என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல பிரதிநிதிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல பிரதிநிதிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    • அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற் கொண்டார்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம மேல்மலையனூரில் அமை ந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- 

    வருகிற 17-ந் தேதி ஆடி அமாவாசை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு துறையினரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதன்படி காவல்துறையினர் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். சுகாதார துறையினர் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க கிருமிநாசினி தெளிப்ப தோடு தெருக்களில் கொட்ட ப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அவ்வப் போது அகற்ற வேண்டும்.

    மின்சார துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தீயணைப்பு துறையினர் கோவில் வளாகம் மற்றும் அக்னி குளம் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். கோவில் சார்பில் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து கோவிலுக்கு அருகில் தற்காலி கமாக அமைக்கப்படும் பஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சகாய், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம்சப்- கலெக்டர் கட்டா ரவி தேஜா, தாசில்தார் பாலசுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி,சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • உடல்நிலை சரியில்லை, சிறிது நேரம் படுத்துவிட்டு வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
    • சக பணியாளர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு செல்ல வலியுறுத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் அங்காளம்மன் கோவில் தெருவவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 39). இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர் திருவெண்ணைநல்லூர் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இரவு 7 மணியில் இருந்து காலை 9 மணிவரை வேலை செய்து வந்தார்.

    பின்னர் உடல்நிலை சரியில்லை, சிறிது நேரம் படுத்துவிட்டு வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். சக பணியாளர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு செல்ல வலியுறுத்தினர். அவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்ததாக கூறி பெட்ரோல் பங்கில் உள்ள ஓய்வறையில் படுத்துறங்கினார். நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வரவில்லை. ஊழியர்கள் அவரை எழுப்பிய போதும், அவர் எழவில்லை. தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கதிரவனை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதிரவன் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2பேைர நிறுத்தினார்கள். அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் கள் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த முத்து (34), டி. அரியலூரை சேர்ந்த சிவா என்கிற சின்ன கவுண்டர்(31) என்பது தெரிய வந்தது.அவர்கள் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து 10மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார்.
    • சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றி யத்தை சேர்ந்த பள்ளியம் பட்டு- அப்பம்பட்டு சாலை ரூ.32 லட்சத்தில் தார் சாலையாக அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி வரவேற் றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன் பொதுகுழு உறுப்பினர் மணிவண்ணன் ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பால கிருஷ்ணன் ஒன்றிய நிர்வாகி கள் வாசு, அய்யா துரை, இக்பால்சையீத் முன்னாள் கவுன்சிலர் தங்க வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதியழகன் தனது விசைப்படகை நடுக்கடலி லேயே நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு கரைக்கு வந்துள்ளார்.
    • முன்விரோதம் காரணமாக யாரேனும் விசைப்படகிற்கு தீவைத்து விட்டனரா கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 56). இவர் நேற்று வழக்கம் போல் மீன் பிடித்து விட்டு தனது விசைப்படகை நடுக்கடலி லேயே நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு கரைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் இவரது விசைப்படகு மர்மமான முறையில் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி பொதுமக்கள் மதியழகனுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மதியழகன் மற்றும் அப்பகுதி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து தங்களது சிறிய படகு மூலம் அங்கு செல்வதற்குள் விசைப்படகு முற்றிலும் எரிந்து நாசமாயியது. இந்த தீ விபத்தினால் 30 லட்சம் மதிப்பிலான விசைப்படகு மற்றும் வலை உள்ளிட்ட மீன் பிடி சாதனங்கள் எரிந்து சேதமானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர காவல் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று முன்விரோதம் காரணமாக யாரேனும் விசைப்படகிற்கு தீவைத்து விட்டனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் தி.மு.க. விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் நேரில் சென்று மதியழகனை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து விசைபடகு மர்மமான முறையில் எரிந்ததற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மரக்காணம் போலீசார் பேச்சுவார்த்ைத நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகப்படும்படியாக கையில் பையுடன்நடந்து வந்து கொண்டிருந்த ஒரு மர்ம நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 14 திருட்டு வழக்குகள் சென்னை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருவது தெரியவந்தது

