என் மலர்
வேலூர்
- பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது
- பார்க்கிங் வசதி குறித்து சோதனை செய்தார்
வேலூர்:
தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில், தமிழக முதல் -அமைச்சரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் பங்கேற்கிறார்.இதை யொட்டி, பள்ளி கொண்டா கந்தனேரி பகுதியில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இப்பணிகளை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார்.
அப்போது, 6 வழிச்சாலையில் இருந்து விழா மேடைக்கு முதல் - அமைச்சர் செல்லும் பாதை குறித்து ஆலோசிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சருக்கு, மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ வுமான நந்தகுமார் விரிவாக எடுத்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
இந்த முப்பெரும் விழாவில் தி.மு.க வின் பவள விழா இருப்பதும், அந்த விழா வேலுாரில் நடப்பதும்சிறப்பு. இதில், கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை பரந்து கிடக்கும் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.
இந்த ஆய்வின்போது, எம்.பி. க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், பள்ளிகொண்டா டவுன் பஞ்சாயத்து தலைவர் சுபபிரியா, ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் வெங்கடேசன், சீதாராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விழா நடக்கும் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார்.
அப்போது, 6 வழிச்சாலையின் இருபுறங்க ளிலும், விழாவுக்கு வருகை தரும் கட்சியினரின் வாக னங்களுக்கு ஏற்படுத்தப்படும் பார்க்கிங் வசதி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதேபோன்று, மேல் மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதியதாக கட்டப்பட்ட வீடுகளையும், முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அப்பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் போலீசார் இருந்தனர்.
- முறையாக பில்கள் போடவில்லை என புகார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என புகார்கள் எழுந்தவந்தது.
இந்த நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.
மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர்.சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள கோரப்பட்டரை பகுதியியை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகன் குணசேகரன் (வயது 23). இவர் தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இன்று காலை அவரது பெற்றோர் குணசேகரனை தேடி சென்றனர். அப்போது அவர் கோரப்பட்டரை பகுதி சாலை ஓரத்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அவரது பெற்றோர் குணசேகரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் முதல் கட்ட விசாரணையில், நேற்று இரவு குணசேகரன், சம்பவ இடத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியது தெரிய வந்துள்ளது. அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இன்று முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இந்தநிலையில் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில் முன்னிலை வகித்தார்.
இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அவர்கள் கூறுகையில்:-
விநாயகர் சதுர்த்தி அன்று பலர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.
இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறுவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே அதை எளிமைப்படுத்த வேண்டும்.
மேலும் சிலை ஊர்வல பாதைகளை சீரமைக்க வேண்டும். சிலைகளை கரைக்கும் பகுதியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்றனர்.
சிறப்பு முகாம்
பின்னர் உதவி கலெக்டர் கவிதா கூறுகையில், சிலைகள் வைக்க அனுமதி பெற அனைத்து துறை களையும் ஒருங்கிணைந்த வேலூர் உட் கோட்டத்து க்குட்பட்ட தாலுகா அலுவலகங்களில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை சிறப்புமுகாம் நடைபெறும்.
அதில் சிலை வைக்க விரும்புபவர்கள் கலந்து கொண்டு விண்ண ப்பங்களை அளித்து அனுமதி பெறலாம் என்றார்.
- மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர்.
- மணல் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என புகார்கள் எழுந்தவந்தது.
இந்த நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.
மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போராட்டக்காரர்களிடம் உமராபாத் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
- காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பனபள்ளி ஊராட்சி பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை. இது குறித்து மாதனூர் ஒன்றியக்குழு அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வாணியம்பாடி-பேரணாம்பட்டு சாலைக்கு வந்தனர்.
காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பூபதி மற்றும் துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து சமரசம் பேசினார்.
அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரை, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே சிறை பிடித்து அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
மேலும் அதிகாரிகள் விரைந்து வந்து, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதுவரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நீடித்ததால் பள்ளி கல்லூரி வாகனங்கள், தனியார் தொழிற்சாலை பஸ்கள் உள்ளிட்டவைகள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
போராட்டக்காரர்களிடம் உமராபாத் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கஞ்சா விற்பனை செய்வதில் இம்ரானுக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
- வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமம், நேரு நகரை சேர்ந்தவர் இம்ரான் (வயது 29). இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் குடியாத்தம் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்த இம்ரான் கடந்த ஏப்ரல் மாதம் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தார். தற்போது தனது வீட்டில் தங்கி கிடைத்த வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே இம்ரான் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர்.
