என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- அண்ணாமலை நடத்தி வைக்கிறார்
- திண்டிவனம் கோர்ட்டு வளாகத்தின் அருகே உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் நாளை திருமணம் நடைபெற உள்ளது.
- 39 ஜோடிகளுக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
விழுப்புரம்:
ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஓமந்தூர் சார்பில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் என்ற நோக்கத்துடன் ஸ்ரீ ராம் அறக்கட்டளையின் சார்பில் 39 ஜோடிகளுக்கு தலா ரூ. ஒரு லட்சம் செலவில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-விழுப்புரம் ஜி.எஸ்.டி. சாலை திண்டிவனம் கோர்ட்டு வளாகத்தின் அருகே உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் நாளை (புதன்கிழமை) காலை முதல் 39 ஜோடிகளுக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பா.ஜ.க. பிரமுகரும், ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி (ஓமந்தூர்) செயலாளருமான ஹரி கிருஷ்ணன் கூறியதாவது:- 39 ஜோடிகளுக்கும் அந்தந்த மணமக்கள் வீட்டாரின் இந்து வைபவ அடிப்படையில் தாலியும், மணமகளுக்கு காஞ்சிபுரம் பட்டு புடவையும், மணமகனுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை மற்றும் பட்டு துண்டும் மற்றும் ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கு முன்பாக அந்தணர்கள் யாகம் நடத்தி, பிரபல தவில் வித்வான்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் மங்கல இசையுடன் திருமணம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






