search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officials alert"

    • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது
    • தொடர்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் அரசு பள்ளி அருகே மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்ப டுவதாக புகையிலை தடுப்பு அலுவலர் ஜெயஸ்ரீக்கு ரகசிய புகார் வந்தது.

    அதன்படி பள்ளி கொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெட்டுவாணம் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது பெட்டிக்கடை களில் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையா ளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து புகையிலை தடுப்பு அலுவலர் கூறியதாவது:-

    பள்ளிக்கூடம் அருகில் மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது.

    மேலும் கடைகள் முன்பு புகையிலை, சிகரெட் படங்கள் விளம்பரங்கள் பற்றிய துண்டுபிரசுரங்கள் ஒட்டி இருந்தால், அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    வெட்டுவாணத்தில் நடைபெற்ற சோதனையில் 19 கடைகளின் உரிமையா ளர்களுக்கு ரூ.2,900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.27,500 அபராதம் விதிப்பு
    • அதிகாரிகள் நடவடிக்கை

    ஆலங்கயாம்:

    வாணியம்பாடியில் மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதிஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஆற்றுமேடு பகுதியில் உள்ள 2 கடைகளில் பிளாஸ்டிக் தட்டுகள் உள்ளிட்டவை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.27,500 அபராதம் விதித்தனர்.

    மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

    சுற்றுச்சூழல் பாதுபாப்பு சட்டத்தின்படி கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரிகள் கடையின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த சோதனையின்போது நகராட்சி துப்புறவு ஆய்வாளர் செந்தில்குமார், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.
    • சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 28 வார்டுகளில் பொது மக்களுக்கு இடையூறாக பஸ் நிலையம், முக்கிய வீதி, பஜார், தெருக்களில், சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனை சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

    அதன்படி பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர். மேலும் அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம் விதித்து போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    ×