என் மலர்
விருதுநகர்
- 2-வது திருமணம் செய்த வாலிபர்- பெண்ணுக்கு சரமாரி அடி-உதை
- ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ஜோதி புகார் செய்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மிஷன் கோவில் சர்ச் தெருவை சேர்ந்தவர் அந்தோணி (வயது 47). இவருக்கு மனைவியும், கல்லூரியில் படிக்கும் ஒரு மகளும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்.
இவரது வீட்டு அருகில் ஜோதி (37) என்ற பெண் வசித்து வருகிறார். டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்த இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய பண பலன்கள் ரூ.10 லட்சம் வரை ஜோதிக்கு கிடைத்துள்ளது.
ஜோதிக்கு 11-ம் வகுப்பு மற்றும் 9ம்- வகுப்பு படிக்கும் இரு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்ததால் கிடைத்த பணத்தை குழந்தைகளின் வங்கி கணக்கில் டொபாசிட் செய்ய ஜோதி மறுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அந்தோ ணிக்கும், ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் இர வோடு இரவாக வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஊருக்கு வந்த அந்தோணி 2-வது மனைவி யுடன் குடி த்தனம் நடத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஜோதியின் சகோதரன், சகோதரிகள் மற்றும் மகன்கள் வீடு புகுந்து ஜோதியை தாக்கியு ள்ளனர். தடுக்க போன அந்தோணிக்கும் அடி உதை விழுந்துள்ளது.
இதுகுறித்து ராஜபாளை யம் வடக்கு காவல் நிலை யத்தில் ஜோதி புகார் செய்தார். அதன் பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தினர் செந்தில்குமார் என்ற சார்லஸ், சசிகுமார், நிவேதா, சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- இரும்பு பெண்மணி, கண்மணி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என கலெக்டர் கூறினார்.
- இந்த கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் வட்டம் கன்னிச்சேரிபுதூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும், 5 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பரிசு பெட்டகம் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனை முக்கிய நோக்கமாக கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக இரும்பு பெண்மணி மற்றும் கண்மணி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டம் மூலம், இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களான கருப்பு உலர் திராட்சை, உலர் அத்தி பழம், சிவப்பு அவல், புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து பொருட்கள் அடங்கிய இந்த தொகுப்பு மாத ஒரு முறை 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம், உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள் மற்றும் வயதிற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உணவு தொகுப்பு வழங்கும் சிறப்புத் திட்டமான கண்மணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஊட்டசத்துக்கள் சத்துக்கள் நிறைந்த சிறப்பு உணவு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து கர்ப்பணி தாய்மார்களும், இந்த கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிவகாசியில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அவசியம் அருகில் இருக்க வேண்டும்.
சிவகாசி
சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது பற்றி சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு நிலைய அலுவலர்கள் அழகுசாமி, அன்னராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ராக்கெட் வெடிக்கும் போது குடிசைப்பகுதியில் தீ விபத்து ஏற்படாத வகையில் திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்க விடக்கூடாது. பட்டாசுகளை பற்ற வைக்க நீண்ட வத்திக்குச்சி பயன்படுத்த வேண்டும். உடலில் தீ புண் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் ஊற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் எண்ணையோ அல்லது பேனாவுக்கு பயன்படுத்தக்கூடிய மையோ உபயோகப்படுத்தக்கூடாது. கம்பி மத்தாப்புகளை பயன்படுத்திய பிறகு அருகில் உள்ள வாளி தண்ணீரில் நனைக்க வேண்டும். இறுக்கமான ஆடை மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அவசியம் அருகில் இருக்க வேண்டும். உடலில் தீப்பிடித்தால் ஓட முயற்சிக்காமல் தரையில் விழுந்து உருள வேண்டும். மேலும் பட்டாசுகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது புகைபிடிப்பதோ, தீப்பொறி ஏற்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தவோ கூடாது.
மேலும் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாகனங்கள் அடங்கிய துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவோம் என்று மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
- வன விலங்குகள் வராமல் இருப்பதற்காகவும், தேங்காய் திருட்டை தடுக்கவும் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
- தினமும் இரவு மின்வேலியை இயக்கி விட்டு மறுநாள் காலை மோகன்ராஜ் ஆப் செய்வது வழக்கம்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி (வயது50). சுமை தூக்கும் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள சதானந்தபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (42). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
நண்பர்களான 2 பேரும் இன்று காலை அங்குள்ள மோகன்ராஜ் (60) என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றனர். வன விலங்குகள் வராமல் இருப்பதற்காகவும், தேங்காய் திருட்டை தடுக்கவும் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
தினமும் இரவு அதனை இயக்கி விட்டு மறுநாள் காலை மோகன்ராஜ் ஆப் செய்வது வழக்கம். ஆனால் இன்று அதை மறந்து விட்டார். இதற்கிடையில் தோட்டத்து கிணற்றில் குளிக்க வந்த முனியசாமி, சீனிவாசன் ஆகியோர் மின்வேலியை தொட்டதாக தெரிகிறது.
இதில் மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 2 பேர் இறந்து கிடப்பதை பார்த்து வச்சக்காரப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.200 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
- ரூ.100 செலுத்தி புதிய உறுப்பினராக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.32.50 கோடிக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று அனைத்து விவசாயிகளும் பயனடையலாம்.
கடன் தேவையுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1) சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ண ப்பித்து, பயிர்க்கட ன்கள் பெறலாம். கூட்டுறவு சங்கங்களில் இதுவரை பயிக்கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.100 செலுத்தி புதிய உறுப்பினராக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்து ள்ளார்.
