என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • நிகழ்ச்சி முடிந்த பின் கலாவதி என்ற பெண் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்தித்து தனது தாயார் சகுந்தாவிற்கு முதியோர் உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
    • மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் விருதுநகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை, அவர் வழங்கிய மனுவால் தலையில் தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 9-ந் தேதி நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்த பின் கலாவதி (வயது 55) என்ற பெண் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்தித்து தனது தாயார் சகுந்தாவிற்கு முதியோர் உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    அப்போது கலாவதி கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று கூறினார். உடனே அமைச்சர் அந்த பெண்ணின் தலையை லேசாக தட்டி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்த செயல் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கலாவதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 20 வருடங்களுக்கு மேலாக நன்கு அறிமுகமானவர். தொகுதியில் எந்த குறைகள் இருந்தாலும் அவரிடம் நிவர்த்தி செய்யுமாறு கேட்போம். அந்த உரிமையில் தான் அன்று ஆடு வழங்கும் நிகழ்ச்சியில் மனு கொடுத்து எனது தாயாருக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்க ஆவண செய்யுமாறு கேட்டேன். அப்போது அமைச்சர் செல்லமாக தலையில் தட்டி தொகுதி மக்களாகிய உங்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறேன் என தெரிவித்தாக கூறினார்.

    இதற்கிடையில் கலாவதியின் தாயார் சகுந்தாவிற்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மீனாட்சி-சொக்கநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை 4 ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காைல, மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று காலை விமர்சியாக நடந்தது.

    மாலையில் மணக்கோலத்தில் சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து வாத்தியங்கள் முழங்க, தேரோட்டம் நடந்தது. இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் சுந்தரலெட்சுமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவபிரகாசம், முன்னாள் யூனியன் சேர்மன் சுப்பாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை 4 ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

    • மதுரை-விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது.
    • விருதுநகர் மாவட்டத்தில் 11 காலியாக இருந்த பதவிகளுக்கு 28 வாக்குச்சாடி மையங்களில் தேர்தல் நடந்தது.

    விருதுநகர்

    மதுரை-விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 11 காலியாக இருந்த பதவிகளுக்கு 28 வாக்குச்சாடி மையங்களில் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 9 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி விபரம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி விருதுநகர் யூனியனுக்கு உட்பட்ட அழகாபுரி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 713 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் அழகுத்தாய் 557 வாக்குகளும், முனீஸ்வரி 127 வாக்குகளும் பெற்றனர். 29 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் 430 வாக்குகள் வித்தியாசத்தில் அழகுத்தாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இதேபோல் வலையப்பட்டி பஞ்சாயத்து தேர்த லில் 729 வாக்குகள் பதிவாகின. இதில் மீனாட்சி 410 வாக்குகளும், முத்து ப்பாண்டி 310 வாக்குகளும் பெற்றனர். 9 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 100 வாக்குகள் வித்தியாசத்தில் மீனாட்சி வெற்றி பெற்றார்.

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமரம் பஞ்சாயத்து 3-வது வார்டு இடைத்தேர்தலில் 129 வாக்குகள் பதிவாகின. இதில் சுரேஷ்குமார் 68 வழக்குகளும், பிருத்யூமன் 51 வாக்குகளும் பெற்ற னர். 10 வாக்குகள் செல்லாத வையாக அறிவிக்கப்பட்டது. 17 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ்குமார் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசங்கர நாராயணன் அறிவித்தார். டி.எஸ்.பி. சரோஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • ராஜபாளையத்தில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்படம் திறக்கப்பட்டது.
    • மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-மதுரைரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே சிவகுலத்தோர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்பட திறப்பு விழா நடந்தது.

    மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுகுநாதன் முன்னிலை வகித்தனர்.மாநில மகளிரணி தலைவி கலையரசி வரவேற்றார்.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்டமகளிரணி தலைவி தமிழ்செல்வி, நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி, வனராஜ், முனியசாமி,இளைஞரணி முனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

    • அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.70.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • அமைச்சர்கள் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினவிழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் ரூ.1.30 கோடி அளவில் 6 துணை சுகாதார மையங்களும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் ரூ.2.78 கோடி அளவில் 12 துணை சுகாதார மையங்களும், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் துறை மூலம் ரூ.31 லட்சத்தில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளான்டையும் என மொத்தம் ரூ.4.39 கோடி மதிப்பிலான கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது:-

    தமிழகத்தில் முதல்முறையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோடு, அருப்புக்கோட்டை மற்றும் ராஜபாளையம் என 2 அரசு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்துவதற்கு இந்த ஆண்டு ரூ.70.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது மட்டுமல்லாமல், நிதிநிலை அறிக்கையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு ரூ.2.33 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கும், மல்லாங்கிணறு, எம்.புதுப்பட்டி, குன்னூர், தாயில்பட்டி, பந்தல்குடி மற்றும் நரிக்குடி ஆகிய பகுதிகளில் ரூ.400.82 கோடி மதிப்பில் வட்டார அளவிலான பொது சுகாதார மையங்கள் அமைப்பதற்கும், வாடகை கட்டிடங்களில் இயங்கும் 7 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.2.27 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.18.19 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டப்பணிகள் விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 60 சதவிகிதம் பேர் முழுமையாக பரிசோ திக்கப்பட்டுள்ளார்கள். 79 லட்சம் பேருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. மிக விரைவில் முதல்வரின் லட்சியமாக தமிழகத்தில் ஏழை, எளியோர் ஒரு கோடி பேருக்கு மருந்து பெட்டகம் 2 மாதங்களில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    விழாவில், மருத்துவக்கல்வி இயக்ககத்தின் இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், குடும்பநலத்துறை இயக்குநர் ஹரிசுந்திரி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் சுமதி ராஜசேகரன்(விருதுநகர்), முத்துலட்சுமி விவேகன்ராஜ்(சிவகாசி), அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தங்கமாயாள் அந்த கோவிலுக்கு சென்றார். அங்கு பூசாரி பழனிகுமார் என்பவரிடம் அருள்வாக்கு கேட்டார்.
    • நகையை பெற்று கொண்ட அவர் பின்னர் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பென்னிங்டன் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தங்கமாயா (வயது 42). கடந்த சில மாதங்களாக பாலமுருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனால் காய்கறி வியாபாரத்திற்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் அருகில் உள்ள ஒரு கோவில் பூசாரியிடம் அருள் வாக்கு கேட்டால் பலிக்கும் என தங்கமாயாளிடம் அப்பகுதியினர் தெரிவித்தனர். இதை நம்பி தங்கமாயாள் அந்த கோவிலுக்கு சென்றார். அங்கு பூசாரி பழனிகுமார் என்பவரிடம் அருள்வாக்கு கேட்டார்.

    அப்போது உங்களின் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது. அதை நிவர்த்தி செய்ய பூஜை செய்ய வேண்டும். எனவே உங்கள் வீட்டில் உள்ள நகையை பூஜையில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய தங்கமாயாள் தனது வீட்டில் இருந்த 26 பவுன் 6 கிராம் நகையை பழனிகுமாரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

    நகையை பெற்று கொண்ட அவர் பின்னர் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். இதற்கு பழனிகுமாரின் மனைவி ரம்யாவும் உடந்தையாக இருந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கமாயாள் நகை மோசடி குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவின்படி பழனிகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    நகை மோசடி தொடர்பாக பழனிகுமார், அவரது மனைவி ரம்யாவிடம் விசாரணை நடத்திய போது தங்கமாயாளை ஏமாற்றியது போல், அதே பகுதியை சேர்ந்த பலரை ஏமாற்றி இந்த தம்பதியினர் 60 பவுன் நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது.
    • பல்வேறு துறையைச் சேர்ந்த 52 மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.

    பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

    அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்த வேண்டும். தகுதி மற்றும் திறமையால் பணி நியமனம் பெற முயற்சிக்க வேண்டும் என்றார்.

    சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் மங்களா பத்மநாபன் நேர்க்காணலைச் சந்திக்கும் முன்பு மாணவர்களிடையே நிறுவனம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பணி வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

    இந்த நிறுவனத்தின் வளாகத் தேர்வில் பல்வேறு துறையைச் சேர்ந்த 52 மாணவர்கள் பங்கேற்றனர்.

    பணி அமர்வு மைய ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமணக்குமார், ராஜீவ் காந்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்துத் துறைச் சார்ந்த பணியமர்வு மைய பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு நல்கினர். ஜானகிராமன் நன்றி கூறினார்.

    • விருதுநகர் மாவடடத்தில் கடலை எண்ணை-வத்தல் விலை உயர்ந்துள்ளது.
    • பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11,500 முதல் ரூ.11,900 வரை விற்பனையானது.

    விருதுநகர்

    விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.8,300 முதல் ரூ.9,500 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,200 முதல் ரூ.11,200 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.8,100 முதல் ரூ.9,600 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11,500 முதல் ரூ.11,900 வரையிலும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8,500 வரையிலும் விற்பனையானது.

    துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.10,700 முதல் ரூ.11,600 வரையிலும் விற்பனையானது. மல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ.5,200 முதல் ரூ. 5,300 வரையிலும், மல்லி நாடுரகம் ரூ.4,900 முதல் ரூ.5,200 வரை விற்பனையானது.

    முண்டுவத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.2 ஆயிரம் உயர்ந்து ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும், புது வத்தல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.19 வரையும் விற்பனையானது. கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2,900 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.4,868 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.20 விலை குறைந்து ரூ. 2,020 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது.

    நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4 ஆயிரம் ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.3,820 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.4,200 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

    பொரிகடலை விலை ரூ.3,750 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4 ஆயிரம் ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,110 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,020 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1,180 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.910 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.8,100 ஆகவும் விற்பனை ஆனது. பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும் விற்பனை ஆனது.

    மசூர் பருப்பு ரூ.10,800 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பி ரகம் 50 கிலோ ரூ. 21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆயிரம் ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா ஏ ரகம் ரூ.9,800 ஆயிரமாகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரமாகவும் விற்பனையானது.

    தற்போது கடலை எண்ணெய் மற்றும் வத்தல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராஜபாளையத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
    • முன்னாள் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தின் 56-வது பதவி ஏற்பு விழா ரோட்டரி ஹாலில் நடந்தது. வைமா திருப்பதிசெல்வன் தலைவராகவும், பார்த்தசாரதி செயலாளராகவும், பதவியேற்றனர். முன்னாள் தலைவர் ராதா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மாவட்ட ஆளுநர் முத்து சிறப்பு விருந்தினராகவும், ஷாஜகான் கவுரவ விருந்தினராகவும், ராஜுக்கள் கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறைத் தலைவர் சுரேஷ் தளியத் முக்கிய விருந்தினராகவும் கலந்து கொண்டனர். துணை ஆளுநர்

    குமரேசன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் துணிப்பை வழங்கி ரோட்டரி சங்கத்தின் 4 வழிச் சோதனை சன்பேக் அட்டை வழங்கப்பட்டது. நலிவடைந்த முதியோருக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

    • சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீ கப்புகள், சாதாரண பிளாட்பார கடைகள் முதல் பெரிய கடைகள் மற்றும் டீக்கடைகள், உணவகங்களில் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது.

    ஜூன் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளவில்லை. பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீ கப்புகளை பயன்படுத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

    பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீ கப்புகள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய உடல் நல குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மாநகராட்சி மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சிவகாசி அருகே காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • டெங்கு காய்ச்சல் பரவும் விதம் மற்றும் கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மத்திய சேனை கிராமத்தில் உள்ள மெப்கோ பொறியியல் கல்லூரியில் டெங்கு மற்றும் காசநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.

    இதில் பேராசிரியர்களுக்கு காசநோய் உள்ளதா என்று 12 பேரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சல் பரவும் விதம் மற்றும் கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் எடுத்துக்கூறினர்.

    காசநோய் நலகல்வியாளர் சந்திரசேகர், காசநோய் ஒருங்கிணைப்பாளர் டேனியல், வீரபாண்டி மற்றும் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×