என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடை வெயில் சுட்டெரிப்பால் பீர் விற்பனை அமோகம்
- வேலூர் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர்
- தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து கடைகளுக்கும் சரிசமமாக வழங்க வலியுறுத்தல்
வேலூர்:
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மண்டலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 116 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.
இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.73 கோடி வரை மதுபானங் கள் விற்பனை நடக்கிறது. நடப்பாண்டு கோடை காலம் தொடங்கி உள்ள தால் பீர் வகைகளின் விற்பனை வழக்கத்தை விட 75 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற ஹாட் மதுபானங்களின் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை காலத்தில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் பீர் வகைகள் வாங்க வேண்டி டாஸ்மாக் கடைகளில் மதியம், மாலை நேரங்களில் குடிமகன்கள் அதிகம் கூடுகின்றனர். இதைத்தவிர வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் லோடுகள் வந்து இறங்கிய அடுத்த சில மணி நேரங்களிலேயே அனைத்தும் விற்பனையாகி விடுகிறது. பீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கடைகளில் சில குறிப்பிட்ட நிறுவன பீர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கோடைக்காலம் என்பதால் பீர் வகைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பவேண்டும். கடைகளுக்கு எவ்வித பாகுபாடு இல்லாமல் மதுபானங்கள் சராசரியாக இறக்குமதி செய்ய வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.






