என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம்"

    • ஊா்வல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
    • 1,800 போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை

    வேலூர்:

    விநாயகா் சதுா்த்தியையொட்டி வேலூரில் சிலைகள் ஊா்வலத்துக்கு அனுமதிக்க ப்பட்டுள்ள சாலைகளில் போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

    விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் சுமாா் 900 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.

    தொடா்ந்து, இந்த சிலைகள் புதன்கிழமை முதல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட உள்ளன. அதற்காக வேலூா் மாவட்ட த்தில் சதுப்பேரி ஏரி, ஊசூா் ஏரி, கருகம்பத்தூா் ஏரி, நெல்லூா்பேட்டை ஏரி ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    "வேலூா் மாநகரில் வழிபாடு செய்யப்படும் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம்.

    இந்த விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்களை தவிா்க்க ஏற்கெனவே வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் கவிதா தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் ஊா்வலப் பாதையான வேலூா் சைதாப்பேட்டை முருகன் கோயில், மெயின் பஜாா், லாங்கு பஜாா், அண்ணா கலையரங்கம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய் மண்டி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, அணுகு சாலை, சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரி ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தனா்.

    அப்போது, ஊா்வல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி டவும், சாலையோரங்களில் உள்ள தள்ளுவண்டிக் கடை களை அகற்றவும், ஊா்வலப் பாதையில் தாழ்வான நிலையில் செல்லும் மின் வயா்களை உயா்த்திக் கட்டவும் கோட்டாட்சியா் உத்தரவிட்டிருந்தனா்.

    இதன்தொடா்ச்சியாக, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னே ற்பாடுகள் தொடா்பாக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சிலைகள் ஊா்வலப் பாதைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டாா்.

    சத்துவாச்சாரியில் தொடங்கி சைதாப்பேட்டை, மெயின் பஜாா், லாங்கு பஜாா், அண்ணா கலையரங்கம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய் மண்டி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, அணுகு சாலை என சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரி வரை ஆய்வு செய்தாா்.

    அப்போது, முக்கிய இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினாா்.

    ஊா்வலத்தையொட்டி, சுமாா் 1,800 போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊா்வலம் முழுவதும் ட்ரோன், சிசிடிவி மற்றும் விடியோ கேமராக்கள் மூலமாகவும் பதிவு செய்யப்பட உள்ளது.

    ×