search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிமம் பெறாமல் கழிவுகளை அகற்றினால் வாகனங்கள் பறிமுதல்
    X

    உரிமம் பெறாமல் கழிவுகளை அகற்றினால் வாகனங்கள் பறிமுதல்

    • குடியாத்தம் நகராட்சி எச்சரிக்கை
    • உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகளை செய்ய அறிவுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நக ராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின் அடிப்படையில் கழிவுகளை அகற்ற விரிவான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

    கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது, மலக்கசடு, கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றுதல் உள்ளிட்டபணிகள் ஒழுங்குப்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 2022-ம் ஆண்டில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் கழிவுநீரை அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    நகராட்சி மூலம் 2 ஆண்டு செல்லுபடியாகும் உரிமம் பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகளை செய்ய வேண்டும். செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும்.

    அவ்வாறு உரிமம் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×