என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  லாரி மீது பைக் மோதி 2 வாலிபர்கள் சாவு
  X

  லாரி மீது பைக் மோதி 2 வாலிபர்கள் சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலை முடிந்து வீட்டிற்க்கு சென்ற போது விபரீதம்
  • போலீசார் விசாரணை

  அணைக்கட்டு:

  வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த காட்டுக் கொல்லையை சேர்ந்தவர் பழனி (வயது 21). இறைவன் காட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (27). இருவரும் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

  நேற்று இரவு வேலை முடிந்து இருவரும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.

  பொய்கையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அவர்களுக்கு முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பி உள்ளது. இதை கவனிக்காததால் இவர்களது பைக் லாரியின் மீது மோதியது.

  இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் பிணத்தையும் மீட்டு பிரயோக பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×