என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பலத்த மழை
    X

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பலத்த மழை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விடிய, விடிய இடி, மின்னலுடன் பெய்தது
    • பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வேலூரில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. மேலும் இரவு முதல் விடியும் வரை தொடர்ந்து மழை பெய்தது.

    பலத்த மழை காரணமாக புதிய பஸ் நிலையம், கிரீன் சர்கிள், காமராஜர் சிலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம், காவேரிப்பாக்கம், திருப்பத்தூர், சோளிங்கர், குடியாத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    வேலூர்-21, ஆம்பூர்-20.40, வாணியம்பாடி-27, ஆலங்காயம்-24, காவேரிப்பாக்கம்-9.2, சோளிங்கர்-16, திருப்பத்தூர்-21.6, குடியாத்தம்-21, மேல்ஆலத்தூர்-22.6, பொன்னை-5.8, நாட்டறம்பள்ளி-6, காட்பாடி -24.50, அம்முண்டி-8, வடபுதுப்பட்டு-14.6, கே.வி. குப்பம்-32.40, திருப்பத்தூர் -28 ஆற்காடு-20.2, அரக்கோணம் 12.3, கலவை-16.2, ராணிப்பேட்டை-4.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    Next Story
    ×