என் மலர்
வேலூர்
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை
- வீடுகளில் போலீசார் குறியீடு எழுதி வைத்தனர்
வேலூர்:
வேலூர் அடுத்த மேல் மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் ரூ 11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை நாளை மறுநாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் நிரந்தரமாக எத்தனை பேர் வசிக்கின்றனர் புதிதாக யாராவது தங்கி உள்ளார்களா எவ்வளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களை கேட்டு அறிந்தனர்.
இதேபோல் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் குடியிருப்புகள் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர்.
குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மீட்டர் முதல் அனைத்து இடங்களும் பலத்த சோதனை செய்யப்பட்டது. சோதனை செய்யப்பட்ட வீடுகளில் போலீசார் குறியீடு எழுதி வைத்தனர்.
இதையடுத்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி. ஐ. ஜி. முத்துசாமி உள்ளிட்டோர் பொது க்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
- தி.மு.க. முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது
- கொடி, தோரணங்களால் விழாக்கோலம்
வேலூர்:
வேலூரில் நாளை தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனால் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி வருகிறார். ரெயில் நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அவருக்கு கட்சியினர் மேள தாளங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர்.
மேலும் முதல் - அமைச்சர் வரவேற்கும் விதமாக காட்பாடி முதல் வேலூர், பள்ளிகொண்டா வரை வழிநெடுகிலும் தி.மு.க. கொடி தோரணங்கள், கட்அவுட் மற்றும் பேனர்கள், மின் விளக்குகள் கண் கவரும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதால் வேலூரில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முதல் - அமைச்சர் இன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.
இதற்காக கோட்டை வடிவிலான விழா மேடை, சுமார் 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் பந்தல், இருக்கைகள், குடிநீர், கழிவறை, வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
முதல் - அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பறக்கும் டிரேன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது
- தொடர்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் அரசு பள்ளி அருகே மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்ப டுவதாக புகையிலை தடுப்பு அலுவலர் ஜெயஸ்ரீக்கு ரகசிய புகார் வந்தது.
அதன்படி பள்ளி கொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெட்டுவாணம் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது பெட்டிக்கடை களில் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையா ளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இது குறித்து புகையிலை தடுப்பு அலுவலர் கூறியதாவது:-
பள்ளிக்கூடம் அருகில் மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது.
மேலும் கடைகள் முன்பு புகையிலை, சிகரெட் படங்கள் விளம்பரங்கள் பற்றிய துண்டுபிரசுரங்கள் ஒட்டி இருந்தால், அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
வெட்டுவாணத்தில் நடைபெற்ற சோதனையில் 19 கடைகளின் உரிமையா ளர்களுக்கு ரூ.2,900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. முப்பெரும் விழா நாளை காலை தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது.
- முதல்வா் வருகையொட்டி வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வேலூர்:
தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சாா்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் தொடங்கி வைத்தாா்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.142.16 கோடியில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரிலுள்ள இலங்கைத் தமிழா் முகாமில் நாளை காலை நடக்கிறது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலிக் காட்சி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 புதிய வீடுகளை திறந்து வைக்கிறார்.
மேலும், மேல்மொணவூா் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைக்க உள்ளாா்.
தொடா்ந்து பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. முப்பெரும் விழா நாளை காலை தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முத்தமிழறிஞா் கலைஞா் அறக்கட்டளை சாா்பில் தமிழகத்தின் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூா்களில் கட்சி பணியைச் சிறப்பாக செய்த தலா ஒருவருக்கு நற்சான்றிதழ், பண முடிப்புகளை வழங்குகிறார்.
மேலும், தி.மு.க. சாா்பில் பெரியாா் விருது கி.சத்தியசீலன், அண்ணா விருது க.சுந்தரம், கலைஞா் கருணாநிதி விருது ஐ.பெரியசாமி, பாவேந்தா் பாரதிதாசன் விருது மல்லிகா கதிரவன், பேராசிரியா் க.அன்பழகன் விருது ந.ராமசாமி ஆகியோருக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலா் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலா்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூா் ப.செல்வராஜ், கனிமொழி, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா்.
