பண்ருட்டி அருகே வீடு புகுந்து செல்போன் திருடியவர் கைது

மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன்.2 செல்போன்களையும் காணவில்லை.
பண்ருட்டி அருகே வீடு புகுந்து செல்போன் திருடியவர்  கைது
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் ஏழை பெருமாள். வீரப்பன் தனது செல்போனையும் தனது மகன் செல்போனையும் வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி விட்டு காலையில் எழுந்து பார்த்த போது 2 செல்போன்களையும் காணவில்லை. இது குறித்து ஏழை பெருமாள் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் 2 செல்போனைகளையும் திண்டிவனம் ஆச்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (வயது 37 ) திருடி சென்றது தெரிய வந்தது. அவரை கைது செய்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com