என் மலர்
நீங்கள் தேடியது "வயல் வெளியில் புகுந்த ஒற்றை யானை"
- மிரண்டு ஓடிய பெண் கீழே விழுந்து படுகாயம்
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். இவரது மனைவி கோகிலா (வயது 51). இவர்களுக்கு சொந்தமாக எருக்கம்பட்டு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.
இதில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் அறுவடை பணி நடப்பதால் இதனை பார்ப்பதற்காக இன்று காலை 6 மணியளவில் சென்றனர். பின்னர் விவசாய நிலத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர்.
அப்போது ஆந்திர வனப்பகுதியில் இருந்து பத்தல பல்லி அஹவுசிங் போர்டு வழியாக எருக்கம்பட்டு ஊருக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்து வயல் வழியாக வந்து கொண்டிருந்தது.
இதனைக் கண்ட கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
பின்னர் அவர்களை யானை துரத்தியதால் கணவன், மனைவி இருவரும் அச்சமடைந்து வயல்வெளியில் உள்ள ஒற்றையடி பாதையில் ஓடினர். இதில் கோகிலா முட்புதரில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
இவரது கூச்சல் சத்தம் கேட்டு வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து பட்டாசு வெடித்து யானையை துரத்தினர்.
படுகாயம் அடைந்த கோகிலாவை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானை ஊருக்குள் வந்த போது வாழை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தியது. மற்றும் பயிரிடப்பட்ட நெல்களை மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை குள்ளாயினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இந்த ஒற்றை யானை அடிக்கடி ஆந்திரா பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் புகுந்து பொதுமக்களை அச்சப்படுத்தி வயல்வெளிகளில் சென்று பயிடப்பட்டுள்ள நெற்பயிர்களையும் சேதப்படுத்துகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.






