என் மலர்
வேலூர்
- கோரிக்கை மனு வழங்கினர்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்
வேலூர்:
வேலூரில் ஜாக்டோ ஜியோ பேரமைப்பு நிர்வாகிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனையும், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாரையும், கதிர் ஆனந்த் எம்.பி.யையும் இன்று சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.
முதல்-அமைச்சரின் கனிவான கவனத்திற்கு கோரிக்கை மனுவை கொண்டு சென்று நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டனர்.
நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை ஜாக்டோ ஜியோ ஒருங ்கிணைப்பாளர்களுடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி பேச வைத்து கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ. சேகர், துரை.கருணாநிதி, அக்ரி ராமன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.சீனிவாசன் ஜி.சீனிவாசன் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஜி.டி.பாபு, தியாகராஜன், குமார், பெ.இளங்கோ அல்போன்ஸ் கிரி சுமதி, பா வேலு, ஜி.சுந்தர லட்சுமி கல்லூரி ஆசிரியர் கழக விஜயன் அனைத்து வகை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே ரூ15 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை மற்றும் செங்கோட்டையில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரேசன் கடையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்,
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமானதாக இருந்ததில்லை என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள் தரமான பொருட்களாக இருக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான பொருட்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.
காட்பாடியில் 200 படுக்கை கொண்ட பல்நோக்கு மருத்துவமனை இந்தாண்டு தொடங்கப்படும்.காட்பாடியில் கூடுதலாக ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்பாடி பகுதியில் செயின் பறிப்பு உள்ளிட்ட ஏராளமான குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக போலீஸ் நிலையம் கொண்டு வரப்படும்.இந்த ஆண்டு காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். அங்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
இவ்வாறு அவர் பேசினார்.
கதிர்ஆனந்த் எம்.பி., மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 500 கிராம் பறிமுதல்
- ேபாலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பஸ்நிலையத்தில் பட்ட பகலிலேயே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது, கையில் பேக்குடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், சுமார் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
அதேபோல், கிடங்கு தெருவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபரும் சுமார் 250 கிராம் கஞ்சாவுடன் இருந்தது தெரியவந்தது.
இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒடுகத்தூர் அடுத்த அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி(வயது 39), அஜித்குமார்(23), என்பதும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒடுகத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து சுமார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- கோவிலில் புகுந்து திருட்டு கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
பொன்னை :
பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமத்தில் ரேணுகாம்பாள் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த வருடம் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதன் உண்டியல் காணிக்கை வருகிற ஆடி மாதம் தீமிதி திருவிழாவின் போது எண்ணப்பட இருந்தது. இந்தநிலையில் கோவில் பூசாரி கீரைசாத்து கிராமத்தை சேர்ந்த இருசன் (வயது 75) என்பவர் நேற்று ஒரு மணி கோவிலை பூட்டிவிட்டு மதிய உணவுக்காக வீட்டிற்கு அளவில் சென்றுள்ளார். பின்னர் சுமார் 3 மணி அளவில் கோவில் நடை திறப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது கோவில் உண்டியலை காணவில்லை. இது குறித்து அவர் உடனடியாக கிராம பொதுமக்களுக்கு தக வல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் பொதுமக்கள் சென்று பார்த்து, பின்னர் பொன்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப் போது கோவில் உண்டியல் கோவிலின் பின்பக்கம் உள்ள ஏரியில் வீசப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர்.
மர்மநபர்கள் உண்டியலைஉடைத்து பணத்தை திருடிக்கொண்டு, உண்டியலை ஏரியில் வீசிச்சென்றது தெரிய வந்தது. கோவில் உண்டியலில் பணம், தங்க நகைகளும் இருந்ததாக பூசாரி இருசன் புகார் அளித்தார். அதன்பேரில்பொன்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
- பாராளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. கேள்வி
- 2017 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் 1199 பெண் விஞ்ஞானிகள் தேர்வாகி உள்ளதாக மத்திய மந்திரி தகவல்
வேலூர் :
பாராளுமன்றத்தில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த்பேசுகையில்:-
இந்தியாவில் பெண் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் 2017 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் விண்ணப்பித்த மொத்த பெண்: விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மற்றும் இந்த திட்டத்தின் கீழ் தேர்வான பெண் விஞ்ஞானிகள் எண்ணிக்கை சதவீதத்தின் மாநில வாரியான விவரங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினர்.
