாளர் மாரியம்மாள், போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் கார்த்திகேயன், என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி உதவி தலை மையாசிரியர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். இந்த விழாவில் சிலை பராமரிப்புக் குழுவை சேர்ந்த ரகு, வாசுதேவராஜா, என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் ராஜா, என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை உறுப்பினர் ராம்விஷ்ணு ராஜா, ராம் வெங்கட்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறி னார். நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினவிழாவில் என்.ஏ. ராமச்சந்திர ராஜா குருகுலத் தொடக்கப் பள்ளி, முருகன் நடுநிலைப்பள்ளி, என்.ஏ.பாப்புராஜா நடுநிலைப்பள்ளி, என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.






