என் மலர்
வேலூர்
- தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்தது
- வனத்துறை அலுவலர்கள் பிரேத பரிசோதனை செய்து உடல் அடக்கம் செய்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வழித் தவறி வந்த 2 ஆண் புள்ளி மான்கள் சேர்ப்பாடி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்தது,
இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர். உடனடியாக வனத்துறை தீயணைப்பு துறையினற்க்கு தகவல் அளித்தனர்.
தகவல் அடிப்படையில் வந்த ஒடுகத்தூர் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர். கிணற்றில் இருந்த 2 புள்ளி மான்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இதில் ஒரு மான் கிணற்றிலேயே இறந்து விட்டது. மற்றொரு மான் படுகாயமடைந்து நிலையில் வனத்துறையினர். அதற்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த மானும் இறந்துவிட்டன.
இறந்த 2 மான்களையும் ஒடுகத்தூர் வனத்துறை வனச்சரகர் இந்து, வனவர் பிரசன்ன குமார் வனக்காப்பாளர் மணிவாசுகி ஆகியோர் பெற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வனத்துறை அலுவலகத்தில் அடக்கம் செய்தனர்.
- திருநெல்வேலியை சேர்ந்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்
- தனிப்படை போலீசார் விசாரணை
வேலூர்
வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் செயல்படுகிறது. இங்கு குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 6 சிறுவர்கள் காவலாளிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பிய வர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சேலத்தில் உள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நேற்று முன்தினம் ஒரு சிறுவன் சரண் அடைந்தான்.
பின்னர் அந்த சிறுவன் செங்கல்பட்டில் உள்ள சீர்திருத்த பள்ளியில் தங்க வைக்கப்பட்டான். திருநெல்வேலியை சேர்ந்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
- தலைமை தபால் நிலையத்தில் ஆயிரம் கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
- ராகுல் காந்தியின் பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டம் அனைவருக்கும் சமம் நிர்வாகிகள் கூறினர்
வேலூர்:
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வேலூர் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்கா ராமன் தலைமையில் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு வேலூர் தலைமை தபால் நிலையத்தில் ஆயிரம் கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
ஐஎன்டி யூசி மாவட்ட தலைவர் பிரேம்குமார், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் வாஹித் பாஷா, ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் நோபல் லிவிங்ஸ்டன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கடிதங்களை அனுப்பினர்.
அந்த கடிதத்தில் ராகுல் காந்தியின் பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டம் அனைவருக்கும் சமம் என கடிதத்தில் தெரிவித்துள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.
- எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை மலைக்கு நேற்று இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றார்.
மலை உச்சிக்கு சென்ற அவர் திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதில் வாலிபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை மலைக்கு சென்றவர்கள் வாலிபர் பிணம் இருப்பதைக் கண்டு மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காதல் தோல்வியில் வாலிபர் மலையில் இருந்து குதித்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? வேறு யாராவது வாலிபரை மலையில் இருந்து தள்ளி கொலை செய்தார்களா அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடுகளுக்கு மருந்து தெளிப்பு
- 4 பேருக்கு பாதிப்பு
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரை சேர்ந்த 70 வயது முதியோருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று பரிசோதனையில் தெரிய வந்தது.
கொரோனா மீண்டும் பரவல்
இதையடுத்து அவரை சுகாதாரத்துறை ஊழியர்கள் முதியவரையும் அவரது குடும்பத்தாரையும் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று பரவல் இருப்பது தெரியவந்தது. மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா தொற்று பரவிய வீட்டிற்கு இன்று காலை கிருமி நாசினி தெளித்தனர்.
இதேபோல் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவருக்கும் தொற்று பரவி இருப்பது தெரிய வந்தது. அவரது முகவரிக்குச் சென்ற சுகாதாரத் துறை ஊழியர்கள் நர்ஸ் வீட்டில் இல்லாததும் அவர் சென்னையிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதும் தெரியவந்தது.
கிருமி நாசினி தெளிப்பு
வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவில் வேலை செய்யும் ஆண் ஊழியர் ஒருவருக்கும் தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
- மிரண்டு ஓடிய பெண் கீழே விழுந்து படுகாயம்
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். இவரது மனைவி கோகிலா (வயது 51). இவர்களுக்கு சொந்தமாக எருக்கம்பட்டு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.
இதில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் அறுவடை பணி நடப்பதால் இதனை பார்ப்பதற்காக இன்று காலை 6 மணியளவில் சென்றனர். பின்னர் விவசாய நிலத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர்.
அப்போது ஆந்திர வனப்பகுதியில் இருந்து பத்தல பல்லி அஹவுசிங் போர்டு வழியாக எருக்கம்பட்டு ஊருக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்து வயல் வழியாக வந்து கொண்டிருந்தது.