2017ம் ஆண்டு முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் பெண் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு விண்ணப்பித்த மொத்த பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மற்றும் இந்த திட்டத்தின் கீழ் தேர்வான பெண் விஞ்ஞானிகள் சதவீதத்தின் மாநில வாரியான விவரங்கள் 2017 மற்றும் 2022 க்கு இடையில் பயிற்சியின் கீழ் திட்டங்களை பெற்ற பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையின் சதவீதத்தின் மாநில வாரியான விவரங்கள் யாவை? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து பூர்வமாக பதில் அளித்தார்.
அதில் பெண் விஞ்ஞானிகள் திட்டத்தில் 2017 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் விண்ணப்பித்த 3453 பெண்களில் மொத்தம் 1199 பெண் விஞ்ஞானிகள் தேர்வாகி ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து 423 பேர் விண்ணப்பித்ததில் 111 பேர் தேர்வாகினர் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 20 பேர், கர்நாடகாவிலிருந்து 85 பேர், கேரளாவிலிருந்து 71 பேர் தேர்வாகினர் தெலங்கானாவிலிருந்து 90 பேர், டில்லியில் இருந்து 125 பேர் தேர்வாகினர் மஹாராஷ்டி ராவிலிருந்து143 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
- முறையான வழிமுறையை கடைப்பிடிக்காததால் நடவடிக்கை
- 2 நாட்கள் கழித்து மீண்டும் நடப்பதாக தகவல்
வேலூர்:
வேலூர் அடுத்த பெண்ணாத்தூரில் எருது விடும் திருவிழா இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளை மாடுகளை கொண்டு வந்தனர். காளைகள் ஓடுபாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் திரண்டு இருந்தனர்.
இதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. எருது விடும் விழாவை கண்காணிக்க டெல்லியில் இருந்து பீட்டா அமைப்பு தலைவர் மிட்டல் வந்து இருந்தார். அப்போது ஓடுபாதையில் சென்ற காளை மாடு மெயின் ரோட்டிற்கு சென்று அங்கு மிட்டல் நிறுத்தி வைத்திருந்த கார் மீது உரசியபடி சென்றது.
காளை மாடுகள் மெயின் ரோட்டுக்கு சென்றதால் மாடுகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் உரிய முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை எனக் கூறி எருது விடும் விழாவை பீட்டா அமைப்பு தலைவர் மிட்டல் தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த விழா குழுவினர் மற்றும் மாடுகளை கொண்டு வந்த உரிமையாளர்கள் ஆத்திரம் அடைந்து எக்காரணத்தைக் கொண்டும் எருது விடும் விழாவை தடுத்த நிறுத்தக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டமும் சாலை மறியலோ செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து காளை மாடுகளுக்கு நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்ட பணம் மீண்டும் திரும்பி கொடுக்கப்பட்டன. பின்னர் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை அவிழ்த்து கொண்டு சென்றனர்.
இதையடுத்து திருவிழா ரத்து செய்யப்பட்டது. எருது விடும் விழாவை காண வந்த பொதுமக்கள் விரக்தியுடன் கலைந்து சென்றனர். 2 நாட்கள் கழித்து மீண்டும் வேறு ஒரு பாதையில் எருது விழா நடத்தப்படும் என விழா குழுவினர் தெரிவித்தனர்.
- குடியாத்தம் நகராட்சி எச்சரிக்கை
- உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகளை செய்ய அறிவுறுத்தல்
குடியாத்தம்:
குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நக ராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின் அடிப்படையில் கழிவுகளை அகற்ற விரிவான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது, மலக்கசடு, கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றுதல் உள்ளிட்டபணிகள் ஒழுங்குப்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 2022-ம் ஆண்டில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் கழிவுநீரை அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
நகராட்சி மூலம் 2 ஆண்டு செல்லுபடியாகும் உரிமம் பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகளை செய்ய வேண்டும். செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும்.
அவ்வாறு உரிமம் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காதலை மகள் கைவிட மறுத்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
கணியம்பாடி அடுத்த கம்மசமுத்திரம் அருகே உள்ள அருணகிரிபேட்டை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48), விவசாயி. இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ஏழுமலை எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால், காதலித்தவரைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் என மகள் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்தியடைந்த ஏழுமலை கடந்த 3-ந் தேதி இரவு வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து, வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விவசாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக் குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடுரோட்டில் கொட்டி கிடந்த பெயிண்டுகள்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (வயது 29). இவர் சென்னையில் இருந்து மினிவேனில் மாதனூர் பகுதியை நோக்கி பெயிண்டு ஏற்றிச் கொண்டு வேலூர், பள்ளிகொண்டா வழியாக வந்துகொண்டு இருந்தார்.
அப்போது நேற்று பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி அருகே வந்த போது திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து மினி வேன் சாலையில் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்தது.
