என் மலர்
வேலூர்
பெருமுகையில் கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்:
வேலூரை அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் புஷ்பா (வயது 76). இவர் நேற்று முன்தினம் மருந்துக்கடையில் மாத்திரை வாங்குவதற்காக சென்றார். பெருமுகை பஸ்நிறுத்தம் அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென புஷ்பா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புஷ்பாவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த கார் டிரைவர் ராகுலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழந்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதனால் தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 63 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் 49 பேருக்கு தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த 15 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள். இந்த நிலையில் நேற்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் பலியானார்கள்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 46 ஆயிரத்து 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 194 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,007 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 300-க்கும் குறைவான நபர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 96 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 164 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி 4 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பரிசோதனைகளின் முடிவில் 63 பேருக்கு தொற்று உறுதியானது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 36 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் 63 பேருக்கு தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள்.
இந்த நிலையில் நேற்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் பலியானார்கள். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 46 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 167 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 197 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 300-க்கும் குறைவான நபர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 55 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும். நேற்று 6 பேர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றின் காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. மேலும் நேற்று 4 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் கோட்டை சுற்றுச்சாலை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் தொரப்பாடி, அரியூர், அணைக்கட்டு துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
வேலூர்:
வேலூர் மின்பகிர்மான வட்டம் வேலூர் கோட்டை சுற்றுச்சாலை துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே கீழ்கண்ட பகுதிகளில் குறிப்பிடப்பட்ட நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன்படி இன்று (புதன்கிழமை) பி.டி.சி.ரோடு, பில்டர்பெட் டி.பி.யில் இருந்து மகாராஜா டிவி. கலாஸ்பாளையம் போன்ற பகுதிகளிலும், அரியூர் மின்பாதைகளான ஜமால்புரம் மாரியம்மன் கோவில் தெரு, தெள்ளூர், குளத்துமேடு பகுதிகளிலும், சிறுகளம்பூர், கணேசபுரம், கேசவபுரம், பென்னாத்தூர் பகுதிகளிலும், நாளை (வியாழக்கிழமை) ஆரணி ரோடு, கொசப்பேட்டை, எஸ்.எஸ்.கே.மானியம் கஸ்தமேடு, வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை உள்ள பகுதிகளிலும், பென்னாத்தூர், ஊசூர் மெயின் ரோடு, வீராரெட்டிபாளையம், ஊசூர், சிவநாதபுரம் பகுதிகளிலும், 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கோட்டை சுற்றுச்சாலை, சுண்ணாம்புகார தெரு பகுதிகளிலும், சித்தேரி, கொல்லைமேடு, சிறுகளம்பூர், கணேசபுரம், சலவன்பேட்டை, லட்சுமிபுரம், நரசிங்கபுரம், திருவள்ளுவர் நகர், காமராஜர் நகர் பகுதிகளிலும் அரியூர் மின்பாதைகளான வாவக்குட்டை, புதூர், புத்தூர் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
28-ந்தேதி (திங்கட்கிழமை) ஊசூர்குளத்துமேடு, சின்னதெள்ளூர், சின்னசேக்கனூர், பென்னாத்தூர் மெயின்ரோடு, ஊசூர்மெயின்ரோடு, பென்னாத்தூர், காட்டுபுதூர் போன்ற பகுதிகளிலும், 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பாபான்தோப்பு, கென்னடிபாளையம், காட்டுபுதூர் மலைஅடிவாரம், கே.ஜி.நகர், கோட்டை சுற்றுச்சாலை, துணை மின்நிலையம் முதல் நேருநகர் வரை, நேதாஜி விளையாட்டு மைதானம், வசந்தபுரம், அண்ணாசாலை, ஜமிலாபாத்காலனிடிட்டர் லைன், ஸ்ரீபுரம் மின்பாதைகளான காடபுரம், உமாபதிநகர், அம்மையப்பன்நகர், ரெயில்வேகேட் போன்ற பகுதிகளிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும், 30-ந்தேதி (புதன்கிழமை) ஸ்ரீபுரம் மின்பாதைகளான திருவள்ளுவர் குடியிருப்பு, அண்ணாசாலைநகர், சிறுகளம்பூர், நல்லாண்டபட்டரை, சேர்வைமுனிசாமிதெரு உள்ளிட்ட பகுதிகளிலும், அடுத்த மாதம் 1-ந்தேதி (வியாழக்கிழமை) அரியூர்குப்பம், சின்னஅகமேடு, முருக்கேரி பகுதிகளிலும், 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) குப்பம்கொல்லைமேடு, ஆய்யூர்வேதின், ஸ்ரீபுரம் மெயின்ரோடுமில் பகுதிகளிலும், 3-ந்தேதி (சனிக்கிழமை) புதுமைநகர், தேவராஜ்நகர், அண்ணாநகர், மலைக்கோடி, ஆவாரம்பாளையம், ஸ்ரீபுரம் போன்ற பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை உதவி செயற் பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 77) என்பவர் தனது மகன்கள் மற்றும் குடும்பத்துடன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேலூர் :
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 77). இவர் தனது மகன்கள் மற்றும் குடும்பத்துடன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சரஸ்வதி கூறியதாவது:-
எனது மகன்கள் ரமேஷ், பூபாலன் ஆகியோர் பேரணாம்பட்டு மெயின்ரோட்டில் மளிகை, அடகுக் கடை வைத்திருந்தனர். பல ஆண்டுகளாக அங்கு கடை வைத்து வாழ்ந்து வருகிறோம். கடை அமைந்துள்ளது கோவில் இடம். எனவே வாடகை முறையாக செலுத்தி வந்தோம். இந்த நிலையில் கோவில் நிர்வாகி ஒருவர் கடைக்கு வாடகை உயர்த்தினார். தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் எங்களால் அதைசெலுத்த முடியவில்லை என்று கூறினோம். ஆனால் அந்த நிர்வாகி கடைக்கு வாடகை செலுத்தாவிட்டால் கடை நடத்த முடியாது என்று கூறினார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு கடைகளுக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பொக்லைன் எந்திரத்தை வைத்து கடையை இடித்து விட்டார். கடையில் இருந்த பொருட்கள் சேதமானது. சில பொருட்களை அங்கிருந்தவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