விழாக்களில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் இன்று இரவு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வருகிறார்.
அங்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடா்ந்து தனியாா் ஓட்டலில் தங்கும் அவா் நாளை நடைபெறும் விழாக்களில் பங்கேற்றுவிட்டு மீண்டும் இரவு ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
முதல்வா் வருகையொட்டி வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பாா்வையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 2 டிஐஜி-க்கள், 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
- வீடு வீடாக சென்று விழிப்புணர்வு
- ஆஸ்பத்திரியில் படுக்கை வசதிகள் தயார்
வேலூர்:
வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவிக்கும், வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆண் குழந்தைக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பலவன்சாத்து குப்பம் மற்றும் சலவன்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
சுகாதாரத் துறை குழுவினர் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் குறித்து கணக்கெடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்ட லங்களிலும் தலா 75 பேர் வீதம் மொத்தம் 300 பேர் கொண்ட குழுவினர் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வேலூருக்கு முதல்வர் வருகைதர உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேபோல், வேலூர் சுகாதாரத் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு மருந்து தெளிக்கும் பணிகளும், கொசு மருந்து அடிக்கும் பணியுடன் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் தாமதம் செய்யாமல் அருகில் உள்ள டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
தொடர் காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்து டெங்குவை உறுதி செய்ய வேண்டும். டெங்கு பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என சுகாதா ரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மனைவியிடம் அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி ஸ்கூல் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகிய மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. என்ஜினியரிங் பட்டதாரியான இவர் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். ராஜ்குமார் மது போதைக்கு அடிமையானதால் வங்கி வேலையும் பறிபோனது. மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ராஜ்குமார், மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார்.
இதனால் அவரது மனைவி குழந்தையுடன், கணவனை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை ராஜ்குமார் சன்னதி தெருவில் புதிதாக கட்டப்படும் கால்வாயில் விழுந்து இறந்து கிடந்தார்.
இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. கொடி அகற்றம் - பரபரப்பு
- அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
வேலூர்:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினர் இன்று காலை மாலை அணிவிக்க சென்றனர்.
அப்போது அண்ணா சிலைக்கு முன்பாக தடுப்பு தூணில் நீளமான தி.மு.க கொடி கட்டப்பட்டு இருந்தது. இதற்கு அ.தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.
அ.தி.மு.க .மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, பொருளாளர் மூர்த்தி தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் பொருளாளர் ஜேசிபி சுரேஷ் உள்ளிட்ட கட்சியினர் அண்ணா சாலையில் திடீரெனமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணாசாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நீளமான தி.மு.க. கொடியை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க. கொடி அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலை கை விட்டனர். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து சென்றனர். இதனால் அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல்
- நடவடிக்கையும் எடுக்க வில்லை என விவசாயிகள் குற்றம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானை நெல், வாழை மரம், தக்காளி போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கதிர்குளம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை பிச்சாண்டி என்பவருக்கு சொந்தமான நெல் பயிர்களை சேதப்படுத்தியது.
மேலும் கோவர்தன் என்பவருக்கு சொந்தமான தக்காளி செடிகளையும், தேவராஜ் என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் மிதித்து சேதப்படுத்தியது.
இந்த நிலையில் கதிர்குளம் கிராமத்தில் யானைக்கு பயந்து விவசாயிகள் அறுவடைக்கு முன்னதாகவே நெல் பயிர்களை அவசர, அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர்.
இது குறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் கூட, அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கதிர்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் விவசாய நிலங்களுக்குள் யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. அழைப்பு
- தொண்டர்கள் திரண்டு வாருங்கள்
வேலூர்:
வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்ட பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆளும் வர்க்கதினால் அடிமைபட்டுகிடந்த சமூகத்தை ஆர்ப்பரித்து வீறுகொண்டு எழுந்திட உதயமான சமூக சீர்த்திருத்த இயக்கமான அண்ணா கண்ட திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய நாளில் மாநகர ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கிளை அமைப்புகளில் இருவண்ண கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடிவோம்.
