என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற காட்சி.
    X
    தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற காட்சி.

    5 மாதங்களுக்கு பின்னர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    5 மாதங்களுக்கு பின்னர் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    வேலூர்:

    இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு அரங்குகள், வணிகவளாகங்கள், வழிபாட்டுதலங்கள், சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகம், தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவை திறக்க தடை விதிக்கப்பட்டன. பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளித்து வருகின்றன. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பஸ், ரெயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

    அதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி சுமார் 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கத்தோலிக்க சபை, சி.எஸ்.ஐ., லுத்தரன், பெந்தேகோஸ்தே தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிலர் கொரோனா தொற்று பயம் காரணமாக தேவாலயத்தின் வெளியே நின்று பிரார்த்தனை செய்தனர். சில தேவாலயங்கள் திறக்கப்படவில்லை. வேலூர் மாவட்டடத்தில் பெரும்பாலான தேவாலயங்கள் நேற்று பிரார்த்தனைக்காக திறக்கப்பட்டன.
    Next Story
    ×