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து போலீசார் வீரராஜ் கோபிநாத் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும்படியாக கையில் பையுடன்நடந்து வந்து கொண்டிருந்த ஒரு மர்ம நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்தார். இந்நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த மேகநாதன் (வயது34) என தெரிய வந்தது. இவர் பையை சோதனை செய்த போது செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமாணவர்கள் விடுதியில் செல்போன்கள் திருடியதாக தெரியவந்தது. இவரிடம் இருந்து 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேலும் இவர் மீது 14 திருட்டு வழக்குகள் சென்னை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருவது தெரியவந்தது . பின்னர் இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மரக்காணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • மிகவும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எஸ்.டி பிரிவிற்கு மாற்றி அதற்கான சாதிசான்றும் வழங்கியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு தினத்தை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மரக்காணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்தரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணைச் சேர்மன் பழனி, பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆளவந்தார், தாசில்தார் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை மற்றும் ரவி, வேளாண் துறை உதவி இயக்குனர் சரவணன், மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் உள்பட வருவாய்த்துறை தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ரூ 1.33 கோடி மதிப்பில் 317 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை தையல் எந்திரம் வேளாண் உபகரண கருவிகள் முதியோர் உதவித்தொகை மற்றும் இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர்களுக்கு எஸ்.டி பிரிவுக்கான வகுப்பு சான்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:-

    தமிழகத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை பார்த்து திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கின்றனர். எல்லோருக்கும் எல்லா உதவிகளும் கிடைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி கோடீஸ்வரர்களுக்கு நிகரான உதவி கூட சாதாரண கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொள்கையாக உள்ளது. மரக்காணம் பகுதியில் தற்போது பறவைகள் சரணாலயம், பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை, மீனவர்கள் நலம் கருதி மீன்பிடி துறைமுகம் மற்றும் மீனவர் கிராமங்களில் மீன் தளம் போன்றவை பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நரிக்குறவர் மக்கள் தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மிகவும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எஸ்.டி பிரிவிற்கு மாற்றி அதற்கான சாதிசான்றும் வழங்கியுள்ளார். இதேபோல் மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையை நவீன முறையில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பகுதியில் பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரியை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.
    • 3 மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது.

    விழுப்புரம்:

    ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஓமந்தூர் சார்பில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-விழுப்புரம் ஜி.எஸ்.டி. சாலை திண்டிவனம் கோர்ட்டு வளாகத்தின் அருகே உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் இன்று காலை 10.15 மணி முதல் 11.45 மணி வரை தனித்தனியாக 39 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணத்தை தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையை ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பா.ஜ.க. பிரமுகரும், ஓமந்தூர் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி செயலாளருமான ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். பின்னர் 39 ஜோடி மணமகன்கள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து, மணமகள்கள் பட்டு புடவையுடன் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கு முன்பாக அந்தணர்கள் யாகம் நடத்தி, பிரபல தவில் வித்வான்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் மங்கல இசையுடன் திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கும் 4 கிராம் தங்க திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    இந்த திருமண ஏற்பாடுகளை ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பா.ஜ.க. பிரமுகரும், ஓமந்தூர் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி செயலாளருமான ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேலும் கூடுதலாக 3 திருமண ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர். இங்கு நடந்த திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, பொது சிவில் சட்டம் அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம். தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது. மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. 3 மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால், தமிழக பாஜக துணை நிற்கும் என கூறினார்.