இதனைக் கண்ட கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
பின்னர் அவர்களை யானை துரத்தியதால் கணவன், மனைவி இருவரும் அச்சமடைந்து வயல்வெளியில் உள்ள ஒற்றையடி பாதையில் ஓடினர். இதில் கோகிலா முட்புதரில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
இவரது கூச்சல் சத்தம் கேட்டு வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து பட்டாசு வெடித்து யானையை துரத்தினர்.
படுகாயம் அடைந்த கோகிலாவை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானை ஊருக்குள் வந்த போது வாழை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தியது. மற்றும் பயிரிடப்பட்ட நெல்களை மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை குள்ளாயினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இந்த ஒற்றை யானை அடிக்கடி ஆந்திரா பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் புகுந்து பொதுமக்களை அச்சப்படுத்தி வயல்வெளிகளில் சென்று பயிடப்பட்டுள்ள நெற்பயிர்களையும் சேதப்படுத்துகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்தில் இதுவரை ரூ.8.5 கோடி அளவில் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கியிருக்கிறது.
- உயர் கல்வியில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக உள்ளது.
வேலூர்:
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தினவிழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கே விருது வாங்கியவர்களில் மாணவிகள் தான் அதிகமாக இருந்தனர். இது பாராட்டப்பட வேண்டியது. மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் பங்கெடுக்க வேண்டும். இது உங்கள் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உள்ள 4 வளாகங்களிலும் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு எண்ணிக்கை மட்டும் அல்ல கல்வியில் தரமும் இருக்கிறது. அதனால் தான் இந்திய அளவிலும், உலகளவிலும் சிறந்து விளங்குகிறோம்.
உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடத்தை பிடிக்க வி.ஐ.டி முயற்சி மேற்கொண்டுள்ளது. வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கடந்த ஆண்டு 970 கம்பெனிகள் வந்தது. இந்த ஆண்டு இதுவரை 820 கம்பெனிகள் மூலம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்தில் இதுவரை ரூ.8.5 கோடி அளவில் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கியிருக்கிறது. இதில் 50 சதவீதம் வி.ஐ.டி பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
உயர் கல்வியில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக உள்ளது. உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
புதிய கண்டுபிடிப்புகள் மாணவர்கள் புதிய, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். வி.ஐ.டி பல்கலைக்கழகம் சிறந்த நிர்வாகம், கல்வியின் மூலம் சாதனை படைத்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் முக்கிய காரணம். வி.ஐ.டி.யில் படிப்பது மாணவர்களுக்கு ஒரு பெருமையாகும். படிக்கும் போது மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும்.
ஆராய்ச்சி இல்லாமல் உயர் கல்வி சாத்தியம் இல்லை. நாம் எவ்வளவு ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்பது முக்கியம். இப்போது ஆராய்ச்சிக்கு என மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக தான் உள்ளது.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களை ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். என்ஜினீயரிங் மாணவர்களால் தான் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கமுடியும்.
இவ்வாறு அவர்பேசினார்.
விழாவில் காக்னிசன்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் மாயா ஸ்ரீகுமார் பல்கலைக்கழக துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லீக். விளையாட்டு துறை இயக்குனர்தியாகசந்தன் உள்பட பலர் பேசினர். முன்னதாக பதிவாளர் ஜெயபாரதி வரவேற்றார். வைபஞ்சர்மா நன்றி கூறினார்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று அக்கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா(43), சதாம்(26), அவரது தம்பி காதர்பாஷா(19) ஆகிய 3 பேரை போலீசார் கைது
செய்தனர்.
மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 60 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து கஞ்சா விற்பனையில் தொடர் புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- போலீசார் விசாரணை
கே.வி.குப்பம்:
கே.வி. குப்பம் பகுதியை சேர்ந்த வர் ஷீலா(40). இவர் நேற்று காலை கே.வி.குப்பம் ஊராட்சி மன்ற அலுவல கம் அருகே சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பி.கே.புரம் ஊராட்சி நீலகண்ட பாளையத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாண வன் ஓட்டி வந்த பைக் ஷீலா மீது மோதியது. இதில், ஷீலா மற்றும் மாணவன் இருவ ரும் படுகாயமடைந்தனர்.
விபத்தை கண்ட பொது மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பொதுத்தேர்வு நடந்து வருவதால் நேற்று காலை வீட்டில் இருந்து தேர்வு எழுத பள்ளிக்கு பைக்கில் வந்த மாணவன், கே.வி. குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள மற்றொரு மாணவரை அழைத்து வர பைக்கில் சென்றபோது விபத்துக் குள்ளானது தெரியவந்தது.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- டி.ஐ.ஜி. முத்துசாமி பேட்டி
- புதிதாக பேரிகார்டுகள், சாலை பாதுகாப்பு கூம்புகள் அமைக்கப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விபத்துகளை தடுக்கும் வகையில் புதிதாக பேரிகார்டுகள், சாலை பாதுகாப்பு கூம்புகள் வாங்கப்பட்டுள்ளன. இதனை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து போலீஸ் நிலையங்களின் ரோந்து இருசக்கர வாகனங்களையும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அப்போது டி.ஐ.ஜி. முத்துசாமி, சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் ஒளி பிரதிபலிப்பான்கள் உள்ளிட்டவை பழுது ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021, 2022 -ம் ஆண்டுகளில் அதிக விபத்து ஏற்பட்டன. இது கடந்த காலங்களை விட15 சதவீத விபத்துகள் அதிகமாகும். இதையடுத்து போலீசார் சார்பில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஏன்? விபத்துகள் நடக்கிறது என்பதை கண்டறிய ஆலோசனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் ஜனவரி மாதம் 95 விபத்துகளும், பிப்ரவரி மாதம் 89 விபத்துகளும், மார்ச் மாதம் 73 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
இதன் மூலம் விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளதை காண முடிகிறது.
