search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர் கைது"

    • மாணவன் பிரவீன் குமார் தனது தாயார் இந்திராவிடம் கூறி உள்ளார்.
    • ஆனந்த் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்தக் கல்லூரியில் காவல்கிணறை சார்ந்த பிரவீன் குமார் (வயது 17) என்ற மாணவன் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ இன் பெட்ரோல் கெமிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார். நேற்று மாலை மாணவர் படித்து வரும் துறையின் தலைவரான ஆனந்த் (40) என்பவர் மாணவனிடம் அசைன்மென்ட் நோட்டை கேட்டுள்ளார்.

    அப்போது மாணவன் தனது நோட்டை சக மாணவர் ஒருவர் வாங்கி சென்று விட்டதாகவும், எனவே தான் நோட்டில் எழுதவில்லை எனவும் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் ஆனந்த், கம்பால் மாணவனை அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது .

    இதுகுறித்து மாணவன் பிரவீன் குமார் தனது தாயார் இந்திராவிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் துறை தலைவரான ஆனந்த் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    • பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவர்களிடம் மனக்குமுறலை கொட்டி தீர்த்தனர்.
    • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுலூர் ஊராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இது லால்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவி- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த வினோத்குமார் வயது 43 என்பவர் வணிகவியல் துறை கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    திருச்சி ஈவெரா கல்லூரியில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குமிழலூர் இந்த கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இவர் குமலூர் கல்லூரியில் படித்து வரும் சில மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ் மற்றும் வாட்சப் மூலம் ஆபாச மெசேஜ்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவர்களிடம் மனக்குமுறலை கொட்டி தீர்த்தனர். இதனால் மாணவர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

    பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் அந்தக் கல்லூரியின் வணிகவியல் துறை அறைக்குள் திடீரென புகுந்தனர். பின்னர் அங்கிருந்த விரிவுரையாளர் வினோத்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கியதால் அவரால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

    இதில் அவர் மயங்கி சரிந்தார். மேலும் ஆத்திரமடங்காத மாணவர்கள் அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் பெஞ்சுகளை அடித்து நொறுக்கினர்.

    அதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டு வினோத்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த லால்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் துணைபோலிட்டு பிரண்டு அஜய் தங்கம் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் கார்த்திகேயினி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வினோத்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
    • போலீசார் ஜெகன் கருப்பையாவை கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த மாணவி மதுரையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

    இதனை விசாரித்த நீதிபதி, மாணவி பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க செக்கானூரணி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி போலீசார் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையா (வயது42), மற்றொரு பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஜெகன் கருப்பையாவை கைது செய்தனர். தலைமறைவான மாணவரை தேடி வருகின்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன்.
    • மன உளைச்சலுக்கு ஆளான நான் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் செய்தேன்.

    மதுரை:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவி ஒருவர் கடந்த மார்ச் 23-ந் தேதி மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் பல்கலைக்கழக வராண்டாவில் நின்று கொண்டிருந்தபோது என்னை பார்த்து வரலாற்று துறை பேராசிரியர் சண்முக ராஜா, என்னை சாதியை சொல்லி திட்டியும், என் உருவத்தை கேலி செய்தும் பேசினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நான் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் செய்தேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் சண்முகராஜா மாணவியை சாதியை சொல்லி திட்டியது உறுதியானதால் அவரை கைது செய்தனர்.

    ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் சண்முகராஜா மீது மாணவிகள் தமிழக கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதன்பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ராஜேந்திரனிடம் விற்றனர்.
    • நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை நேருவில்லா நகர் புனித மேரி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது43). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினரான லாஸ்பேட்டை சாந்தி நகர் தி.ரு.வி.க. தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ஆரோக்கியராஜ் மற்றும் அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, குமரன், சீதாராமன் உள்பட 12 பேர் மகாபலிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சீதாராமன் கொரோனா தொற்றால் சமீபத்தில் இறந்துபோன நிலையில் ஆரோக்கியராஜ் மற்றும் குமரனை சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இதில் தொடர்புடையவர்களில் ஒருவரான கடலூர் தீதாம்பாளையம் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த தனியார் என்ஜீனியரிங் கல்லூரி பேராசிரியரான அபிலாஷ் ராஜீவ் தரணை அதிரடியாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கடலூர் சில்வர் பீச்சில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×