மினிவேனில் சிக்கி இருந்த டிரைவரை லேசான காயத்துடன் அக்கம் பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் பொ க்லைன் எந்திரத்தின் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த மினி வேனை அப்புறப்படுத்தினர்.
மேலும் விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் ஆஸ்பத்திரியில் போலீசார் சுற்றிவளைப்பு
- உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
வேலூர்:
பேரணாம்பட்டு அடுத்த நரியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், விபத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
அவரை பார்ப்பதற்காக சகோதரர் ரமேஷ் (32) என்பவர் நேற்று காலை சென்றுள்ளார். அந்த நேரத்தில் மர்ம கும்பல் 2 பேர் ரமேஷை திடீரென சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதைப் பார்த்த ரமேஷின் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அவர்களின் பிடியில் இருந்து ரமேஷை விடுவிக்க முயன்றனர்.
இதனால், அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் திரண்டதுடன் பதற்ற மான சூழல் நிலவியது. அப்போது, ரமேஷை சுற்றி வளைத்த மர்ம கும்பல் தங்களை கர்நாடக மாநில காவல் துறையினர் என கூறினர்.
அப்போதும், அவர்களின் பிடியில் இருந்து ரமேஷை விடுவிக்க உறவினர்கள் முயன்றனர்.
இந்த தகவலறிந்த தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும், ரமேஷை சுற்றி வளைத்தவர்கள் கர்நாடக மாநிலம் மடிவாளா போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் ஜனார்த்தனன், நாராயணன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ரமேஷின் உறவினர்களை எச்சரித்த போலீசார் அங்கிருந்து அவர்களை அனுப்பினர்.
பின்னர், பாகாயம் போலீஸ் நிலையத்தில் வைத்து கர்நாடக மாநில ேபாலீசார் நடத்திய விசாரணையில் ரமேஷ் மீது மடிவாளா போலீஸ் நிலையத்தில் மட்டும் 18 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பிற போலீஸ் நிலையங்களிலும் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.
இந்த வழக்குகளில் தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற பிடியாணையை காண்பித்தனர். அதன் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்த பிறகு மடிவாளா போலீசாருடன் ரமேசை அனுப்பி வைத்தனர்.
- 40 பவுன் திருடு போனதாக நாடகமாடியது அம்பலம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கொணவட்டம் சக்திநகரை சேர்ந்தவர் என்ஜினீயர். இவர் ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
என்ஜினீயர்
இவரது தாயார் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் சக்தி நகரில் வசித்து வருகின்றனர். இருவரும் கடந்த 31-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வாலாஜாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
2 நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ஆங்காங்கே பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று வீடு, பீரோக்களை பார்வையிட்டு அவருடைய மாமியார் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் 3 வாலிபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஆரணி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 19),வேலூர் முள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்கிற ரஞ்சித் (23) என தெரிய வந்தது.
மேலும் தலைமறைவாக உள்ள சேண்பாக்கம் சூர்யா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப் செல்போன் ஒரு டேப் மற்றும் வெள்ளி கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது.
திருடப்பட்டதாக புகாரில் கூறப்பட்ட 40 பவுன் குறித்து அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் நாங்கள் நகைகள் ஏதும் திருடவில்லை என்று தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் என்ஜினீயரை அழைத்து விசாரணை செய்தனர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அது குறித்து போலீசார் கூறியதாவது:-
என்ஜினீயர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து தனது வீட்டில் 40 பவுன் நகைகள் திருடப்பட்டதாக கூறினார். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் திருடவில்லை என்றனர். தீவிர விசாரணையில் என்ஜினீயர் அவரது நகைகளை விற்பனை செய்து வீடு கட்டி வந்துள்ளார்.
திருட்டு சம்பவம் நடந்த பின்னர் அக்கம் பக்கத்தினர் கூறியதன் பேரில் திருடப்பட்ட பொருளுடன் நகையும் திருடு போனதாக கூறி நாடகமாடி உள்ளது தெரியவந்தது என்று போலீசார் கூறினர்.
- வாலிபர் கைது
- ஜெயிலில் அடைப்பு
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார் வந்ததையடுத்து பள்ளிகொண்டா போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று பள்ளிகொண்டா அடுத்த வடகாத்திபட்டி சுடுகாடு அருகே ரோந்து சென்ற போது பாலாற்றில் இருந்து 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி விற்பனைக்கு எடுத்து சென்றுகொண்டு இருந்தது தெரியவந்தது.
போலீசார் வருவதை கண்டதும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு 5 பேர் தப்பியோடினர்.
இதில் ஒருவரை மட்டுமே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.






