என் மலர்
விருதுநகர்
விருதுநகர் அருகே இளம்பெண், தொழிலாளி மாயமானார்கள்.
விருதுநகர்
ராஜபாளையம் அருகே உள்ள மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் பாப்பா. இவரதுமகள் காவியச்செல்வி (வயது 22). பட்டதாரியான இவர் திருப்பூரில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று ஊருக்கு வந்த காவியச்செல்வி திடீரென மாயமானார். பலஇடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை
இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
சாத்தூர் சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் திடீரென மாயமானார். பல இடங் களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாகா கமிட்டி குழு விசாரணை நடத்தி வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பக்டராக முத்துபாண்டியன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர்பணியில் இருந்தபோது பெண்போலீசாருக்கு பாலியல்தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் முத்து பாண்டியனை காத்திருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட்டார். பெண்ஏட்டு மீதான பாலியல் புகார் குறித்து விசாகாகமிட்டி தலைவர் அர்ச்சனா நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்.
அப்போது இன்ஸ்பெக்டர் முத்துபாண்டியன், பாதிக்கப்பட்ட பெண்போலீஸ் ஏட்டு ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர். அதன் அறிக்கை விரைவில் டி.ஐ.ஜி.யிடம் வழங்கப்படும் என தெரிகிறது.
விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டனர்
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பால் பாக்கியலட்சுமி. இவரது மகள் காவியா (வயது 18). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலா மாண்டு பி.காம் படித்து வந்தார். கடந்த சில மாதங் களாக இவருக்கு தொடர் வயிற்றுவலி இருந்தது. மருத்துவர்களிடம் காண் பித்தும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த காவியா விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார் அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் அழகுவேல். இவரது மனைவி புவனேஸ்வரி (27).
கடந்த சில மாதங்களாக அழகுவேல் நந்தினி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனை புவனேஸ்வரி கண்டித்தார். ஆனால் அழகுவேல் அதனை கேட்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த புவனேஸ்வரி சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக அழகு வேல், நந்தினி ஆகிய 2 பேர் மீது பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமாவாசை, பிரதோசத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வத்ராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதந் தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு 4நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 30-ந்தேதி அமாவாசையை முன் னிட்டு பக்தர்கள் நாளை மறுநாள் (28-ந் தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட் டுள்ளது. சித்திரைமாத அமாவாசைதினம் என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக் குட்பட்ட குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் மலையேற அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன.
சாத்தூர் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகேஉள்ள கோவில் செல்லையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜன், ஜவுளி வியாபாரி.
இவரதுமனைவி முத்துமாரி(வயது31). இவர்களுக்கு 9வயதில் பெண்குழந்தையும் 8வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் வீட்டில் இருந்த முத்துமாரி திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களிலும் உறவினர்கள் தேடினர்.
ஆனால் முத்துமாரி பற்றி எந்ததகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை பழைய ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள கிணற்றில் பெண்உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஏழாயிரம்பண்ணை போலீசார் சம்பவஇடத்திற்கு வந்தனர். பின்னர் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த பெண்உடலை மீட்டனர்.
விசாரணையில் பிணமாக மிதந்தது முத்துமாரி என தெரியவந்தது. உடல் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது கணவர் விஜயராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரி உயிரிழந்த சம்பவத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே பட்டதாரி பெண் மாயமானார்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள டி.தொட்டியங்குளத்தை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகள் ஜெயமீனா(20). எம்.எஸ்.சி. படித்துள்ள இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் இ.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் கணேசன் இவரதுமகள் கல்பனா (20). இவர்அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பலஇடங்களில் தேடியும் பலனில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்குபோலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடிவருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் திரவ மிட்டாய்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பான உணவுபொருட்கள் நுகர்வோரை சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஊசிபோடும் சிரிஞ்சில் திரவ சாக்லேட் மிட்டாயை நிரப்பி விற்பதாக பத்திரிக்கைகள் மூலம் அறியப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள சந்தேகத்திற்கிடமான கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது சிவகாசி பகுதியில் ஊசிபோடும் சிரிஞ்சில் நிரப்பப்பட்ட சாக்லேட் கண்டறியப்பட்டு உணவு மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோன்று சிறுவயதிலேயே புகை பிடித்தலை மனதில் விதைக்கும் வகையில் சிறுவர்களை கவருவதற்கு சிகரெட் வடிவில் மிட்டாய்கள் விற்கப்படுவது பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் கடைகளின்மீது வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் எந்தவொரு வணிகராவது ஊசிபோடும் சிரிஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்றாலோ அல்லது சிகரெட் வடிவ மிட்டாய் விற்றாலோ அவர்கள்மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
பொதுமக்கள் இந்தமாதிரியான வித்தியாசமான வகையில் சாக்லேட் அல்லது மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப் பட்டால் 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது 04562 -225255 என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் புகார் மீது அலட்சியம் காட்டி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி பொறியாளர் மணி. இவர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்காமல் தாமதப் படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இதேபோல் உதவியாளர் பரந்தாமன், பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பான புகார்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விருதுநகர் நகராட்சி கமிஷனர் செய்யது முஸ்தபா விசாரணை நடத்தி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் நகராட்சி இயக்குநருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மண்டல இயக்குநர் விஜயலட்சுமி இருவர் மீதான புகார்தொடர்பாக விசாரித்து நகராட்சி பொறியாளர் மணி, உதவியாளர் பரந்தாமன் ஆகியோரை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து காத்திருப்பு பட்டியலில்வைக்க உத்தரவிட்டார்.
