என் மலர்
வேலூர்
- ஒடுகத்தூர் பகுதியில் நீரோட்ட பாதையை மாற்றி துணிகரம்
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பகுதிகளில் உருவாகும் உத்திரகாவேரி ஆற்றில் 20 கி.மீ தூரம் வரை நடக்கும் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரகாவேரி ஆறு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த மேலரசம்பட்டு முதல் அகரம் வரை உள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் செல்லும் உத்திர காவிரி ஆற்றில் இரவும், பகலுமாக மணல் கொள்ளை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு போலீசார் மூலம் கடும் தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் ஆற்றின் நீரோட்டப் பாதையை மாற்ற மணல்களால் அங்கங்கே தடுப்புகள் ஏற்படுத்தி நீரோட்டப் பாதையை மாற்றி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கடும் பாதிப்புக்குள்ளாகும் என அச்சத்தில் உள்ளனர்.
மேலும் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் ஆற்றங்கரை ஓரங்களில் மணல் கொள்ளை அடிப்பதற்கு என்று தனி பாதை அமைத்தும் உத்திர காவிரி ஆறு முழுவதும் ஆங்காங்கே மணல் குவியல் குவியலாக சேர்த்து அவற்றை பகல் நேரங்களில் சளித்தும் இரவு நேரங்களில் சாவகாசமாக வந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டும் வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவார்கள் என கூறப்படுகிறது.
மேலும் இதேபோன்று கடந்த ஆண்டு உத்திர காவிரி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் வெட்டிய பள்ளங்களில் குளிக்கச் சென்ற 2 சிறு குழந்தைகள் மணல் புதையில் சிக்கி பலியானது அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆற்று மணல் சுரண்டப்படுவதால் நீர்மட்டம் குறைந்து வெயில் காலங்களில் ஒடுகத்தூர் சுற்றுப்பகுதியில் குடிநீருக்கே பஞ்சம் விளைவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் எனவும், விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும் விவசாயிகளுக்கு பொதுமக்களும் வேதனை தெறிவிக்கின்றனர்.
மணல் கொள்ளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டு மழைக்காலங்களில் இதே போல் மணலுக்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் ஆற்றில் குளிக்க போன 2 குழந்தைகள் குழியில் மாட்டி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த 62 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 58). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா சென்ற எட்டியப்பன் குடும்பத்தார் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பினர்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த 62 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து எட்டியப்பன் வேலூர் பாகாயம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- வேலூர் எஸ்.பி. ஆபீசில் பரபரப்பு
- கொடுத்த பணத்தை திருப்பி தராததால் விரக்தி
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தார்வழி பகுதியை சேர்ந்தவர் ஜெயகோபி (வயது 40). இவருக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் கொடுத்து உள்ளார்.
கடனை வாங்கியவர் நீண்ட நாட்களாக திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயகோபி இன்று மதியம் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். நுழைவு வாயிலில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பாட்டிலில் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜெயகோபி மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் அவரை அழைத்துச் சென்றனர். அவர் அறிவுரை வழங்கி அணைக்கட்டு போலீசில் புகார் தெரிவிக்கும் படி ஜெயகோபியை அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விடுதலை சிறுத்தை கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
- வேலூர் விருப்பாட்சிபுரத்தில் பரபரப்பு
வேலூர்:
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வேலூர் விருப்பாட்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சுவர் எழுப்பி அம்பேத்கர் உருவப்படம் வரைய ஏற்பாடு செய்து வந்தனர்.
உருவப்படம் வரைவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி அணைக்கட்டு தொகுதி பொறுப்பாளர் கோட்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :-
அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவப்படத்தை வரைந்து பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்துள்ளோம்.
ஆனால் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுவரில் படம் வரையாமல் நிறுத்தி வைத்துள்ளோம்.
எங்களுக்கு படம் வரைய அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
- காளை விடும் விழாவில் ேசாகம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருக்கு மஞ்சுளா என்ற மனைவும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் பாகாயம் அடுத்த மேட்டுஇடையம் பட்டியில் நடந்த மாடு விடும் விழாவை காண ஏழுமலை சென்றிருந்தார்.
அப்போது ஒரு காளை திடீரென ஏழுமலையை முட்டியது. இதில் மார்பு, கழுத்துப்பகுதியில் மாட்டின் கொம்பு குத்தி ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த ஏழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர்
- தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து கடைகளுக்கும் சரிசமமாக வழங்க வலியுறுத்தல்
வேலூர்:
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மண்டலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 116 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.
இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.73 கோடி வரை மதுபானங் கள் விற்பனை நடக்கிறது. நடப்பாண்டு கோடை காலம் தொடங்கி உள்ள தால் பீர் வகைகளின் விற்பனை வழக்கத்தை விட 75 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற ஹாட் மதுபானங்களின் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை காலத்தில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் பீர் வகைகள் வாங்க வேண்டி டாஸ்மாக் கடைகளில் மதியம், மாலை நேரங்களில் குடிமகன்கள் அதிகம் கூடுகின்றனர். இதைத்தவிர வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் லோடுகள் வந்து இறங்கிய அடுத்த சில மணி நேரங்களிலேயே அனைத்தும் விற்பனையாகி விடுகிறது. பீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கடைகளில் சில குறிப்பிட்ட நிறுவன பீர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கோடைக்காலம் என்பதால் பீர் வகைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பவேண்டும். கடைகளுக்கு எவ்வித பாகுபாடு இல்லாமல் மதுபானங்கள் சராசரியாக இறக்குமதி செய்ய வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
- தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர், மாவட்ட செயலாளர்கள் சென்றனர்
- அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டிருந்தார்
வேலூர்:
அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறான பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவதூறான பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக பொள்ளாச்சி அருண்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமாரை பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரையின்படி மதுரை மண்டல அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.
பின்னர் வேலூர் கோர்ட்டில் அருண்குமாருக்கு ஜாமீன் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
- அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்
- கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பெரிய ஊனை ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் வீடுகட்ட தலா ரூ.3 லட்சம் வீதம் 15 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான அரசானை வழங்கி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலெக்டர்குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.வெங்கடேசன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கினார்.
- 8 வயதிலேயே இருதய அறுவை சிகிச்சை செய்த சோகம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிப்பாளையம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் அறுவடை செய்வதற்காக அறுவடை எந்திரத்தை வரவ ழைத்தருந்தன.
இதில் திருவண்ணாமலை மாவட்டம், மேல் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 23) என்பவர் நெல் அறுக்கும் எந்திரந்தை ஓட்டி வந்தார்.
நெல் அறுவடை செய்து கொண்டிருக்கும் போது திடீரென தினேஷ் குமாருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தினேஷ் குமார் 8 வயதிலேயே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் தான் இறந்திருக்கலாம் என கூறுகின்றன.
மேலும் இது சம்பந்தமாக தினேஷ் குமார் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ேமலும் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நோய் தடுப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
- மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
வேலூர்:
பழைய காட்பாடி பகுதியை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவர் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபருக்கு திடீ ரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக அவர் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டார். ஆனாலும் குணமடையவில்லை. அதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவம னையில் சிகிச்சை பெற்றார்.
அங்கு வாலிபரின் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோ தனை செய்யப்பட்டது. அதன்முடிவில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வாலிப ருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரின் வீடு மற்றும் அந்த பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, நோய் தடுப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- பூங்காவை திறக்க கோரிக்கை
வேலூர்:
வேலூர் கோட்டை வெளியே அகழியை ஒட்டி பெரியார் பூங்கா செயல்பட்டு வந்தது. வேலூர் மாநகர் மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்தது. இந்தநிலையில் பெரி யார் பூங்கா மூடப்பட்டது. பல மாதங்கள் ஆனதால் பூங்கா வில் ஆங்காங்கே செடி கொடிகள் முளைத்தன. பசுமையாக காணப்பட்ட புற்கள் காய்ந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் பூங்காவில் மர்மநபர்கள் அடிக்கடி தீவைக் கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து செடிகள் கருகி விட்டது. மேலும் மரங்களும் சேதமடைந்துள்ளது.
தீவைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில் பெரியார் பூங்காவையும் திறப்பதற்கான நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வேலூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பேட்டி
- பிரதமர் மோடியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை
வேலூர்:
வேலூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொன்னேரி துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி மன்னர் ஆட்சியை போல் செயல்படுகிறார். ஜனநாயகத்தின் குரல் வலையை நெரிக்கிறார்.ராகுல்காந்தி நாட்டு மக்களுக்காக பல்வேறு கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பியதை பொறுக்க முடியாத மோடி ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்துள்ளார்.
இதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.பிரதமரின் நண்பரான அதானியும், அம்பானியும் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள்.ஏழை மக்களுக்கு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை.
100 நாள் வேலை திட்டத்தில் கூட நிதியை குறைத்துவிட்டார்கள்.இதனால் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.நேற்று பிரதமரை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை.
பிரதமருக்கு அரசியல் நாகரீகத்துடன் வரவேற்பளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் டீக்காராமன் உடனிருந்தார்.






