என் மலர்
வேலூர்
அரக்கோணம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். ரெயில்வே ஊழியர். இவருடைய மகன் கீர்த்திவாசன் (வயது 14). 9-ம் வகுப்பு மாணவன். விநாயகர் சதுர்த்தியையொட்டி விடுமுறை என்பதால் நேற்று வீட்டில் இருந்த கீர்த்திவாசன் மாலையில் நண்பர்களுடன் சேர்ந்து பக்கத்து கிராமமான பெருமுச்சியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.
கிணற்றில் படிக்கட்டை பிடித்தபடி ஓரமாக குளித்துக் கொண்டிருந்த கீர்த்திவாசன் திடீரென நீரில் மூழ்கினார். நண்பர்கள் மீட்க முயன்றும், அவரை காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்ததும், அரக்கோணம் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாணவனை பிணமாக மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக உடல் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆம்பூர் அருகே உள்ள ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 57). இவர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
சரஸ்வதி நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த சரஸ்வதி வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்ததது.
இது குறித்து சரஸ்வதி ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை பார்வையிட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
திருத்தணியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 43). அதேபகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (40). இவர்கள் இருவரும் நேற்றிரவு பைக்கில் அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திருத்தணி சாலை எம்.ஆர்.எப். கம்பெனி அருகே வந்த போது எதிரே சென்ற மற்றோரு பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கிவீசபட்டு பலத்த காயமடைந்தனர்.
இதனை கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு ஜெகநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அனல் மின் நிலையில் 1410 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது. வழக்கமாக இந்த சமயங்களில் கிடைக்க கூடிய காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலையில் 1 மணி முதல் மாலை 1 மணி நேரம் இரவு 1 மணி நேரம் என 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்னூர், விண்ணமங்கலம், வடகரை, மாராபட்டு ஆகிய பகுதிகளில் கடந்த 3 வாரமாக பகலில் 2 மணி நேரமும் இரவில் 3 மணி நேரமும் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.
வாணியம்பாடியில் பகலில் 2 மணி நேரமும் இரவில் 1 மணி நேரமும் மின் வெட்டு ஏற்படுகிறது. ஆலங்காயம், திம்மாம்பேட்டை, அம்பலூர் பகுதிகளில் தினமும் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடுகிறது.
அரக்கோணம் பகுதியில் கடந்த 1 மாதமாக 3 மணி நேரத்திற்கும் மேல் தொடர் மின் தடை ஏற்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரமும் முறையாக வழங்கபடுவதில்லை இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வாலாஜா பகுதியில் கடந்த 2 வாராமாக 1 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, பெருந்துரைபட்டு, வாணாபுரம், அகரம்பள்ளிபட்டு சதாகுப்பம் பகுதிகளில் பகலில் 4 மணி நேரமும், இரவில் 2 மணி நேரமும் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் காலாண்டு தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அவதியடைந்துள்ளனர், பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மின் வெட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் துணை இயக்குனர் சுப்பிரமணியன் வள்ளலார் டபுள்ரோடு பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது. அந்த வீட்டிலும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த நிலையில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் தனியாக அலுவலகம் நடத்தியது தொடர்பாக துணை இயக்குனர் சுப்பிரமணியன், அலுவலக மேற்பார்வையாளர் சதாசிவம் ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. களிமண்ணால் செய்யபட்ட விநாயகர் சிலைகள் ரூ.80 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலை, குடைகள், வேர்க்கடலை, சோளம், கம்பு, வாழை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கிவிட்டது.
வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னனி சார்பில் மட்டுமே 1500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. வேலூர் மாநகரில் மட்டுமே 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன. உள்ளாட்சி, தீயணைப்பு, மின்சார வாரியம், மாசுகட்டுப்பாடு வாரியம் போலீசார் நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும்.
விநாயகர் சிலைகள் ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி அறிவிக்கபட்ட இடத்துக்கு மாலை 4 மணிக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.
விநாயகர் சிலைகளுக்கு விழா குழுவினரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதையொட்டி மாவட்டம் முழுவதுமு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. பஸ் நிலையம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட வேண்டும். என்று போலீசார் அறிவு றுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் 1300 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளன. கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைத்தவர்களுகுகு மட்டும் போலீசார் அனுமதி வழங்கினர்.
புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதியில்லை. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, பெங்களூர்,ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்தும் கிராம புறங்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பண்டிகையொட்டி விலை உயராததால் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இதனால் மண்டித்தெரு லாங்குபஜாரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று மாலை முதல் மார்க்கெட் பகுதி போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிக்கிறது.
வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் மார்க்கெட்க்கு வருபவர்கள் படாதபாடுபடுகின்றனர்.