கண்ணமங்கலத்தில் சிறுவனுக்கு பேய் விரட்டுவதாக கூறி கழுத்தை நெரித்து கொன்ற தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அரியூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவர் இறந்துவிட்டார். இவருடைய மனைவி திலகவதி (வயது 35). இவரது மகன் சபரி (7). சிறுவன் சபரி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதற்கு சிகிச்சைக்காக நேற்று முன்தினம் வந்தவாசி செல்ல ஆட்டோ மூலம் திலகவதியும், அவருடைய சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகியோரும், சிறுவன் சபரியுடன் சென்றுள்ளனர்.
வந்தவாசி வரை செல்ல பணமில்லாததால் அவர்களை ஆட்டோ டிரைவர் கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளார். அப்போது இரவு நேரமாகிவிட்டதால் அவர்கள் 4 பேரும் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தங்கியுள்ளனர்.
அதிகாலை 3 மணி அளவில் சபரிக்கு வலிப்பு நோய் அதிகமானது. அப்போது சபரியை, பேய் பிடித்துள்ளதாகவும் அதை விரட்டுவதாக கூறி தாய் திலகவதி, அவரது சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகிய 3 பேரும் சேர்ந்து, சபரியின் மார்பில் குத்தி, கழுத்தில் கைவைத்து அழுத்தியுள்ளனர். இதில் சபரி பரிதாபமாக இறந்துவிட்டான்.
இதனால் 3 பேரும் கதறி அழுதுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சபரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சபரியின் பெரியப்பா நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, திலகவதி, அவரது சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் இருப்பதாக டீன் செல்வி தெரிவித்தார்.
அடுக்கம்பாறை:
தமிழகத்தில் கொரோனா தொற்று 3-வது அலை 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகளவில் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்காக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் குறைந்தபட்சம் 100 படுக்கைகள், அதில் 25 ஐ.சி.யு. வசதி உள்பட அனைத்துப் படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் வார்டுகளில், சிறப்பு கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் நலத்துறை மருத்துவர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் செல்வி கூறுகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் கூடுதலாக 700 முதல் 800 வரை உள்ள படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்படுகிறது.
தற்போது 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நல மருத்துவர்கள் உள்ளனர். இங்குள்ள பொது மருத்துவர்களுக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என்றார்.

திருவலம் அருகே பெற்றோர் கண்டித்ததால் 2 மாணவிகள் மாயமானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவலம்:
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள கரிகிரி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாமவி. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு பாகாயத்தை சேர்ந்த உறவினர் மகள் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வந்துள்ளார். இவர்கள் இருவரும் செல்போனை அடிக்கடி பயன்படுத்தி உள்ளனர். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் மாணவிகள் இருவரும் வீட்டை விட்டு சென்று விட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருவலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தத்தில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்பொழுது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் முதியவர் மீது மோதியது. இதில் அவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முரளிமனோகரன் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமான இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன. 25 இடங்களில் பொதுமக்களுக்கு போடப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என அரசு அறிவித்ததை அடுத்து வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமான இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி வரப்பெற்ற தடுப்பூசிகள் நேற்று முன்தினத்துடன் தீர்ந்து போனது. இதனால் முகாம்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வேலூர் மாவட்ட மக்களின் பயன்பாட்டுக்காக தடுப்பூசிகள் வரவழைக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டு குடோனில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் இன்று (நேற்று) அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்கள் என 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும். பொதுமக்கள் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், என்றனர்.

சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில்சாராய சோதனை நடத்தினர். அப்போது சாராயம் விற்றுக் கொண்டிருந்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் (வயது 22), கூடநகரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் (30), மேல்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அம்முராஜகுமாரி (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
வேலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர்:
வேலூர் சின்னஅல்லாபுரம் கே.கே.நகர் திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாகர் (வயது 25), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 12-ந்தேதி இரவு வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறங்க சென்றார். அவர் மறுநாள் காலையில் பார்த்தபோது அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து கிருஷ்ணசாகர் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சித்தேரி கூட்ரோட்டில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், நரசிம்மன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் கிருஷ்ணசாகரின் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் என்று தெரியவந்தது. போலீசார் விசாரணையில், அவர்கள் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த முகமதுயாசின் (20), ரகீம் (21), பகத்பாஷா (21) என்பதும், மோட்டார் சைக்கிளை 3 பேரும் சேர்ந்து திருடியதும் தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.