வயிற்றுப் பகுதியில் பலமாக காயம் பட்டதில் இம்ரான் குடல் சரிந்து கீழே விழுந்தார். வலி தாங்க முடியாமல் இம்ரான் கூச்சலிட்டு கதறினார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, இம்ரானை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த இம்ரான் நேற்று இரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கஞ்சா விற்பனை செய்வதில் இம்ரானுக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இவரது எதிரிகள் யார்? இவர் கொலை செய்யப்பட்டதற்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். போலீஸ் உளவாளியாக இம்ரான் செயல்பட்டதாக கருதி அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அவரது செல்போன் அழைப்புகளின் விவரங்களை சேகரித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விவசாயிகள் தொழிற்நுட்பத்தினை கடைபிடித்து பயன்பெறலாம்
- வேளாண் அதிகாரி தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் தேன்மொழி கூறியதாவது;-
நிலத்தின் நலம் மற் றும் வளம் அதில் சாகு படி செய்யும் பயிருக்கு ஏற்ப மாறுபடும். அதை அப்பயிரின் வேரைச்சுற் றியுள்ள மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் அள வைப் பொறுத்து கணிக் கலாம்.
மேலும் இயற்கை முறையில் மண்ணின் வளத்தை அதிகரிக்க பல தானிய விதைப்பு செய்து அதை அந்த நிலத்திலேயே மடித்து உழவு செய்து மண் வளத்தை அதிகரிக்கலாம். அதற்கு ஒரு ஏக்கர் நிலத் திற்கு அனைத்து வகை பயிரிலும் சேர்த்து 25 கிலோ தானியங்களை எடுத்து கலந்து விதைப்பு செய்ய வேண்டும்.
அதாவது பய றுவகை பயிர்களான தட்டைபயறு, மொச்சை, அவுரி, கொழிஞ்சி ஆகிய வற்றில் தலா 2 கிலோ வீதம் 8 கிலோவும், தானிய வகை பயிர்கள் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோ ளம் ஆகியவற்றில் தலா 2 கிலோ வீதம் 8 கிலோவும், எண்ணெய் வித்து பயிர்கள் ஆமணக்கு, நிலக்கடலை, எள் இவை களில் தலா 2 கிலோ வீதம் 6 கிலோவும், நறுமணப் பயிர்களான கொத்தமல்லி, கடுகு, பெருஞ்சீரகம் இவைகளில் தலா 700 கிராமும், கடலை பிண்ணாக்கு 40 கிலோ மற் றும் வேப்பம் பிண்ணாக்கு 60 கிலோ சேர்த்து நிலத்தில் மடித்து உழவு செய்வதன் மூலம் அனைத்து வகை யான சத்துக்களையும் பயிர் களுக்கு கிடைக்க செய்ய லாம்.
இதனால் மண்ணின் கரிமச்சத்து அதிகரிப்பதா லும் மண்ணின் காற்றோட் டம் அதிகரிப்பதாலும் மண்ணில் உள்ளநுண்ணு யிரிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு அதிகளவு மணிச்சத்தை பயிருக்கு கிடைக்க வழி வகை செய்கிறது.
இதனால் பயிரின் வேர் வளர்ச்சி தூண்டப் படுவதால் பயிர் நன்கு செழித்து வளர்வதுடன் நல்ல மகசூல் கிடைக்கும். மேலும் வறட்சியை தாங்கி வளர வழிவகை செய்கி றது. எனவே இயற்கை வேளாண்மையில் ஆர்வம் உள்ள விவசாயிகள் தொழிற்நுட்பத்தினை கடைபிடித்து பயன்பெற லாம். இவ்வாறு அவர் கூறினார்.
- கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி நடந்தது
- கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்
வேலூர்:
சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் பள்ளி கொண்டா சுங்க சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. போராட்ட த்திற்கு வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் கே பி பிரதாப் தலைமை தாங்கினார்.
மத்திய அரசு சுங்க சாவடி கட்டணத்தை திரும்ப பெற கோரி கோஷமிட்டனர்.தேமுதிகவினர் சுங்க சாவடியை முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணி ஈடுபட்டிருந்த போலீசார் தே.மு.தி.க.வினரை கைது செய்து தனியா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த போராட்டத்தில் மாநகர செயலாளர் புருஷோத்தமன், உயர் மட்டக்குழு எம்.சி. சேகர், மாநில நிர்வாகி ஸ்ரீதர், மாநகர பொருளாளர் ஜே.சி.பி சுரேஷ், அவைத்த லைவர் ஜெகதீஷ், பொரு ளாளர் பொன். தனசீலன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் அக்பர், பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் ராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில், லோகநாதன், ஜமுனா ராணி, கலைவாணி, சந்திர வேலு, மோகனா, செயற்குழு உறுப்பினர் ஞானவேல், நகர செயலா ளர்கள் செல்வகுமார், ஞானசேகர் ஒன்றிய செயலாளர்கள் செல்வம், காமராஜ், வினோத் குமார், தேவன், மணிகண்டன், சம்பங்கி, சங்கர், அன்வர் பாட்ஷா, ஜெயராஜ், பாபு, ராஜேந்திரன், முருகன், சீனு உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பட்டாசு வெடித்து, மேளம் அடித்து விரட்டினர்
- அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாரங்கள், பத்தலப்பல்லி, பாலூர், குண்டலப்பல்லி, ரங்கம்பேட்டை, ஜங்குமூர் ஆகிய பகுதிகள் வனப்ப குதியையொட்டி அமைந் துள்ளது.