- தனியார் பள்ளியில் படிக்கும் சிறுபான்மையினர் உதவித்தொகைக்கு விண்ணபிப்பது 31-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர்
தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு ள்ளது.
தகுதியான சிறுபான்மை யின மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தி ற்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் உதவித்தொகைக்கு விண்ண ப்பிக்கலாம்.
இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மதுரை சமூகப்பணித்துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் .
சிவகாசி
இயற்கை வளங்களை பேணிகாக்கும் விதமாகவும், மழைபெறுவதற்கும், வளாகத்தை பசுமையாக மாற்றும் விதமாக, விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட வருமானவரித்துறை, மதுரை விஷ்டு ஹெல்ப் அறக்கட்டளை மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி விழாவை தொடங்கி வைத்தார்.இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை, கூடுதல் ஆணையாளர் ரங்கராஜன், வருமானவரித்துறை ஆய்வாளர் மலையப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர். டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 400 நாட்டு மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.
இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 70 மாணவர்களும், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மதுரை சமூகப்பணித்துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் .
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், விருதுநகர், மதுரை மாவட்ட வருமானவரித்துறை அலுவலர் பணியாளர் குழு, மதுரை விஷ்டு ஹெல்ப் அறக்கட்டளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்-பேராசிரியர் துர்க்கை ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் உலகமயமாக்கல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
- 120 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''உலகமயமாக்கும் போக்கு'' என்ற தலைப்பில் சிறப்புரை நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி அறிமுக உரையாற்றினார்.
சிவகாசி சிறப்பு விருந்தினராக எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி வணிகவியல் உதவிப் பேராசிரியர் சவுந்திரபிரியா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், உலகமயமாக்கல் என்பதன் பொருள், உலகமயமாக்கும் போக்கினால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், உலகமயமாக்கும் யுக்திகள், உலகமயமாக்கும் போக்கினால் ஏற்படும் நிறை-குறைகள், இதனால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் சந்தையிடுதலில் ஏற்பட்டுள்ள புதிய யக்திகள் பற்றி எடுத்துரைத்தார்.
அனைத்து மாணவர்க ளையும் சுயதொழில் தொடங்க ஊக்கம் அளித்ததுடன் அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். சங்கீதப் பிரியா, ஸ்ரீமலர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
சூரியபிரகாஷ் வரவேற்றார். மகாராஜா நன்றிய கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபுபிராங்கிளின் செய்திருந்தார். இந்த சிறப்புரையில் 120 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
- 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.
எனவே பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நாடு முழுவதிலும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- குடோன் உரிமையாளர் வடிவேலு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சாத்தூர்:
நாடு முழுவதிலும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு தயாரிப்பவர்களை கண்டறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டியில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான குடோனில் விதிகளை மீறி பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பெரிய கொல்லப்பட்டியில் உள்ள குடோனின் இருக்கன்குடி போலீசார் தீடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமரன் (வயது 42) என்பவர் மொத்தமாக பட்டாசுகளை வாங்கி வைத்து விதிகளை மீறி பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரித்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பெரிய கொல்லப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் குடோன் உரிமையாளர் வடிவேல் மற்றும் பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரித்த குமரன் என்பவர் மீது இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விதிகளை மீறி பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரித்த குமரன் என்பவரை கைது செய்தனர். குடோன் உரிமையாளர் வடிவேலு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் விதிகளை மீறி பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிக்க பயன்படுத்திய குடோனுக்கு சீல் வைத்த போலீசார் குடோனில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.
- 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அரசு ஆஸ்பத்திரி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (32). இவர் பலரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதனை திருப்பி கொடுக்க முடியாததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மனைவி அழகேஸ்வரி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே ரோசன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊரான ரோசன்பட்டிக்கு வந்தார். அவர் நோய் குணமாகததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது சகோதரர் கோவிந்த் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி கவிதா நகரை சேர்ந்தவர் குருசாமி (38). சுமை தூக்கும் தொழிலாளி. இவரை குடும்பத்தினர் கண்டித்ததால் கடந்த சில நாட்களாக மது குடிக்காமல் மது குடிக்காமல் இருந்துள்ளார். பின்னர் அவர் மதுகுடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தன்னால் மது குடிக்காமல் இருக்க முடியவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மனைவி சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆதரவற்ற 211 குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள லைட்ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகங்களில் உள்ள 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5 வருடங்களாக தீபாவளிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடை வழங்கி வருகிறார்.
தற்போது 6-வது முறையாக அந்த குழந்தைகளை ராஜபாளையம் ஜவுளி கடைக்கு அழைத்து வந்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தனது 11,12,13-வது மாத ஊதியத்திலிருந்து ரூ.3லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வாங்கி கொடுத்து ஆசீர்வதித்தார்.
குழந்தைகளிடன் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே ஆகும். அனைவரும் சிறந்தமுறையில் கல்வி கற்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆதரவற்ற குழந்தைகளுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார். அதுபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு முதல்வரும், விருதுநகர் மாவட்ட அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும், நானும், ராஜபாளையம் தொகுதி மக்களும் உறுதுணையாக இருப்போம்.
தீபாவளி திருநாளை அனைவரையும்போல் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.நீங்கள் ஆதரவற்ற குழந்தைகள் அல்ல. அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள்* எனக்கூறி தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






