என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் 3 கார்கள் மோதல்
- அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து வேலூர் வழியாக சென்னைக்கு இன்று காலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது.
வேலூர் அடுத்த வள்ளலார் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் முன்னால் சென்ற கார் சாலை நடுவில் இருந்த தடுப்புகளை தாண்டி அந்தரத்தில் பறந்து சென்று மறுபுற சாலையில் விழுந்தது. கார் அந்தரத்தில் பறந்து வருவதை அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வேலூர் நோக்கி வந்த மற்றொரு கார் பய்ந்து சென்று விழுந்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் முன் பகுதிகள் நொறுங்கியது. அங்கிருந்தவர்கள் இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக 5 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். வழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கியவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
வேலூரில் அடுத்தடுத்து 3 கார்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






