என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி புத்தாடைகள்"

    • தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய பகுதி ஆடை அலங்காரம்.
    • ஒவ்வொரு உடையும் இந்தியாவின் கலாச்சார கதையைச் சொல்கிறது.

    பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். புத்தாடை அதற்கு இன்னும் அழகை கூட்டுகிறது. இந்நிலையில் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி, "தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் போடுவது?" என்பதுதான். தீபாவளிக்கு என்ன அணியலாம் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கான பதிவுதான் இது. தீபாவளிக்கு ஆடை அணிவது என்பது வெறும் பாரம்பரிய நடைமுறை மட்டுமல்ல. மக்கள் தங்கள் தனித்துவமான பாணிகளைக் காட்ட ஒரு சிறந்த வழியாகும். அது மின்னும் புடவைகளாக இருந்தாலும் சரி, நேர்த்தியான லெஹங்காக்களாக இருந்தாலும் சரி, துடிப்பான சல்வார் கமீஸ் ஆக இருந்தாலும் சரி... ஒவ்வொரு உடையும் இந்தியாவின் கலாச்சார கதையைச் சொல்கிறது. மேலும் தீபாவளி ஆடைகள், மாறிவரும் நவீன காலத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. இதில் சில உடைகள் குறித்து பார்ப்போம். 

    புடவை

    பெண்களை மிகவும் அழகாக காட்டும் உடை என்றால், அது புடவைதான். அதிலும் நம்மை தனியாக எடுத்துக்காட்ட வேண்டுமானால், நீலம், அடர்சிவப்பு, அடர்பச்சை போன்ற பிரகாசமான நிறங்களில் புடவை கட்டலாம். ஆனால், அந்த கலர் நமக்கு ஏற்றதாக இருக்குமா என்றும் ஒருமுறை பார்த்துக்கொள்ளலாம். தற்போதையை தலைமுறையினர் பலருக்கும் புடவை கட்டத்தெரியாது. சிலருக்கு சிரமமாக இருக்கும். அதற்கான தீர்வாக தீபாவளி ட்ரெண்டிங்கில் இப்போது ரெடிமேட் சாரீஸ் வந்துள்ளன. இது பாரம்பரியம் மற்றும் ஸ்டைல் என இரண்டையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலாகவும் இருக்கணும், புடவையாகவும் இருக்கணும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு.

    அனார்கலி

    சிலருக்கு புடவை கட்டிக்கொண்டு நீண்டநேரம் இருப்பது சௌகரியத்தை அளிக்காது. அப்படி இருப்பவர்கள் பாரம்பரியம் மற்றும் சௌகரியத்தை கொண்ட அனார்கலியை தேர்வு செய்யலாம். கொஞ்சம் எடுத்துக்காட்ட வேண்டுமானால் எம்பிராய்டரி செய்யப்பட்ட அனார்கலியை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். பல வண்ணங்களில், கச்சிதமான டிசைனிங் கொண்ட இந்த ஆடைகள், தீபாவளி போன்ற விழாக்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கின்றன.


    பல வண்ணங்களில் கச்சிதமான டிசைனிங் கொண்ட ஆடைகள், தீபாவளி போன்ற விழாக்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்

    லெஹங்கா

    பட்டு, வெல்வெட், ஜார்ஜெட் போன்ற துணிகளில், ஜர்தோசி, எம்ப்ராய்டரி, சீக்வின்ஸ், முத்துக்கள் மற்றும் கற்கள் கொண்டு செய்யப்படும் நேர்த்தியான வேலைப்பாடுகள் லெஹங்காவுக்கு ஒரு ராஜரீக தோற்றத்தை அளிக்கின்றன. லெஹங்காவுடன் அணியும் துப்பட்டா, அதன் அழகை மேலும் அதிகரிக்கிறது. மெல்லிய துணியில், லெஹங்கா மற்றும் சோளியின் வேலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்பட்ட துப்பட்டா, பெண்ணுக்கு நல்ல தோற்றத்தை அளிக்கிறது. இப்போதெல்லாம் மணப்பெண்கள் கூட லெஹங்காவைத்தான் அணிகின்றனர்.   

    பலாசோ

    பலாசோவில் நிறைய ஸ்டைல் செய்யலாம். பளீர் நிறங்களில் கோல்ட் ஜரிகைகள் கொண்ட பலாசோ வாங்கி அதற்கு டாப் அல்லது குர்த்தா அணிந்து மேட்ச் செய்து அசத்தலாம்.

    சல்வார்...

    பெண்கள் சல்வார் அணிந்து சுடிதார் அணிவது இயல்பு. ஆனால் சல்வாரிலும் ஜரிகை டிசைனில் இப்போது ட்ரெண்டிங்கில் நிறைய கிடைக்கின்றன. அதற்கேற்றவாறு அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்கும். 

    லாங் கவுன் 

    முழு நீள குர்த்தா அல்லது முழு நீள கவுன் என்ற பெயரில் சுங்குடி புடவையில் கஸ்டமைஸ்டு முறையில் தைத்து அணிவது சமீபத்திய ட்ரெண்ட். அது இந்த தீபாவளிக்குப் பக்கா பொருத்தமாக இருக்கும்.

    பாவாடைச் சட்டை 

    ஜரிகை வைத்தப் பட்டுப் பாவடை அல்லது கற்கள் பதித்த டிசைனர் பட்டுப்பாவடை. இப்படி எது தேர்வு செய்தாலும் நல்ல தேர்வாக இருக்கும்.

    • ஆதரவற்ற 211 குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள லைட்ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகங்களில் உள்ள 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5 வருடங்களாக தீபாவளிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடை வழங்கி வருகிறார்.

    தற்போது 6-வது முறையாக அந்த குழந்தைகளை ராஜபாளையம் ஜவுளி கடைக்கு அழைத்து வந்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தனது 11,12,13-வது மாத ஊதியத்திலிருந்து ரூ.3லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வாங்கி கொடுத்து ஆசீர்வதித்தார்.

    குழந்தைகளிடன் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே ஆகும். அனைவரும் சிறந்தமுறையில் கல்வி கற்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆதரவற்ற குழந்தைகளுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார். அதுபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு முதல்வரும், விருதுநகர் மாவட்ட அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும், நானும், ராஜபாளையம் தொகுதி மக்களும் உறுதுணையாக இருப்போம்.

    தீபாவளி திருநாளை அனைவரையும்போல் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.நீங்கள் ஆதரவற்ற குழந்தைகள் அல்ல. அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள்* எனக்கூறி தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

    இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×