என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1000 ஆயிரம் கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு செய்யலாம்
    X

    ரூ.1000 ஆயிரம் கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு செய்யலாம்

    • பொதுமக்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்துகொள்ளலாம்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்;

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதேமில்லத் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தை கலெக்டர்குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு செய்தார்.

    அப்போ அவர் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட அல்லது தகவல்கள் பெறாத பயனாளிகளுக்கு அவர்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிவிக்கவும், அவர்கள் இ-சேவை மையங்கள் வாயிலாக மேல் முறையீடு செய்வது குறித்து அறிவுறுத்தவும் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பபடிவம் அளிக்கப்பட்டு, குறுஞ்செய்தி வரப்பெற்றும் அல்லது வரப்பெறாத பொதுமக்கள் உதவி மையத்தினை அணுகி, பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணையோ அல்லது குடும்ப அட்டை எண்ணையோ தெரிவித்து தங்களது விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்துகொள்ளலாம்.

    மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் எந்த விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை பொதுமக்கள் http:/Kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண் மூலமாக உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம்.

    தங்களது விண்ணப்பமானது நிராகரிக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வரப்பெற்று 30-நாட்களுக்குள் தாங்கள் தகுதிவாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் வருவாய் கோட்ட அலுவலருக்கு பொதுமக்கள் இ சேவை மையத்தினை அணுகி மேல்முறையீடு செய்துகொள்ளலாம்.

    மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை.

    தங்களது விண்ணப்பம் பரிசீலனையில்

    இருக்கும்பட்சத்திலும் குறுஞ்செய்தி உடனே வராது. தங்களது மனுவின் நிலையை அறிய

    ஆதார் எண்ணை உள்ளீடுசெய்து இணையதளத்தில் சரிபார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்காமல்

    விடுபட்டவர்கள், விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து தங்களது

    மனுவினை இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×