என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 148 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,382 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 12,234 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 148 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,382 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 11,022 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 186 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூருவில் இருந்து அரக்கோணத்துக்கு மினிவேனில் கடத்த முயன்ற ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பாக்கெட்டுகளை சத்துவாச்சாரி போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
பெங்களூருவிலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்துக்கு மினிவேன் ஒன்றில் குட்கா பாக்குகள், பான்மசாலா பாக்கெட்டுகள் வேலூர் வழியாக கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி தலைமையிலான போலீசார் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே அணுகுசாலையில் விடிய விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று காலை 7 மணியளவில் அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட மினிவேனை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில், 50 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்குகள், பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. அதைத்தொடர்ந்து மினிவேனை குட்கா, பான்மசாலா பொருட்களுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் டிரைவர் உள்பட 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மினிவேன் டிரைவர் கர்நாடக மாநிலம் அனேகல் தாலுகா பனாஹல்லியை சேர்ந்த நாகராஜூ (வயது 43), மினிவேனிலிருந்த மற்றொருவர் ஆனியகல் தாலுகா ஹெப்பகோடியை சேர்ந்த அப்சான் (26) என்பதும், குட்கா பாக்குகள், பான்மசாலா பாக்கெட்டுகளை பெங்களூருவில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வசிக்கும் லட்சுமிபதி என்பவருக்காக கடத்தி செல்வதாகவும் தெரிவித்தனர். கடத்தி வரப்பட்ட குட்கா பாக்குகள், பான்மசாலா பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.4 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அரக்கோணத்தை சேர்ந்த லட்சுமிபதிக்கு குட்கா கடத்தி வந்தது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் லட்சுமிபதியையும், இதில் தொடர்புடையவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
குடியாத்தத்தில் மாணவியிடம் அத்துமீற முயன்ற அரசு கல்லூரி பேராசிரியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத் துறையில் பேராசிரியராக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் கூட்டாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், குடியாத்தம் டவுனில் வசிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவியை நேற்று முன்தினம் மாலை பாடம் சம்பந்தமாக அழைத்துள்ளார்.
அதை நம்பி அந்த மாணவி, பேராசிரியர் தங்கியிருக்கும் கல்லூரி அருகே காந்திநகர் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார் அப்போது பேராசிரியர் ரமேஷ் அந்த மாணவியிடம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி வந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
மாணவியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் மீது புகார் செய்தனர். அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாணவியிடம் அத்துமீற முயன்ற பேராசிரியர் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வேலூரில் வீட்டில் மது குடித்த பெயிண்டர் திடீரென மரணம் அடைந்தார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் கோட்டை பின்புறம் உள்ள சம்பத்நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 25). பெயிண்டர். இவர் நேற்று வீட்டில் மதுகுடித்ததாக கூறப்படுகிறது.
மயங்கிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து, சதீஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் சதீஷின், மனைவி சுவேதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
காட்பாடி திருநகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், தாராபடவேட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் மோட்டார் சைக்கிளை திருடியது தோட்டபாளையத்தை சேர்ந்த 18 வயதுடைய வாலிபர் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.
வேலூர் ரங்காபுரத்தில் கட்டுமான பணியின்போது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி, ரங்காபுரம் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை குழாய்கள் மூலம் வரும் கழிவுநீரை சேகரிக்க ரங்காபுரம் வசந்தம்நகரில் 21 அடி ஆழத்தில் தொட்டி அமைக்க அந்த பகுதியில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு முதல்கட்டமாக 20 அடி அகலத்தில் 15 அடி உயரத்துக்கு சிமெண்டு, கம்பிகளை கொண்டு தொட்டி அமைக்கப்பட்டது. சத்துவாச்சாரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அந்த தொட்டியில் 7 அடிக்கு மழைநீர் தேங்கி கிடந்தது.
தொட்டியின் மீதமுள்ள 6 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பும் பணி நடைபெற்றது. இந்த பணியில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகேயுள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நித்யா (வயது 32) மற்றும் அப்பகுதியை சேர்ந்த 5 பேர் நேற்று காலை வழக்கம் போல் ஈடுபட்டிருந்தனர். அப்போது நித்யாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், நிலைதடுமாறிய அவர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சகதொழிலாளர்கள் அவரை தேடினர். ஆனால் அவர்களால் நித்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்புத்துறையினர், சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தொட்டியில் இறங்கி தேடினர். சிறிதுநேரத்தில் நித்யா பிணமாக மீட்கப்பட்டார்.
அவரின் கழுத்தில் கம்பி குத்தியிருந்தது. அதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் அருகே நடந்து சென்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 59), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர், நேற்று இடையஞ்சாத்து கூட்ரோடு அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பெருமாளை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டார். அப்போது பெருமாள் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர் கத்தியால் பெருமாளை குத்த முயன்றார். ஆனால் பெருமாள் சுதாரித்துக்கொண்டு விலகினார். பின்னர் மர்ம நபர், பெருமாள் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது, தொரப்பாடி நடவாழியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 35) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,913 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,815 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,913 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 10,519 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 177 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 மாதங்களுக்கு பின்னர் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வேலூர்:
இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு அரங்குகள், வணிகவளாகங்கள், வழிபாட்டுதலங்கள், சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகம், தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவை திறக்க தடை விதிக்கப்பட்டன. பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளித்து வருகின்றன. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பஸ், ரெயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி சுமார் 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கத்தோலிக்க சபை, சி.எஸ்.ஐ., லுத்தரன், பெந்தேகோஸ்தே தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிலர் கொரோனா தொற்று பயம் காரணமாக தேவாலயத்தின் வெளியே நின்று பிரார்த்தனை செய்தனர். சில தேவாலயங்கள் திறக்கப்படவில்லை. வேலூர் மாவட்டடத்தில் பெரும்பாலான தேவாலயங்கள் நேற்று பிரார்த்தனைக்காக திறக்கப்பட்டன.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் அமைந்துள்ள மொத்த, சில்லறை காய்கறி, பூ, பழக்கடைகள் 2 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் இயங்க உள்ளது.
