என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Complain to women police"

    • போக்சோவில் கைது
    • திருமணம் செய்வதாக ஏமாற்றினார்

    வேலூர், ஜூலை.2-

    காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். இவரும் காட்பாடி அடுத்த சேனூர் இந்திரா நகரை சேர்ந்த புத்தபிரியன் (வயது 26) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புத்தபிரியன் மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து உள்ளார்.

    மைனர் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி புத்த பிரியனை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளதால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என புத்தபிரியனை கட்டாயப்படுத்தி உள்ளார். புத்தபிரியன் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார். இது குறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராணி புத்தபிரியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • போக்சோவில் நடவடிக்கை
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அங்கு வந்து அவரது உறவினரான புத்தூர் பகுதியை சேர்ந்த சிலை செய்யும் தொழிலாளி பிரபாகரன் (33) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    அந்த பகுதியில் உள்ள அஜித்குமார் (வயது 24) என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளார்.

    அந்த சிறுமியிடம் அஜித்குமார் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×