என் மலர்
வேலூர்
- பொதுமக்கள் போராட்டம் - அதிகாரிகளுடன் வாக்குவாதம்
- உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள தோளப்பள்ளி ஊராட்சி காமராஜபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
தோளப்பள்ளி ஊராட்சி மன்ற பெண் தலைவர், போலியான சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது.
அதன்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், சிறப்பு விசாரணை குழு அமைத்து போலி ஜாதி சான்றிதழை கொடுத்து தேர்தல் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது முற்றிலுமாக தடைப்பட்டது.
காமராஜபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல கட்டப்பட்ட கால்வாய் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் கழிவுநீரோடு மழை நீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது கழிவுநீருடன் கலந்து மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அணைக்கட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அறிவிப்பு
- அதிகபட்சமாக மோர்தானா அணைப்பகுதியில் 31 மில்லி மீட்டர் பதிவானது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியத்திற்கு மேல் பரவலாக சாரல் மழை பெய்தது.
இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மோர்தானா அணைப்பகுதியில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர் மழை பதிவானது.
பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் சாய்ந்து விழுந்தன.
காகிதப்பட்டறையில் உழவர் சந்தை அருகே சாலையோரம் இருந்த கால்வாய் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அதில் எச்சரிக்கை தடுப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை .இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
காலையில் தொடர் மழை பெய்ததால் வேலூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விடுமுறை அறிவித்தார்.
மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன. பருவமழை தொடங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு
வேலூர் 17.3 ,குடியாத்தம் 2, அணைக்கட்டு 4, மோர் தானா அணை 31, கே. வி குப்பம் 4, காட்பாடி 5.2, பொன்னை 10.6, சத்துவாச்சாரி 8.7, பேரணாம்பட்டு 2.8.
- வாலிபர் கொலை தொடர்பாக ஆந்திராவில் தனிப்படை தேடுதல் வேட்டை
- கொலையானவரின் விவரங்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை
வேலூர்:
வேலூர் கோட்டை கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் பிணத்தை பெட்சீட்டால் சுற்றி வீசப்பட்ட வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டவரின் கையில் சித்ரா என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டவர் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலையாளிகள் யார் என தெரியவில்லை. வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்தனர்.
இருப்பினும் கொலையானவரின் விவரங்களை போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட நபர் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் வந்தது.
தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்டவரின் கையில் சித்ரா என பச்சை குத்தப்பட்ட அடையாளத்தை வைத்து ஆந்திராவுக்கு சென்று விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர்.
- பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்டது
- எளிய முறையில் படிக்க மற்றும் எழுதுவதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சூப்பர் மலை கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், வருகையை அதிகப்படுத்தும் நோக்கில் 150 மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக குறு மேசைகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் மாணவர்களுக்கு எளிய முறையில் படிக்க மற்றும் எழுதுவதற்கு உதவியாக இருக்கும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.
- பென்னாத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்
- வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்
அடுக்கம்பாறை:
பென்னாத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜீவசத்தியராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார்.
கூட்டத்தில், பென்னாத்தூர் பேரூராட்சியில் கலெக்டர் உத்தரவின் படி, எரிவாயு மின்மயானம் தகனமேடை மூலம் உடல்கள் தகனம் செய்ய வேண்டும். இதற்காக தகன மேடை அமைக்க இடம் தேர்வு செய்தல், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அயோத்தி தாஸ் பண்டிதர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அனுமதி கோருதல், பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து, பணியினை மேற்கொள்ள அனுமதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஜவ்வாது மலையில் தொடர் மழை
- விவசாயிகள் மகிழ்ச்சி
அணைக்கட்டு:
ஜவ்வாது மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் மலைப்பகுதியில் அதிக அளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உத்திரகாவேரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தில் இருந்து உத்திரக்காவேரி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம், அகரம்சேரி வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கின்றது. ஜவ்வாது மலையில் பெய்து வரும் மழையினால் மேல்அரசம்பட்டு மலைப்பகுதியில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து வருகின்றன. இதனால் ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரக்காவிரி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கினால் உத்திரக்காவேரி ஆறு செல்லக்கூடிய பகுதியான ஒடுகத்தூர், அகரம், மகமதுபுரம், அகரம்சேரி ஆகிய பகுதிகளை சுற்றியிருக்கும் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகின்றது.
இந்த ஆற்றில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அப்பகுதியை சுற்றி இருக்கும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரக்கூடும் எனவும் இதனால் அனைத்து விவசாயமும் செழிப்புடன் வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.
- வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்
- வாலிபரை எச்சரித்து அனுப்பினர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 17-ந் தேதி மதரஸாபள்ளியில் உள்ள டியூஷனுக்கு சென் றார். இரவாகியும் மகள் வீட்டிற்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் டியூஷன் சென்டரில் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு சிறுமி வரவில்லை என்று தெரியவந்தது.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆந்திர மாநிலம், பலமநேரை சேர்ந்த ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரி யவந்தது.