    திருமண நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சம்பத், பிரச்சார செயலாளர் விநாயக மூர்த்தி, தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாவட்ட தலைவர்கள், கலிவரதன், ராஜேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கின்ற ரகுராமன், புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் பாபு மற்றும் பா.ஜ.க. மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டிவனம் கோர்ட்டு வளாகத்தின் அருகே உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் நாளை திருமணம் நடைபெற உள்ளது.
    • 39 ஜோடிகளுக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    விழுப்புரம்:

    ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஓமந்தூர் சார்பில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் என்ற நோக்கத்துடன் ஸ்ரீ ராம் அறக்கட்டளையின் சார்பில் 39 ஜோடிகளுக்கு தலா ரூ. ஒரு லட்சம் செலவில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-விழுப்புரம் ஜி.எஸ்.டி. சாலை திண்டிவனம் கோர்ட்டு வளாகத்தின் அருகே உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் நாளை (புதன்கிழமை) காலை முதல் 39 ஜோடிகளுக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதுகுறித்து ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பா.ஜ.க. பிரமுகரும், ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி (ஓமந்தூர்) செயலாளருமான ஹரி கிருஷ்ணன் கூறியதாவது:- 39 ஜோடிகளுக்கும் அந்தந்த மணமக்கள் வீட்டாரின் இந்து வைபவ அடிப்படையில் தாலியும், மணமகளுக்கு காஞ்சிபுரம் பட்டு புடவையும், மணமகனுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை மற்றும் பட்டு துண்டும் மற்றும் ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கு முன்பாக அந்தணர்கள் யாகம் நடத்தி, பிரபல தவில் வித்வான்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் மங்கல இசையுடன் திருமணம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜீப்பின் ஆவணங்களை சரிபார்த்த போலீசார், ஜீப்பின் நம்பர் பிளேட்டில் இருந்த ஜீ என்ற ஆங்கில எழுத்தினை மறைத்தனர்.
    • சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் வரை அகற்றக்கூடாது என கூறி ஜீப்பையும், அதில் வந்தவர்களையும் அனுப்பி வைத்தனர்.

    திண்டிவனம்:

    சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு அந்த வழியாக ஜீப் ஒன்று வேகமாக வந்தது. அதனை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்தினர்.

    அந்த ஜீப்பின் நம்பர் பிளேட்டில் அரசு வாகனத்தை குறிக்கும் ஜீ என்ற ஆங்கில எழுத்தும், போலீஸ் என்றும் பதிக்கப்பட்டிருந்ததை போலீசார் பார்த்தனர்.

    ஆனால், அதிலிருந்த நபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தனர். தொடர்ந்து ஜீப்பை போலீசார் சோதனையிட்டனர். அதில் 25-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், 50-க்கும் மேற்பட்ட கத்திகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    ஜீப்பில் உள்ளவர்கள் பயங்கரவாதிகளாக இருப்பார்களோ என்று அஞ்சிய போலீசார், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, அன்னக்கொடி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் கூடுதல் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஜீப்பில் இருந்த துப்பாக்கிகளை எடுத்து பார்த்தபோது அவைகள் மரத்தால் செய்யப்பட்ட டம்மி துப்பாக்கி என்பதும், அதிலிருந்த கத்தி அட்டைகளால் செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் ஜீப்பில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் திரைப்பட சூட்டிங்கிற்கு டம்மி, துப்பாக்கி, கத்தி எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.

    அந்த ஜீப்பின் ஆவணங்களை சரிபார்த்த போலீசார், ஜீப்பின் நம்பர் பிளேட்டில் இருந்த ஜீ என்ற ஆங்கில எழுத்தினை மறைத்தனர். மேலும், போலீஸ் என்று எழுதப்பட்டிருந்ததையும் மறைத்தனர்.

    சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் வரை இதனை அகற்றக்கூடாது என கூறி ஜீப்பையும், அதில் வந்தவர்களையும் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேலாயுதம் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
    • 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 32). கூலித் தொழிலாளி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் (36) என்பவரும் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். இவர்கள் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சொக்கனந்தாங்கலை சேர்ந்த முருகன் (32) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் பலத்த காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    திண்டிவனம் - மரக்காணம் சாலையில் சொக்கனந்தாங்கல் சாலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். இவருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த பிரம்மதேசம் போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? விபத்தில் இறந்தாரா? அவர் மீது எந்த வாகனம் மோதியது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×