search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell phone thief"

    • மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன்.
    • 2 செல்போன்களையும் காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் ஏழை பெருமாள். வீரப்பன் தனது செல்போனையும் தனது மகன் செல்போனையும் வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி விட்டு காலையில் எழுந்து பார்த்த போது 2 செல்போன்களையும் காணவில்லை. இது குறித்து ஏழை பெருமாள் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் 2 செல்போனைகளையும் திண்டிவனம் ஆச்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (வயது 37 ) திருடி சென்றது தெரிய வந்தது. அவரை கைது செய்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சந்தேகப்படும்படியாக கையில் பையுடன்நடந்து வந்து கொண்டிருந்த ஒரு மர்ம நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 14 திருட்டு வழக்குகள் சென்னை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருவது தெரியவந்தது

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து போலீசார் வீரராஜ் கோபிநாத் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும்படியாக கையில் பையுடன்நடந்து வந்து கொண்டிருந்த ஒரு மர்ம நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்தார். இந்நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த மேகநாதன் (வயது34) என தெரிய வந்தது. இவர் பையை சோதனை செய்த போது செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமாணவர்கள் விடுதியில் செல்போன்கள் திருடியதாக தெரியவந்தது. இவரிடம் இருந்து 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேலும் இவர் மீது 14 திருட்டு வழக்குகள் சென்னை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருவது தெரியவந்தது . பின்னர் இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • டவுசர் மட்டும் அணிந்துவந்த கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி தப்பிச்செல்ல முயன்றார்.
    • பொதுமக்கள் கொள்ளையனை பிடித்து தர்மஅடி கொடுத்து செம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பழைய செம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி(33). ஒர்க்ஷாப் தொழிலாளி. நேற்று குடும்பத்துடன் வீட்டு மாடியில் தூங்கிகொண்டிருந்தார்.

    அப்போது டவுசர் மட்டும் அணிந்துவந்த கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி தப்பிச்செல்ல முயன்றார். இதைபார்த்ததும் வீரமணி குடும்பத்தினர் சத்தம் போட்டனர்.

    அவர்கள் சத்தம் கேட்டு ஒன்றுகூடிய பொதுமக்கள் கொள்ளையனை பிடித்து தர்மஅடி கொடுத்து செம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் ஈேராட்டை சேர்ந்த செல்வம்(25) என தெரியவந்தது.

    இவர் தனியாக திருடவந்தாரா அல்லது இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பெரியார் பஸ் நிலையத்தில் செல்போன் திருடனை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரட்டி பிடித்தார்.
    • சார்ஜ் போடப்பட்டு இருந்த செல்போனை நைசாக திருடிக் கொண்டு தப்பி ஓடினார்கள்.

    மதுரை

    தேனி மாவட்டம் கூட லூரை சேர்ந்தவர் ராஜா (வயது 29). புரோட்டா மாஸ்டர். ராஜா தனது உறவினர் விஜயகுமார் என்பவருடன் நேற்று இரவு மதுரை வந்தார். அவர்கள் பெரியார் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    ராஜா முதல் பிளாட்பாரத்தில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் சார்ஜ் போடப்பட்டு இருந்த செல்போனை நைசாக திருடிக் கொண்டு தப்பி ஓடினார்கள். அதனை கண்ட ராஜா, திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். இதனை கண்ட திடீர்நகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி திருடர்களை விரட்டிச்சென்றார்.

    அப்போது ஒருவன் தவறி கீழே விழுந்தான். அவனை லோகேஸ்வரி மடக்கி பிடித்தார். அவனிடம் இருந்து ராஜாவின் செல்போன் மீட்கப்பட்டது.

    விசாரணையில் செல்போனை திருடியவர் கேரள மாநிலம் கொட்டாளி கிராமத்தைச் சேர்ந்த ஜெனிபர் (வயது 38) என்பது தெரிய வந்தது. அவர் மதுரையில் கடந்த சில நாட்களாக தனது கூட்டாளி ஒருவருடன் தங்கி இருந்து திருட்டி ஈடுபட்டு வந்துள்ளார். தப்பி சென்ற அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்போன் திருடனை விரட்டி பிடித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பயணிகள் பாராட்டினர்.

    ×