இதனால் அவ் வப்போது வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராமங் களுக்கு வந்து செல்லும் நிலை தொடர்ந்து வருகி றது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜங்குமூர் கிராமத் தில் உள்ள ஒருவரது விவ சாய நிலத்தில் தடுப்பு வேலிகளை சாய்த்து 6 காட்டு யானைகள் புகுந்தது.
மேலும், அங்கு பயிரி டப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங் களை நாசம் செய்தது. அருகே இருந்த 60 தென்னை மரங்கள், பயிரிடப்பட்டிருந்த கத்தரிக்காய், சோளம் உள் ளிட்டவகைளை மிதித்து சேதப்படுத்தியது. இதனைக் கண்ட நிலத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்களிடம் இணைந்து பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானைகள் மிதித்து சேதப்படுத்திய வாழை தென்னை மரங்களை பார்வையிட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- நவீன முறையில் கட்டப்படுகிறது
- ரூ.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது
வேலூர்:
வேலூர் காகித பட்டறையில் உள்ள உழவர் சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த காய்கறி பழங்கள் பூக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது உள்ள உழவர் சந்தை கட்டிடத்தில் புதிய வசதிகள் இல்லாததால் புதியதாக கட்டிடங்கள் கட்ட ரூ.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் பழைய உழவர் சந்தை கட்டிடங்கள் இருக்கும் பணி தொடங்கியது. இடிக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களில் மின்விளக்குகள், போர்வெல்கள் ஆழப்படுத்துதல், புதியதாக கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது என உழவர் சந்தை அலுவலர் கிரிதரன் தெரிவித்தார்.
- குடியாத்தம் மதுக்கடைகளால் கடும் அவதி
- பெண் தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லதா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாநகராட்சியில் 1300 கிலோமீட்டர் சாலை அமைத்தல், பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பணிகளில் பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பணிகளுக்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெறாமலேயே சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியின் 22 முதல் 25 வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் அமைக்கப்படும் சாலை பணிகளில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகளும் குடிநீர் திட்ட பணிகளும் நிறைவு பெறாமலே சாலைகள் அமைக்கப்ப டுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் சாலைகள் மீண்டும் தோண்டப்பட்டால் அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பதால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மதுகடைகளால் அவதி
எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி தலைவர் அல்தாப் அஹ்மத் அளித்துள்ள மனுவில்:-
குடியாத்தம் நகரத்தின் முக்கிய சாலையாக உள்ள காமராஜர் பாலம் அருகில் ஒரே இடத்தில் 2 மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்த பகுதி எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். மது கடைகளால் மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் முக்கிய சாலையாக இருப்ப தினாலும் நோயாளிகளும் அதிகம் அந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர்.
இதனால் எந்நேரமும் இந்த சாலை வாகன நெரிசலாக காணப்படும்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலால் சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒருவர் மீது பஸ் மோதியதில் அந்த நபர் தற்போது காலை இழந்து தவிக்கிறார்.
எனவே மதுபான கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பெண் தர்ணா
கலெக்டர் அலுவலகத்தில் காயிதே மில்லத் அரங்கத்தின் முன்பாக திடீரென பெண் ஒருவர் தர்ணா செய்தார்/
பின்னர் அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று கலெக்டரிடம் மனு அளிக்க செய்தனர்.
அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
என் பெயர் பரிமளா. நான் காட்பாடி தாலுகாமேல்பாடி கிராமத்தில் வசித்து வருகிறேன்.
நான் காதல் திருமணம் செய்து கொண்டேன்.எனக்கு என் அப்பா முனிசாமி அவருடடைய நிலத்தை எனக்கு செட்டில்மெண்ட் கொடுத்துள்ளார்.
கிராம நிர்வாக அதிகாரி, துணை தாசில்தார் சான்று பெற்று 4 வருடங்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்துள்ளேன். என்னுடைய அப்பா கடந்த மாதம் இறந்துவிட்டார்.இன்னும் அவர் பெயரிலே பட்டா உள்ளது. இதனை எனது பெயருக்கு பட்டா மாற்றி தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
கணியம்பாடி ஒன்றியம் மூஞ்சூர் பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்காட்டான் குடிகை பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்:-
எங்கள் ஊரில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளிக்கு போதுமான வகுப்பறை கட்டிடம் இல்லாததால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே கலெக்டர் உடனடியாக பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர் மனுவில் கூறியுள்ளனர்.






