search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of vehicles"

    • முறை கேடாக பயன்படுத்தி வாகங்கள் பறிமுதல்
    • அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை

    திருப்பத்தூர்:

    மத்திய அரசால் மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்ப டுத்தப்பட்டு வருவதை அதிகாரிகள் அவ்வப்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆட்டோ கியாஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக சமையல் கியாஸ் சிலிண்டர்களை முறை கேடாக பயன்படுத்தி வாகங்களை இயக்குவதாக புகார்கள் வந்தன.

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும், வேலூர் துணை போக்குவரத்து ஆணை யர் எம் எஸ் இளங்கோவன், வட்டார போக்குவரத்து அலுவ லர்கள் எம்.பி. காளியப்பன், ராமகி ருஷ்ணன், திருப்பத்தூர், வாணியம்பாடி, மற்றும் செயலாக்கம் (என்போர்ஸ்மேன்ட்) வட்டாரப்போக்குவரத்து அலுவலர் பிரதீபா தலைமையில் கூட்டுத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், விஜயகுமார், சிவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு ஆய்வு செய்ததில் அனுமதிக்கு புறம்பாக சமையல் கியாஸ் சிலிண்டர் பொருத்தி இயக்கிய 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறு கையில், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை பயன்ப டுத்தி ஆட்டோ ஓட்டக்கூ டாது.

    இது போன்ற ஆட்டோக்கள் கண்டறி யப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • குடியாத்தம் நகராட்சி எச்சரிக்கை
    • உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகளை செய்ய அறிவுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நக ராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின் அடிப்படையில் கழிவுகளை அகற்ற விரிவான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

    கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது, மலக்கசடு, கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றுதல் உள்ளிட்டபணிகள் ஒழுங்குப்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 2022-ம் ஆண்டில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் கழிவுநீரை அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    நகராட்சி மூலம் 2 ஆண்டு செல்லுபடியாகும் உரிமம் பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகளை செய்ய வேண்டும். செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும்.

    அவ்வாறு உரிமம் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 வேன், ஜேசிபி இயந்திரம் மீது நடவடிக்கை
    • அபராதம் விதிக்கப்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளான உமராபாத், புறவழிச்சாலை, ரெட்டி தோப்பு, வெங்கிலி உள்ளிட்ட இடங்களில் ஆம்பூர் போக்குவரத்து வட்டார ஆய்வாளர் அமர்நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் உரிமம் இல்லாத 16 ஷேர் ஆட்டோ, 4 வேன், ஜேசிபி இயந்திரம் சரக்கு வாகனங்கள் என 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    ×