என் மலர்tooltip icon

    வேலூர்

    • தொகுதி வாரியாக எந்திரங்கள் பிரித்து வைக்கும் பணி
    • வாக்கு பதிவு எந்திர குடோன் திறக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    இங்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்த எந்திரங்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்கு பதிவு எந்திர குடோன் திறக்கப்பட்டது. தொடர்ந்து குடோனில் இருந்த எந்திரங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

    அப்போது தேர்தல் பிரிவு தாசில்தார் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில் வைக்கப்பட்டுள்ளன.

    இங்கு 4,879 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,096 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,937 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரங்களும் என மொத்தம் 8,912 எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை தணிக்கை செய்யும் பொருட்டு குடோன் திறக்கப்பட்டது.

    மேலும் தொகுதி வாரியாக எந்திரங்கள் பிரித்து வைக்கும் பணியும் நடைபெற உள்ளது. ஏனெனில் தேர்தலை ஒட்டி எந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் போது எந்திரங்கள் மாற வாய்ப்பு உள்ளது.

    இதை தவிர்க்கும் பொருட்டு இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் எந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு குழப்பம் இல்லாமல் அனுப்பி வைக்க உதவியாக இருக்கும் என்றனர்.

    • 10 கிராமங்களில் விடிய, விடிய ரோந்து
    • வனத்துறையினர் 13 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊனை மோட்டூர் கிராமத்தில் ஒருவரின் வீட்டின் முன்பு பூனை இறந்து கிடந்தது.

    அந்த பூனை எப்படி இறந்தது என்பதை அறிய, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    அதில் வீட்டின் வாசலில் இருந்த பூனையை ஏதோ பெரிய விலங்கு ஒன்று கடித்து குதறிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த விலங்கு சிறுத்தை போல் உள்ளது.

    அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இது குறித்து தகவல் அறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பூனையை சிறுத்தை தான் கொன்றதா? இல்லை வேறு ஏதாவது விலங்கு கொன்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    மேலும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் பூனையை கொன்றது சிறுத்தை இல்லை, நாய் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

    மேலும் மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில், ஒடுகத்தூர் மற்றும் வேலூர் வனச்சரகத்தினர் இணைந்து 13 பேர் கொண்ட குழு அந்த கிராமத்தில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து நேற்று இரவும் 2-வது நாளாக வனத்துறையினர் ஊனை மோட்டூர், ஏரிப்புதூர், நாராயிணபுரம், கவுதமபுரம், ஊனை வாணியம்பாடி, ஊனை, ஊனை பள்ளத்தூர், பெரிய ஊனை, கந்தனேரி, அணைக்கட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • போலீஸ் குவிப்பு-பதட்டம்
    • முதல் மரியாதை யார் செய்வது என்பதில் தகராறு

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை, முன்னாள் ஊர் நாட்டாமை மற்றும் அவரது மகன் ஆகியோர் நிர்வகித்து வந்தனர். அவர்கள் கணக்கு வழக்குகளை ஊர் பொது மக்களுக்கு முறையாக வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    புதிய நாட்டாமைகளை தேர்வு செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் இது குறித்து குடியாத்தம் சப்- கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

    அப்போது இரு தரப்பினரையும் நேரில் அழைத்து குடியாத்தம் சப்-கலெக்டர் வெங்கடராமன் விசாரணை நடத்தினர்.

    பின்னர் குடியாத்தம் சப் -கலெக்டர் உத்தரவின்படி புதிய நாட்டாண்மையை கிராமமக்கள் தேர்வு செய்தனர்.

    இந்த நிலையில் பாலூர் கிராமத்தில் வைகாசி மாதம் நடத்த வேண்டிய கெங்கை யம்மன் கோவில் திருவிழா 3 மாதங்கள் கழித்து நேற்று புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊர் நாட்டாண்மை தலைமையில் வெகு விமர்சையாக நடந்தது.

    தொடர்ந்து இரவு 11 மணி அளவில் அம்மன் சிரசு ஊர்வலம் மற்றும் பூங்கரக ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தின்போது உருமி மேளம், பம்பை மற்றும் பேண்ட் வாத்தியங்கள், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    திருவிழாவின் போது முன்னாள் நாட்டாண்மை மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாட்டாண்மை ஆகிய 2 தரப்பினரும் சீர்வரிசைகளுடன் கோவில் அருகே வந்தனர். அப்போது சாமிக்கு முதல் பூஜைகள் மற்றும் முதல் மரியாதை யார் செய்வது என்பது குறித்து இரு தரப்பி னருக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடந்தது. அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டால் சமரசம் ஏற்படவில்லை. இதனால் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.

