என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோட்டை அகழியில் பிணம் வீச்சு
- வாலிபர் கொலை தொடர்பாக ஆந்திராவில் தனிப்படை தேடுதல் வேட்டை
- கொலையானவரின் விவரங்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை
வேலூர்:
வேலூர் கோட்டை கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் பிணத்தை பெட்சீட்டால் சுற்றி வீசப்பட்ட வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டவரின் கையில் சித்ரா என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டவர் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலையாளிகள் யார் என தெரியவில்லை. வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்தனர்.
இருப்பினும் கொலையானவரின் விவரங்களை போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட நபர் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் வந்தது.
தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்டவரின் கையில் சித்ரா என பச்சை குத்தப்பட்ட அடையாளத்தை வைத்து ஆந்திராவுக்கு சென்று விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர்.






