சங்கரய்யா மறைவுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

சங்கரய்யா மறைவுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மவுன ஊர்வலத்துக்கு தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார்.
சங்கரய்யா மறைவுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
Published on

சிவகாசி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவிற்கு சிவகாசியில் பல்வேறு கட்சி சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி மவுன ஊர்வலம் நடந்தது. காமராஜர் சிலையில் இருந்து சிவன் கோவில் முன்பு வரை நடந்த ஊர்வலத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். மவுன ஊர்வலத்துக்கு தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் தி.மு.க. சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபிக்கண்ணன், மாநகர பகுதி செயலாளர்கள் காளிராஜன், கருணாநிதிப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவா, பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா, சமுத்திரம், பா.ஜ.க. மாநகர தலைவர் பாட்டாகுளம் பழனிச்சாமி, தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநகர கவுன்சிலர் ராஜேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் செல்வின் யோசுதாஸ், பைக்பாண்டி, பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com