    ஆகம விதிப்படி நடைபெற இருந்த கெங்கை யம்மன் திருக்கல்யாணம் திருவிழா பாதியில் நின்று போனது. சீர்வரிசையுடன் ஆர்வமாக வந்த பொது மக்களும் சாமி தரிசனம் செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்கு இடையே அமைந்துள்ளதால் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 2 மாவட்ட போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பதட்டம் நிலவியது.

    • தி.மு.க. முப்பெரும் விழாவில் 17-ந்தேதி காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    • முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூரில் வருகிற 17-ந்தேதி தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதனால் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அந்த பகுதியில் தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்பதற்காக 16-ந்தேதி மாலை ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காட்பாடி வருகிறார்.

    அவருக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

    17-ந் தேதி காலை 10.15 மணிக்கு வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு செல்கிறார்.

    அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

    இதற்காக இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு தி.மு.க கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    இதனையடுத்து அங்கிருந்து அவர் மீண்டும் வேலூருக்கு வந்து ஓய்வு எடுக்கிறார்.

    தி.மு.க. முப்பெரும் விழாவில் 17-ந்தேதி காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். வேலூரில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • 3 லட்சத்து 36 ஆயிரத்து 682 பேர் விண்ணப்பித்து இருந்தனர்
    • அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்

    வேலூர்:

    தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற சிறப்பு முகாம்கள் மூலம் 3 லட்சத்து 36 ஆயிரத்து 682 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இது வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டு தாரர்களில் 73 சதவீதம் ஆகும்.

    மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் தவறான தகவல் கொடுத்தவர்களிடம் அதிகாரிகள் வீடு வீடாக சென்று தகவல்களை சரி பார்த்தனர்.

    மகளிர் உரிமைத் தொகை பணத்தை பெற வங்கிகள் மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகளில் 6 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகள் வந்துள்ளன.

    தற்போது வந்துள்ள ஏ.டி.எம். கார்டுகளை அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் எவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்பது வரும் 15-ம் தேதிக்கு பிறகு தெரியவரும். முதற்க ட்டமாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சரி பார்க்கப்படும்.

    மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்க பட்ட வர்களின் சந்தேகங்களை தீர்க்க கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை பெற நிராகரிக்கப்ப ட்டதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடக்கிறது
    • முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    வேலூர்:

    தி.மு.க.வின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா, வேலூர் அடுத்த கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

    இதில், தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

    இதில் வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் முதல் - அமைச்சர் பங்கேற்று, வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

    கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல் - அமைச்சர் வேலூருக்கு வருகிற 16-ந் தேதியே வந்துவிடுகிறார்.

    அதன்படி, சென்னையில் இருந்து 16-ந் தேதி மாலை ரெயிலில் புறப்பட்டு, அன்று இரவு 7.30 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு முதல் அமைச்சர் வருகிறார். அவருக்கு தி.மு.க. கட்சியினர் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    தொடர்ந்து, அன்று இரவு, விருந்தினர் மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் முதல் அமைச்சர் தங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகிறது.

    மறுநாள் 17-ந் தேதி காலை 10.15 மணிக்கு, மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாமுக்கு செல்கிறார். அங்கு நிகழ்ச்சிக்கான மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. சிறிய அளவிலான பிளாட்பாரம் மட்டும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து மேல்மொணவூர் முகாம் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற இடங்களிலும் கட்டப்பட்டுள்ள வீடுகளை காணொளி மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    பின்னர், மேல்மொணவூர் முகாமில் உள்ள ஒரு சில வீடுகளை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு சாவியை ஒப்படைக்கிறார். தொடர்ந்து, தி.மு.க. முப்பெரும் விழா நடக்கும் கந்தனேரிக்கு செல்கிறார்.

    அங்கு தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று, கொடியேற்றி வைத்த பின்னர் மீண்டும் வேலூர் வந்து ஓய்வெடுக்கிறார்.

    அன்று மாலை விழா மேடைக்கு செல்லும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வேலூர் வரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு பணியிலும் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

    இதனால், வேலூர் மாவட்ட அதிகாரிகள் மட்டுமின்றி, தி.மு.க.வினரும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கறது
    • அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் மின் பகிர்மான வட்டம், சத்துவாச்சாரி ,தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடக்கறது.

    இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் பகுதி 5 வரை,அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம்.சி.காலனி, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர்,சித்தேரி, தென்றல் நகர், இடையஞ்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, சிறை குடியிருப்பு, எழில்நகர், டோல்கேட், அண்ணா நகர், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், பலவன்சாத்துகுப்பம், விருப்பாட்சிபுரம், ஒட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது
    • 9 மத்திய சிறைகளில் செயல்படுத்தப்படுகிறது

    வேலூர்:

    பள்ளிக்கல்வி துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் 'சிறப்பு எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    குறிப்பாக முற்றிலும் எழுத, படிக்க தெரியாத கைதிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் பள்ளி கல்வித்துறை மூலம் இத்திட்டம் செயல்படுகிறது. வேலூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், பாளையங்கோட்டை உள்ளிட்ட 9 மத்திய சிறைகள் மற்றும் கடலூர் மாவட்ட சிறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் வரும் 17-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பயிற்சி அளிக்கும் முறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலகத்தில் நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி. குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி. பேரணாம்பட்டு ஆகிய வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

    • மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும்
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் உத்தரவு

    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாநகர பகுதியில் ஆண்டுதோறும் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும்.

    வழிபாடு முடிந்த பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க உதவி கலெக்டர் கவிதா, வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் ஊர்வல பாதையை ஆய்வு செய்தனர்.

    வேலூர் சைதாப்பேட்டை முருகர் கோவிலில் மெயின் பஜார் லாங்கு பஜார் அண்ணா கலையரங்கம் கோட்டை சுற்றுச்சாலை மாங்காய் மண்டி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரி ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் கவிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சாலையோரங்களில் உள்ள தள்ளுவண்டிக் கடைகளை அகற்ற வேண்டும். ஊர்வல பாதையில் தாழ்வான நிலையில் செல்லும் மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.

    • வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற போது பரிதாபம்
    • வனத்துறையினர் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராமாபுரம்மேடு கிரா மத்தை சேர்ந்தவர் தண்டபாணி, விவசாயி.

    இவருக்கு சொந்தமான பசு மாட்டை நேற்று முன்தினம் காலை அருகே உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்ச லுக்கு ஓட்டிச்சென்று விட்டார். வழக்கமாக மாலையில் பசு கொட் டகைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் இரவு வரை திரும்ப வில்லை.

    நேற்று காலை வரை மாடு வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவர் சந்தேகமடைந்து வனப்பகுதிக்குள் சென்று தேடி பார்த்தார்.

    அப்போது, காட்டுயானை மிதித்து பசுமாடு இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குடியாத் தம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். சம் பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பசுமாட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கல்லப்பாடி கால்நடை மருத்துவகுழு வினரிடம் ஒப்படைத்த னர்.

    இதுகுறித்து வனத்து றையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை மிதித்து பசுமாடு பலியான தகவல் அறிந்து ராமாபு ரம் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • வனத்துறையினர் 12 பேர் இரவு முழுவதும் ரோந்து
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊனை மோட்டூர் கிராமத்தில் ஒருவரின் வீட்டின் முன்பு பூனை இறந்து கிடந்தது.

    அந்த பூனை எப்படி இறந்தது என்பதை அறிய, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    அதில் வீட்டின் வாசலில் இருந்த பூனையை ஏதோ பெரிய விலங்கு ஒன்று கடித்து குதறியது காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த விலங்கு சிறுத்தை போல் உள்ளது.

    அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இது குறித்து தகவல் அறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பூனையை சிறுத்தை தான் கொன்றதா? இல்லை வேறு ஏதாவது விலங்கு கொன்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பொது மக்கள் பீதி அடைந்து அச்சத்தில் உள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    ஊனை மோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், வீட்டிலே உஷாராக இருக்க வேண்டும். மேலும் கிராமத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இதனை தொடர்ந்து கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில், ஒடுகத்தூர் மற்றும் வேலூர் வனச்சரகத்தினர் இணைந்து 12 பேர் கொண்ட குழு அந்த கிராமத்தில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

    தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது சிறுத்தை தானா என்பது முழுமையாக தெரியவில்லை. நாய் போன்ற உருவம் பதிவாகி உள்ளது.

    பூனையை துரத்தி சென்று கடித்துக் குதறியது நாய் தான் என்பது 60 சதவீதம் உறுதியாகி உள்ளது.

    எனவே இதனை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு இருக்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து கூறிய பிறகே, அது என்ன விலங்கு என தெரியவரும்.

    இருப்பினும் அது என்ன விலங்கு? என்பதை கண்டறிய 12 பேர் கொண்ட குழுவினர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • சாலையில் காய்கறிகளை கொட்டினர்

    வேலூர்:

    வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லதா தலைமையிலான நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விலைவாசி உயர்வு, வேலையின்மை, உள்ளிட்டவற்றை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் விலைவாசி உயர்வை குறிக்கும் வகையில் திடீரென சாலையில் காய்கறிகளை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×