என் மலர்
விழுப்புரம்
- மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- 8 விரைவு ரெயில்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது.
திண்டிவனம்:
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு திண்டிவனம், விழுப்புரம் வழியாக ரெயில்கள் சென்று வருகின்றன.
இரவு திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் மீதும், தண்டவாளத்திலும் அருகே இருந்த மரம் விழுந்தது.
இதனால் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டார். மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மரம் விழுந்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களும், வட மாவட்டத்தில் இருந்து வந்த கம்பன் ,பாண்டியன் முத்துநகர், கன்னியாகுமரி , போன்ற 8 விரைவு ரெயில்களும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- கல்லூரிக்கு சென்ற ஊழியர்கள் வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர் குறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- விசாரணை முடிவில் முதியவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று இரவு சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இன்று காலை கல்லூரிக்கு சென்ற ஊழியர்கள் வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர் குறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் முதியவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
- இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பிற்படுத்தப்ப ட்டோர் மாணவர்கள் விடுதியில் நடைபெற்றது.
- 8 நபர்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் வழங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மசூதிகளில் பணிபுரியும் உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பிற்படுத்தப்ப ட்டோர் மாணவர்கள் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நல அலுவலர் முகுந்தன் வரவேற்றார்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 35 உலமா க்களுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 8 நபர்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,பேரூராட்சி கவுன்சிலர் நூர்ஜகான் பெரும்புகை ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், விடுதி காப்பாளர்கள் சங்கர், ரவி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- ஆரோவில் அருகே பிள்ளையார்சாவடி பகுதியில் பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் வேகமாக மோதியது.
- விபத்தில் பஸ் டிரைவர் உள்பட பயணிகள் அனைவரும் காயம் அடைந்தனர்.
வானூர்:
சென்னையில் இருந்து நேற்று இரவு சுமார் 20 பயணிகளுடன் கும்பகோணம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜராஜன் (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று காலை புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தது. ஆரோவில் அருகே பிள்ளையார்சாவடி பகுதியில் பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் வேகமாக மோதியது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட பயணிகள் அனைவரும் காயம் அடைந்தனர். பஸ்சின் முன்பகுதி பயங்கர சேதம் அடைந்தது. இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதனை அவரது மகன் ஜீன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நிர்வகித்து வருகின்றனர்
- காலை 11 மணியளவில் வந்து பார்த்தபோது ஷோரூமில் இருந்த கல்லா உடைக்கப்பட்டு இருந்தது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் செஞ்சி சாலையில் இயங்கி வருகிறது. இது மறைந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ஹிராசந்த் குழுமத்திற்க்கு சொந்த மானதாகும். இதனை அவரது மகன் ஜீன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நிர்வகித்து வருகின்றனர் இந்த ஷோரூமை, அங்கு பணிபுரியும் சந்தோஷ் என்பவர் நேற்று இரவு மூடி பூட்டிவிட்டு சென்றார்.இன்று காலை 11 மணியளவில் வந்து பார்த்தபோது ஷோரூமில் இருந்த கல்லா உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் கல்லாவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த பணம் ரூ.3 லட்சம் திருடு போய் இருந்தது. இது குறித்து ரோஷனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- இச்சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
- விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் வரை அனுமதி பெற்று வர வேண்டும் என கூறிவிட்டனர்.