மண்டித்தெரு, லாங்குபஜாரில் போலீசார் நிறுத்தும் வாகனங்களை ஓழுங்கு படுத்த வேண்டும். என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விலை(கிலோ ரூபாயில்) வருமாறு: தக்காளி-12, கத்திரிக்காய்-30, பீன்ஸ்-40, கேரட்-30, அவரக்காய்-30, முருங்கை-15, முள்ளங்கி-18, வெண்டைக்காய்-15, சின்னவெங்காயம்-40, பெரிய வெங்காயம்-20, வாழைக்காய் ஒன்று ரூ-3, உருளைக்கிழங்கு-20, கருணைக்கிழங்கு-30 க்கும் விற்பனையானது.
விநாகர் சதுர்த்தியொட்டி மல்லிகை பூ தவிர மற்ற பூக்கள் வரத்து அதிகமாக உள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ 600க்கு விற்பனையானது. ஜாதிமல்லி ரூ140, ரோஜா ரூ130, சாமந்தி ரூ120, கேந்தி ரூ20க்கும் விற்பனையானது.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா, அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 60), இவரது மனைவி ஜெயபத்மாவதி (50). இவர்கள் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றனர்.
சாமி கும்பிட்டு விட்டு 13-ந் தேதி திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்று கொண்டிருந்தனர்.
ரெயில் திருத்தணி அருகே சென்று கொண்டிருந்தபோது ஜெயபத்மாவதி கழுத்தில் கிடந்த நகையை மர்ம நபர் பறித்து சென்றார். இதுகுறித்து ஜெயபத்மாவதி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட மத்தியபிரதேச மாநிலம், சவுசார் தாலுகா, கைட்டிதைக்கான் கிராமத்தை சேர்ந்த உத்தம்பாட்டீல் (34) என்ற வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் உத்தம்பாட்டீல் அரக்கோணம் அருகே திருத்தணியில் ரெயிலில் வழிப்பறி செய்ததை போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் விசாரணைக்கு பின்னர் உத்தம்பாட்டீலை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வேலூர் சிறையில் இருந்த உத்தம்பாட்டீலிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அரக்கோணம் ரெயில்வே போலீசார் உத்தம்பாட்டீலை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜெயபத்மாவதியிடம் வழிப்பறி செய்ததை தெரிவித்தார். இதையடுத்து உத்தம்பாட்டீல் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் உத்தரபிரதேச மாநிலம், ஷாமிலி மாவட்டம், கான்பூர்காலன் கிராமத்திற்கு சென்று அங்கே உத்தம்பாட்டீல் பதுக்கி வைத்திருந்த உருக்கப்பட்ட 8 பவுன் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் பெரியகுளமேடு பகுதியில் கோபால் என்பவர் வாழை பழக்கடை வைத்துள்ளார். இந்தக்கடை அருகே இன்று காலையில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் கிடந்தது.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 54) கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற வேன் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி தனலட்சுமி (45). இவர் நேற்று வீரகோவில் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தனலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு, பெற்றோர் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். மாப்பிள்ளை பார்த்து, நிச்சயித்து இன்று காலை திருமணத்திற்கு தேதி குறித்தனர்.
திருமண அழைப்பிதழை அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர். இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சுப முகூர்த்த நேரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடுகளை தடபுடலாக செய்தனர்.
திருமணம் மதனஞ்சேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடக்கவிருந்தது. நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பிளஸ்-2 மாணவி மைனர் என்பதால், சைல்டு லைன் அமைப்பினருக்கு போனில் புகார் சென்றது.
இதையடுத்து, சமூக பாதுகாப்பு நலத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து இன்று காலை மதனஞ்சேரி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது, மண்டபத்தில் ஒருவர் கூட இல்லை. தோரணங்கள் கட்டப்பட்டு மணவறை தயார் நிலையில் இருந்தது. தாலி கட்டும் நேரத்தில் அதிகாரிகள் வருவதையறிந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மணமக்கள் கோஷ்டி ஒட்டு மொத்தமாக தப்பி ஓடிவிட்டனர்.
இதுதொடர்பாக, விசாரணை நடத்த திருமண கோஷ்டியை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் ஓட்டேரியில் அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் ஆதிதிராவிடர் சமுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி அருகிலேயே தங்கும் விடுதி உள்ளது.
விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அஜித், சுரேஷ், கிரண், விக்னேஷ், படையப்பா, மணிகண்டன், தங்கி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை கேலி கிண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு முதலாம்ஆண்டு மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விசாரணையில் மாணவர்கள் ராகிங் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேரையும் கல்லூரி நிர்வாகம் விடுதியில் இருந்து 12 நாட்கள் தற்காலிக நீக்கம் செய்தது. இடை நீக்கம் செய்யபட்ட 6 மாணவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் சூழ்நிலை உருவாகியுள்ளதாக விடுதி அதிகாரிகள் செய்த விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மற்ற மாணவர்களின் நலன் கருதி 6 மாணவர்களை விடுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.இதைத்தொடர்ந்து 6 மாணவர்களையும் விடுதியில் இருந்து நிரந்தமாக நீக்கம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். #tamilnews






