என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் அண்ணாசாலையில் அ.தி.மு.க. - தே.தி.மு.க.வினர் மறியல் செய்த காட்சி.
அ.தி.மு.க. - தே.மு.தி.க.வினர் சாலை மறியல்
- தி.மு.க. கொடி அகற்றம் - பரபரப்பு
- அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
வேலூர்:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினர் இன்று காலை மாலை அணிவிக்க சென்றனர்.
அப்போது அண்ணா சிலைக்கு முன்பாக தடுப்பு தூணில் நீளமான தி.மு.க கொடி கட்டப்பட்டு இருந்தது. இதற்கு அ.தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.
அ.தி.மு.க .மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, பொருளாளர் மூர்த்தி தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் பொருளாளர் ஜேசிபி சுரேஷ் உள்ளிட்ட கட்சியினர் அண்ணா சாலையில் திடீரெனமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணாசாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நீளமான தி.மு.க. கொடியை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க. கொடி அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலை கை விட்டனர். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து சென்றனர். இதனால் அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.