விழுப்புரம்:
மரக்காணம் ஒன்றிய த்திற்கு உட்பட்டது வண்டி ப்பாளையம் மற்றும் ஆத்திகுப்பம் ஊராட்சிகள். இந்த பகுதியை சுற்றிலும் தேவிகுளம், நடுக்குப்பம், ஓமிப்பேர், அடசல், கோடிகப்பம், கிளாம்பாக்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இவர்கள் அனுமந்தை, புதுவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பக்கிங்காம் கால்வாய் வழியாக வண்டிப்பாளையம் ஆத்திகுப்பம் ஊராட்சி களுக்கு இடைப்பட்ட சாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலை கடந்த 10 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. இச்சாலை முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இச்சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுக்கு முன் இச்சாலையை சரி செய்யவும், பக்கிங்காம் கால்வாயில் பாலம் அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து அப்பணியை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது வனத்துறை சார்பில் இந்த சாலை உள்ள பகுதி தற்பொழுது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இப்போது இங்கு சாலை அமைக்க கூடாது என தடுத்து நிறுத்தி விட்டனர். மேலும், இங்கு சாலை அமைக்க வேண்டும் என்றால் டெல்லியில் உள்ள வனத்துறை அலுவலகம் முதல் விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் வரை அனுமதி பெற்று வர வேண்டும் என கூறிவிட்டனர். இதன் காரணமாக இச்சாலை அமைக்கும் பணி தடைபட்டது. இந்நிலையில் இந்த தார் சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறிவிட்டது. மழை பெய்தால் இந்த மண் சாலை நீரில் மூழ்கிவிடும். இதனால் இந்த சாலை அனைத்து நாட்களிலும் சேரும் சகதியுமாக இருக்கும். இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மரக்காணம் வழியாகத்தான் புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சேரும் சகதியுமாக காணப்படும் ஆத்திகுப்பம் வண்டிப்பாளையம் தார் சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
விழுப்புரம்:
செஞ்சி பகுதி விவசாயி கள், தாங்கள் அறுவடை செய்த நெல்லினை செஞ்சி ஒழுங்கு முறை விற்ப னைக் கூடத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வந்த னர். அப்போது இ.நாம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து நெல் வியாபாரி களுக்கு ஆதரவாக, எடை போடும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் நெல் மூட்டைகள் தேங்கியது. இதையடுத்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்படு வதாக அறிவிக்கப்பட்டது. இதனையறியாத விவசாயி கள் நெல் மூட்டைகளுடன் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வந்தனர். நெல் கொள்முதல் செய் யப்படாததை கண்டித்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த வாகனங்களை நடு ரோட்டில் விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து, விவ சாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை மேல்மலை யனூர் அருகேயுள்ள வளத்தி, அவலூர்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனையேற்ற விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அருகில் உள்ள மற்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சென்றனர். இந்நிலையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்றும் நெல் கொள்முதல் செய்யப்பட வில்லை. இ-நாம் திட்டத் திற்கு எதிர்ப்பு தெரி வித்து 3-வது நாளாக இன்றும் எடைபோடும் தொழி லாளர்கள் பணிக்கு வர வில்லை. இவர்களுக்கு ஆதரவாக நெல் வியாபாரிகளும் வரவில்லை. இதனால் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இது தொடர்பாக போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மற்றும் நெல் வியாபாரிகளுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரி கள் தெரிவித்தனர்.
- காசி கடந்த 18-ம்தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- காசி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
செஞ்சி வட்டம் அனந்த புரம் அருகே குளிர்சுனை பகுதியைச் சேர்ந்தவர் காசி (வயது 70). இவர் கடந்த 18-ம்தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் காணாமல்போன காசியை பல்வேறு இடங்க ளில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் காசி கிடை க்கவில்லை.
இந்நிலையில் நேற்று குளிர்சுன்ன பகுதி அருகில் உள்ள தாங்கல் ஏரியில் காசி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காசியின் அண்ணன் மகன் ஜோதி கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் இறங்கிய உறவி னர்கள் சேஷாத்திரிக்கு போன் செய்தனர்.
- இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சேஷாத்திரி (வயது 30). முடி வெட்டும் தொழிலாளி. இவர் புதுவை யில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது தாத்தா கடந்த மாதம் இறந்துவிட்டார். அவருக்கு 30-ம் நாள் வழிபாடு நேற்று நடைபெற்றது. இதற்காக இவரது உறவி னர்கள் டி.குமாரமங்க லத்திற்கு வந்திருந்தனர். வழி பாடு முடிந்து சென்னையை சேர்ந்த உறவினர்கள் நேற்று நள்ளிரவு ஊருக்கு புறப்பட்டனர். அவர்கள் சேஷாத்திரி வீட்டிலேயே செல்போனை வைத்து விட்டு சென்றனர். இதனால் விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் இறங்கிய உறவி னர்கள் சேஷாத்திரிக்கு போன் செய்தனர். செல்போ னை கொண்டு வந்து தரு மாறு கோரினர்.
இதையடுத்து இன்று அதிகாலை 4.30 செல்போனை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கி ளில் சேஷாத்திரி சென்றார். அப்போது திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பேங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான தகவலின் பேரில் திரு வெண்ணைநல்லூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேஷாத்திரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இத்தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சேஷாத்திரியின் உறவி னர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- விநாயகர் சிலையை கரைக்க இவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வீடூர் அணைக்கு சென்றார்.
- படிக்க செல்வதாக வீட்டின் மாடிக்கு இரவு 11 மணிக்கு சென்றார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி. மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அணில்குமார் (வயது 21). இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பு முடித்து விட்டு வீட்டில் உள்ளார். மேலும், போலீஸ் அதிகாரி தொடர்பான தேர்வு எழுத படித்தும் வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை கரைக்க இவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வீடூர் அணைக்கு சென்றார். அங்கிருந்து இரவு 10 மணியளவில் வீடு திரும்பினார். சாப்பிட்டுவிட்டு படிக்க செல்வதாக வீட்டின் மாடிக்கு இரவு 11 மணிக்கு சென்றார்.
நள்ளிரவு 1 மணியளவில் பக்கத்து வீட்டுக்காரர் வெளியில் வந்துள்ளார். அப்போது அணில்குமார் வீட்டின் தோட்டத்தில் உள்ள தேக்குமரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். சத்தம்போட்டு அணில்குமாரின் பெற்றோரை பக்கத்து வீட்டுக்காரர் அழைத்தார். அனைவரும் சேர்ந்து அணில்குமாரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அணில்குமார் தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வியா? அல்லது போலீஸ் ஆக முடியவில்லை என்ற ஏக்கமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
- பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்திட வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரியை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரி விக்கையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை தூர்வாரிடவும், மழைக்கா லத்திற் குள்ளாகவே ஏரிக்கு நீர் வரும் வழித்தட பகுதி களில் சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணி களை மேற்கொண்டு ஏரி யில் அதிகப்படியான நீர் நிரம்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும், ஏரியில் பெரியவர்களுக் கான நடைபாதை அமைத் திடவும், சிறியவர்கள் விளை யாடும் வகையில், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகர ணங்கள் ஏற்படுத்திட வேண்டும்.
மேலும், சுற்றுலாத்தள மாக உருவாக்கிடும் வகை யில், ஏரியில் படகுகுழாம் அமைப்பதற்கு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட் டது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், வருவாய் அலு வலர் தெய்வீகன்.சுற்று லாத்துறை அலுவலர் ஜனார்த்தனன், பொதுப் பணித்துறை உதவி பொறி யாளர் அய்யப்பன், கோலி யனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் வினோத். மற்றும் பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- விநாயகர் சிலை வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆய்வு செய்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசுக்கு அறிவுரை வழங்கினார்
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா கோலாகலமாக கொண்டா டப்பட்டது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விநாயகர் சிலை வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சா சாங் சாய் நள்ளிரவு 11 மணியளவில் சாதாரண உடையில் வந்து திண்டிவனம் கோட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசுக்கு அறிவுரை வழங்கினார்.ஊர்வலம் செல்வது குறித்தும் எப்படி விநாயகர் சிலையை நீர் நிலையங்களில் கரைப்பது குறித்தும் எடுத்துக் கூறினார்.