இதையடுத்து, போலீசார் இருவரையும் நேற்று பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர்.
இதில், இருவரும் காத லிப்பதாக தெரிவித்தனர். பெண்ணிற்கு திருமண வயது பூர்த்தியாகாத நிலை யில் போலீசார் சிறுமியை வேலூரில் உள்ள காப்பகத் தில் ஒப்படைத்தனர். சிறு மியை அழைத்து சென்ற வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து வேலூர் வழியாக சென்னைக்கு இன்று காலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது.
வேலூர் அடுத்த வள்ளலார் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் முன்னால் சென்ற கார் சாலை நடுவில் இருந்த தடுப்புகளை தாண்டி அந்தரத்தில் பறந்து சென்று மறுபுற சாலையில் விழுந்தது. கார் அந்தரத்தில் பறந்து வருவதை அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வேலூர் நோக்கி வந்த மற்றொரு கார் பய்ந்து சென்று விழுந்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் முன் பகுதிகள் நொறுங்கியது. அங்கிருந்தவர்கள் இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக 5 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். வழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கியவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
வேலூரில் அடுத்தடுத்து 3 கார்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சதுப்பேரி ஏரியில் கரைப்பு
- 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கும் பணி இன்று நடைபெற்றது.
வேலூரில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தையொட்டி வேலூர் சரக டிஐஜி முத்து சாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
நாராயணி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீட இயக்குனர் சுரேஷ்பாபு, அரசு ராஜா, அப்புபால் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் சைதாப்பேட்டை முருகன் கோவில், சந்தா சாகிப் மசூதி, கிரு பானந்தவாரியார் சாலை, தெற்கு போலீஸ் நிலையம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய்மண்டி, பைபாஸ் சாலை வழியாக சதுப்பேரிக்கு சென்றது.
அதேபோல், மற்றொரு ஊர்வலம் கொணவட்டத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பிற்பகல் தொடங்கியது.
சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பிரத்யேகமான இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக கரைக்கப்படுகின்றன.
வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் இன்று ஒரே நாளில் கரைக்கப்பட்டன.
வேலூரில் விநாயகர் சதுர்த்தி விழா முழுவதையும் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கேமரா காட்சி பதிவை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து தேவைப்படும் இடத்தில் அறிவிப்பு செய்தனர்.
- அணைக்கட்டு பீ.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது
- அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அணைக்கட்டு பீடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்கா ட்சியை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தொடங்கி வைத்தார்.
இதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்ப டுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா, அணைக்கட்டு சேர்மன் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- கொலையா? விசாரணை
- குற்றவாளிகள் பிடிபட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரிய வரும்
வேலூர்:
வேலூர் கோட்டை அகழியில் சிவப்பு போர்வையால் சுற்றப்பட்ட பிணம் கிடப்பதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கோட்டை அகழிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பெரியார் பூங்கா மற்றும் பொருட்காட்சி நடக்கும் திடல் இணையும் இடத்தில், போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் பிணம் மிதந்தது.
அதிக அளவில் துர்நாற்றம் வீசியதால், போலீசாரால் அருகில் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் ஆம்புலன்சுக்காக போலீசார் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பின்னர் அனைவரும் மூக்கில் மாஸ்க் உள்ளிட்ட துணிகளை அணிந்து கொண்டு, அருகில் இறங்கி பிணத்தை மீட்டனர்.
புதரில் சிக்கிக் கொண்டிருந்ததால் பிணத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. உடல் அழகிய நிலையில் இருந்ததால் இறந்தது ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை.
சம்பவ இடத்தில் மோப்ப நாய் சாரா கொண்டுவரப்பட்டது. அது அகழியில் இருந்து பூங்கா நோக்கி ஓடியது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்:-
மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, உடலை சிவப்பு போர்வையால் சுற்றி கொண்டு வந்து வீசி சென்றுள்ளனர்.
அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதால் சுமார் 2 நாட்களுக்கு முன்பு கொலை சம்பவம் நடந்திருக்கும் என தெரிகிறது.
கடந்த ஒரு வாரத்தில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். கண்கானிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளிகள் பிடிபட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஐ.டி.ஐ. படித்து வந்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
திருவலம் அடுத்த குப்பிரெட்டிதாங்கல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் மகன் அஜய்கீர்த்தி (வயது 20). ஐ.டி.ஐ. படித்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் ராஜசேகர் (28).
நண்பர்களான அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் நேற்று பைக்கில் சென்னை- பெங்களூரு சாலையில் சென்றனர். மேல்மொணவூர் அருகே சென்றபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியது.
இதில் பைக் சேதமடைந்து லாரியின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டது.
அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் அஜய்கீர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜ சேகரை பொது மக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






