என் மலர்
நீங்கள் தேடியது "கால்வாயில் விழுந்து வாலிபர் சாவு"
- மனைவியிடம் அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி ஸ்கூல் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகிய மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. என்ஜினியரிங் பட்டதாரியான இவர் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். ராஜ்குமார் மது போதைக்கு அடிமையானதால் வங்கி வேலையும் பறிபோனது. மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ராஜ்குமார், மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார்.
இதனால் அவரது மனைவி குழந்தையுடன், கணவனை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை ராஜ்குமார் சன்னதி தெருவில் புதிதாக கட்டப்படும் கால்வாயில் விழுந்து இறந்து கிடந்தார்.
இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






