என் மலர்
செய்திகள்

மரணம்
குடியாத்தத்தில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
குடியாத்தத்தில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்பொழுது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் முதியவர் மீது மோதியது. இதில் அவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முரளிமனோகரன் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