விருதுநகரில் வக்கீல் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையை சேர்ந்தவர் வக்கீல் வீராசாமி (வயது68). இவரது அலுவலகம் பழைய பஸ்நிலையப்பகுதியில் உள்ளது.
இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த வீராசாமி யாரும் இல்லாதநேரத்தில் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகரில் மூத்த வழக்கறிஞரான வீராசாமி 1991ம் ஆண்டு ஜனதாதளம், த.மா.கா. சார்பிலும் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துகாப்பீடு மோசடி தொடர்பாக வக்கீல் வீராசாமிக்கு தொடர்பு இருப்பதாக கடந்த சிலவாரங்களாக தவறான தகவல் பரவியது. இதனால் அவர்விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் வீராசாமி கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன் விரோதம் காரணமாக போலீஸ்காரரை தாக்கி கொல்ல முயற்சி செய்த 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அணைக்கரைபட்டியைச் சேர்ந்தவர் செல்லையா ராஜா. இவர் சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முனீஸ்வரன், முனியாண்டி, பொன் இருளப்பன் ஆகியோருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று செல்லையா ராஜா மோட்டார்சைக்கிளில சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த முனீஸ்வரன், முனியாண்டி, பொன் இருளப்பன் மற்றும் முனீஸ், இளையபாரதி ஆகியோர் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக செல்லையா ராஜா அம்மாபட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மேற்கண்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த செல்லையா ராஜா விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகை மூட்டத்தில் சிக்கி ஜோதிடர் பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சப்பூ தெருவில் குடியிருப்பவர் சரவணன் (வயது 33). ஜோதிட நிலையம் நடத்தி வந்துள்ளார். சரவணனுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள் ளனர்.
கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சரவணனுக்கும், அவ ரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது மனைவி தனது சொந்த ஊரான கேரள மாநிலத்துக்கு சென்றுவிட்டதாகவும் தெரி கிறது.
சரவணன் மட்டும் ஜோதி டம் பார்க்கும் இடத்திலேயே தங்கி வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதில் இருந்து சரவணன் குடிபோதைக்கு அடிமையாகி விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் உள்ளே இருந்து புகை வரு வதைக்கண்டு வீட்டின் உரிமையாளர் கணேசன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைத்தனர். வீட்டி னுள் மயங்கிக் கிடந்த சரவ ணனை மீட்டு ஸ்ரீவில்லி புத்தூர் அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் கள், சரவணன் இறந்து விட் டதாக கூறினர்.
இதுகுறித்து சரவணனின் தம்பி மனோஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். சிகரெட் நெருப்பால் வீட்டில் தீ பிடித்ததும், அதில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி சரவணன் இறந்ததும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கத்திமுனையில் மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 61). கூலி தொழிலாளி யான இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அல்லம் பட்டியை சேர்ந்த சோலை ராஜ் (26), பாலமுருகன் (43), சுகன்ராஜ் (23), மைக்கேல் உள்பட 5 பேர் வந்தனர். அவர்கள் பழனியப்பனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1000 பணத்தை பறித்தனர்.
இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பழனியப்பன் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சோலைராஜ் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள் மற்றும் ரூ.1000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.






