யானைக்கு பயந்து முன்னதாகவே நெல் அறுவடை

குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல்நடவடிக்கையும் எடுக்க வில்லை என விவசாயிகள் குற்றம்
நெல் அறுவடை செய்த காட்சி.
நெல் அறுவடை செய்த காட்சி.
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானை நெல், வாழை மரம், தக்காளி போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கதிர்குளம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை பிச்சாண்டி என்பவருக்கு சொந்தமான நெல் பயிர்களை சேதப்படுத்தியது.

மேலும் கோவர்தன் என்பவருக்கு சொந்தமான தக்காளி செடிகளையும், தேவராஜ் என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் மிதித்து சேதப்படுத்தியது.

இந்த நிலையில் கதிர்குளம் கிராமத்தில் யானைக்கு பயந்து விவசாயிகள் அறுவடைக்கு முன்னதாகவே நெல் பயிர்களை அவசர, அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர்.

இது குறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் கூட, அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கதிர்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் விவசாய நிலங்களுக்குள் யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com