என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் உண்டியல் உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு
- பொருட்களை திருடி சென்றுள்ளனர்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது காலபைரவர் கோவில். இங்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். கோவிலில் உள்ள உண்டியல் மட்டும் பீரோக்களை உடைத்து, அதிலிருந்த ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற பூசாரி, கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஏரிப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன் அணை க்கட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கோவிலில் இதே போல் ஏற்கனவே ஒரு முறை திருட்டு சம்பவம் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story