ஜனவரி மாதம் 26 பேரும், பிப்ரவரி மாதம் 18 பேரும், மார்ச் மாதம் 16 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.விபத்துகள் ஏற்படவும், உயிரிழப்புகள் அதிக ஏற்படவும் அதிக காரணம் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதே. விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு உபகரணங்கள் தேவை. வேலூர் மாவட்டத்தில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 485 பேரிகார்டுகளும், சாலை பாதுகாப்பு கூம்புகளும் வாங்கப்பட்டுள்ளன.
இந்த பேரிகார்டுகள் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்களை தடுக்கும் வகையில் ஆங்காங்கே சாலையில் வைக்கப்பட உள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூரில் இயங்கி வந்த 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விபத்து ஏற்பட்டால் உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வந்தன. தற்போது அவர்களுக்கு கூடுதலாக விபத்துகள் ஏற்படாத வகையில் பணி மேற்கொள்ளவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது இவர்கள் வழக்குப்பதிவு செய்ய மாட்டார்கள்.அவர்கள் குறைந்தது போக்குவரத்து விதிகளை மீறும் 100 பேரை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 53 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் காவல்துறையும் வி.ஐ.டி. யும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு எதனால் விபத்து ஏற்படுகிறது, விபத்தை எவ்வாறு தடுக்கலாம் என்பது உள்ளிட்டவை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வேலூர் சரகத்தில் விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளது, உயிரிழப்புகளும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
விபத்துகள் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. எனவே வேலூர் சரகத்தில் அனைத்து காவலர்களும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் கண்ணில் படும்படியாக சாலையில் நின்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடபட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் மட்டும் 16 சதவீதம் விபத்துகளால் ஏற்படும் மரணம் குறைந்துள்ளது. போக்கு வரத்து விதிகளை மீறுபவ ர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்க வேண்டும்.
வெளிமாநில குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் ரோந்து வாகனங்கள் அதிகப்படுத்தி உள்ளோம்.
மேலும் ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில் ஒப்பிடும்போது மார்ச் மாதம் குற்ற வழக்குகள் குறைந்துள்ளன.
கிராமங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அகரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் சுமார் 900 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்க படிக்கும் மாணவர்கள் அணைக்கட்டு மாதனூர், மேலரசம்பட்டு, வேலூர், ஒடுகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் கல்லூரிக்கு அரசு பஸ்களில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி செல்லும் போதும், வீட்டிற்க்கு செல்லும் போதும் பஸ்களில் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிய வாரும் ஓடிக்கொண்டே ஏரியும் வீர சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவிகள் இடத்தில் தங்களை ஹீரோவாக காட்டிக் கொள்வதற்காக மாணவர்கள் இதுபோன்ற பயணத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் மேற்கொள்வதால் கல்லூரி மாணவர்களுக்கு பேராபத்து ஏற்பட்டு முன் இதனை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே கல்லூரி விடும் நேரங்களில் போலீசார் மாணவர்களை கட்டுப்படுத்தி அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதிப்பெண் விவரங்கள் அரசுத்தேர்வுகள் துறையின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
- கல்வித் துறை தகவல்
வேலுார்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி முதல் இம்மாதம் 3ம் முடிவுகள், மே 5-ந் தேதி வெளியாகும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்றவாறு, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, நேற்று தொடங்கியது. வேலுார் செயின்ட் மேரீஸ் மேல்நி லைப்பள்ளி, குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில், முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, உதவி தேர்வாளர்கள் இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர, அட்டவணையாளர், மதிப் பெண் சரிபார்க்கும் அலுவ தேதி வரை நடந்தது. இதன்லர் ஆகியோரும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதன்மூலம், விடைத் தாள் திருத்தும் பணியில் ஆயிரத்துக்கும் அதிகமான வ முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். அதோடு, ஒவ்வொரு நாளும் விடைத் தாள் திருத்தும் பணி முடிந்ததும், மதிப்பெண் விவரங்கள் அட்டவணைப்படுத் தப்பட்டு சரிபார்க்கப்படும்.
பின்னர், மதிப்பெண் விவரங்கள், அரசுத்தேர்வுகள் துறையின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.






