என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரமுகர்கள் சந்திப்பு"

    • தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர், மாவட்ட செயலாளர்கள் சென்றனர்
    • அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டிருந்தார்

    வேலூர்:

    அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறான பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவதூறான பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக பொள்ளாச்சி அருண்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமாரை பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரையின்படி மதுரை மண்டல அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    பின்னர் வேலூர் கோர்ட்டில் அருண்குமாருக்கு ஜாமீன் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    • ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் கூட இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
    • அமித்ஷா 2020 -ம் ஆண்டில் முக்கிய விளையாட்டு, திரைப்படம் மற்றும் ஊடகப் பிரமுகர்களைச் சந்தித்ததன் மூலம் மாநிலத்தில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்.

    திருப்பதி:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஐதராபாத் வருகிறார். இன்று மாலை 2,000-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

    ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் கூட இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    முக்கிய மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற துணை வேந்தர்கள், முன்னாள் ஐஏஎஸ் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அமித்ஷா 2020 -ம் ஆண்டில் முக்கிய விளையாட்டு, திரைப்படம் மற்றும் ஊடகப் பிரமுகர்களைச் சந்தித்ததன் மூலம் மாநிலத்தில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்.

    இதனிடையே, மத்திய உணவுத் துறை மந்திரி பியூஷ் கோயல் அக்டோபர் 14-ஆம் தேதி செரிலிங்கம்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியிலும், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அக்டோபர் 16-ந்தேதி ஹுசூராபாத் மற்றும் மகேஸ்வரம் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜி பிரேமேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×