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் அமைந்துள்ள மொத்த, சில்லறை காய்கறி, பூ, பழக்கடைகள் 2 மாதங்களுக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் இயங்க உள்ளது. இதனையொட்டி சேறும் சகதியும், குப்பைகளுமாக கிடந்த மார்க்கெட்டை மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் சுத்தப்படுத்தினர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்குபஜார் பகுதிகளில் வியாபாரிகள், ஊழியர்கள் பலருக்கு கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேதாஜி மார்க்கெட்டில் இயங்கி வந்த மொத்த காய்கறி விற்பனை கடைகள் மாங்காய் மண்டி அருகேயும், சில்லறை விற்பனை காய்கறி கடைகள் வெங்கடேஸ்வரா பள்ளி விளையாட்டு மைதானத்துக்கும், பூக்கடைகள் ஊரீசு பள்ளி விளையாட்டு மைதானத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டன.
மேலும் மண்டித்தெருவில் உள்ள அரிசி, பருப்பு, நவதானிய மொத்த விற்பனை கடைகள் கொணவட்டம், மேல்மொணவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டன. அங்கிருந்த மளிகை, பாத்திரம், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது.
நேதாஜி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி முதல் கடைகளை சுழற்சி முறையில் திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக காய்கறி, பழம், பூக்கடைகள் தொடர்ந்து தற்காலிக மார்க்கெட்டில் இயங்கி வந்தன. பருவமழை காரணமாக வேலூர் நகரில் அடிக்கடி பெய்த மழையில் தற்காலிக மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக காணப்படுகிறது. தற்காலிக மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிகளவு காய்கறிகளை சேமித்து வைக்க இடமில்லை. மேலும் தற்காலிக மார்க்கெட்டில் குறைந்த அளவிலான வியாபாரிகள் மட்டுமே கடை வைத்துள்ளனர். எனவே பழையபடி காய்கறி, பூ, பழக்கடைகளை நேதாஜி மார்க்கெட்டில் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்கள் பேரமைப்பு, நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேதாஜி மார்க்கெட் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட் வளாகத்தை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கிருமிநாசினி தெளித்து பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. குப்பைகள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த பணிகளை 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “வணிகர் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் பழையபடி இயங்க கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். அதனால் காய்கறி, பழம், பூக்கடைகள் இன்று முதல் நேதாஜி மார்க்கெட்டில் இயங்கும்” என்று தெரிவித்தனர்.
காவேரிப்பாக்கம் அருகே வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிபாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த கொண்டாபுரம், சொக்கலிங்கம் முதலி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மகன் சுரேஷ் (வயது 30), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளில் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற வேன் திடீரென சுரேஷ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேசை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மண்டித்தெருவில் 100 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்தது. அதில் சுமைத்தூக்கும் தொழிலாளி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். கார், மோட்டார்சைக்கிள்கள், தள்ளுவண்டி உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
வேலூர்:
வேலூர் மாநகரின் வியாபார மையமாக வேலூர் மண்டித்தெரு காணப்படுகிறது. இந்தத் தெருவின் இருபுறமும் அரிசி, பருப்பு, எண்ணெய், நவ தானியப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருட்களின் மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இங்குள்ள கடைக்கு பிற மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பல வகையான பொருட்களை கொண்டு வந்து இறக்குவதும், இங்கிருந்து சிறு வணிக கடைகளுக்கு பல்வேறு மளிகைப் பொருட்களை ஏற்றி அனுப்பி வைப்பதும் என எந்த நேரமும் மண்டித்தெரு பரபரப்பாகக் காணப்படும். இந்தத் தெருவோரத்தில் 100 ஆண்டு கால பழமையான அரசமரம் பரந்து விரிந்து காணப்பட்டது.
இந்த மரத்தின் அடியில் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள் ஓய்வெடுப்பது வழக்கம். இங்கு தள்ளுவண்டியில் கூழ், சிற்றுண்டியும் விற்பனை செய்யப்படும். நேற்று காலை 10 மணியளவில் அரசமரம் வேருடன் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது. இதில், மரத்தின் அருகே நின்று கொண்டிருந்த சுமைத்தூக்கும் தொழிலாளி உள்பட 2 பேர் மரக்கிளைகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார், 4 மோட்டார்சைக்கிள்கள், தள்ளுவண்டி, மாடுடன் நிறுத்தப்பட்டு இருந்த மாட்டுவண்டி ஆகியவை சேதமடைந்தன.
இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்குச் சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துப் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்புப்படை வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அங்குச் சென்று மரத்தின் அடியில் சிக்கிய வாகனங்களை முதல் கட்டமாக அப்புறப்படுத்தினர். பின்னர் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், விழுந்த அரசமரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக காணப்பட்ட அரசமரத்தையொட்டி கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதனால் மரத்தின் ஒருபுறத்தின் வேர்கள் வலுவிழந்தன. கடந்த சிலநாட்களாக பெய்த மழையின் காரணமாக மேலும் வேர்கள் வலுவிழந்து சாலையில் விழுந்தது. அந்த சமயம் மரத்தடியில் மற்றும் சாலையில் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள மின்கம்பங்கள், மற்ற மரங்களும் இதேபோல் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. அவற்றை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.