தீண்டாமையினாலும், மூட பழக்கவழக்கத்தினாலும் பிற்ப்போக்குதனமாக வாழ்க்கையில் உழன்றுக்கொண்டிருந்த சமூகத்தை தனது முற்ப்போக்கு சிந்தனையால் தட்டி எழுப்பி சமத்துவ சமுதாயத்தை படைத்த சமத்துவ பெரியார் அவர்களின் 145–-வது பிறந்த நாளான வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி போற்றுவோம்.
17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நமது வேலூர் அடுத்த பள்ளிகொண்டா டோல்கேட் அருகில் கழக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கழக பவள விழா, கழக முன்னோடி களுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழாவில் கழக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருது வழங்கி, விழா பேருரை ஆற்ற உள்ளார்கள்.
மேலும் இந்நிகழ்வில் கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
எனவே மாநில தலைமைகழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, மாநிலங்க ளவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில அணிகளின் துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் அணிகளின் நிர்வாகிகள், வட்ட, வார்டு, ஊராட்சி வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோ டிகள், கழக புரவலர்கள், கழக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் அலைகடலென திரண்டு பங்கேற்று விழாவினை சிறப்பித்திட வேண்டுமாய் வருக வருக என அன்போடு வரவேற்று கேட்டுக்கொள்கிறேன்.
வேலூரில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.மணி அளவில் நடைபெற உள்ள கழக பவள விழா, கழக முன்னோடிகளுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு விழா பேருரை ஆற்ற நாளை சனிக்கிழமை அன்று இரவு 7மணி அளவில் காட்பாடி ெரயில் நிலையத்திற்கு வருகை தரும் கழக தலைவர், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. க ஸ்டாலினுக்கு கழக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முதல்-அமைச்சரை உள்ளன்போடும், உற்சாகத்தோடும் வரவேற்றிட அனைவரையும் வருக, வருக என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
- போலீசில் புகார்
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தாய் அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
இதேபோல் காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் காட்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மாணவியின் தாய் மாணவியை பள்ளியில் விட்டு சென்றார்.
பின்னர் மாணவி வீடு திரும்பவில்லை இது குறித்து மாணவியின் தாய் காட்பாடி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ அறிக்கை
- கழக நிர்வாகிகள் முன்னோடிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்
வேலூர்:
வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது
இதையொட்டி வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள அண்ணா சிலைகளுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ அவைத்தலைவர் முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் பா. கார்த்திகேயன் எம்.எல்.ஏ, டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி, அமுலு விஜியன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் நாளை காலை 9 மணி அளவில் காட்பாடி யிலும், 9-30 மணி அளவில் வேலூரிலும், 10 மணி அளவில் கே.வி.குப்பத்திலும், 10-30 மணி அளவில் குடியாத்தம் நகரிலும், 11 மணியளவில் அணைக்கட்டிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
எனவே மாநகர, ஒன்றிய, நகர பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
இதில் மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர் நிர்வாகிகள், மாநில அணிகளின் துணை அமைப்பாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பகுதி மற்றும் பேரூர் அணிகளின் நிர்வாகிகள் வட்ட, வார்டு, ஊராட்சி கழக நிர்வாகிகள் முன்னோடிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அமைச்சர் துரைமுருகன் நாளை தொடங்கி வைக்கிறார்
- நிகழ்ச்சியில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்க உள்ளார்.
உரிமைத் தொகை
பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செம்மையாக நடைமுறைபடுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப மானது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடை விற்பனை யாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன. விண்ணப்ப ங்கள் பதிவுசெய்யும் முகாம்கள் நடத்தப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு நாளை முதல் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தினை முதல் - அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
2 ஆயிரம் பேர்
இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நாளை காலை 10 மணிக்கு கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து சுமார் 2000 பயனாளிகளுக்கு உரிமைத் தொகையினை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.






