search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது- டெல்லி ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பேச்சு
    X

    உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது- டெல்லி ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பேச்சு

    • அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்தில் இதுவரை ரூ.8.5 கோடி அளவில் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கியிருக்கிறது.
    • உயர் கல்வியில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக உள்ளது.

    வேலூர்:

    வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தினவிழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.

    விழாவிற்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இங்கே விருது வாங்கியவர்களில் மாணவிகள் தான் அதிகமாக இருந்தனர். இது பாராட்டப்பட வேண்டியது. மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் பங்கெடுக்க வேண்டும். இது உங்கள் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உள்ள 4 வளாகங்களிலும் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு எண்ணிக்கை மட்டும் அல்ல கல்வியில் தரமும் இருக்கிறது. அதனால் தான் இந்திய அளவிலும், உலகளவிலும் சிறந்து விளங்குகிறோம்.

    உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடத்தை பிடிக்க வி.ஐ.டி முயற்சி மேற்கொண்டுள்ளது. வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கடந்த ஆண்டு 970 கம்பெனிகள் வந்தது. இந்த ஆண்டு இதுவரை 820 கம்பெனிகள் மூலம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்தில் இதுவரை ரூ.8.5 கோடி அளவில் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கியிருக்கிறது. இதில் 50 சதவீதம் வி.ஐ.டி பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    உயர் கல்வியில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக உள்ளது. உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    புதிய கண்டுபிடிப்புகள் மாணவர்கள் புதிய, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். வி.ஐ.டி பல்கலைக்கழகம் சிறந்த நிர்வாகம், கல்வியின் மூலம் சாதனை படைத்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் முக்கிய காரணம். வி.ஐ.டி.யில் படிப்பது மாணவர்களுக்கு ஒரு பெருமையாகும். படிக்கும் போது மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும்.

    ஆராய்ச்சி இல்லாமல் உயர் கல்வி சாத்தியம் இல்லை. நாம் எவ்வளவு ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்பது முக்கியம். இப்போது ஆராய்ச்சிக்கு என மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாக தான் உள்ளது.

    கல்வி நிறுவனங்கள் மாணவர்களை ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். என்ஜினீயரிங் மாணவர்களால் தான் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கமுடியும்.

    இவ்வாறு அவர்பேசினார்.

    விழாவில் காக்னிசன்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் மாயா ஸ்ரீகுமார் பல்கலைக்கழக துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லீக். விளையாட்டு துறை இயக்குனர்தியாகசந்தன் உள்பட பலர் பேசினர். முன்னதாக பதிவாளர் ஜெயபாரதி வரவேற்றார். வைபஞ்சர்மா நன்றி கூறினார்.

    Next Story
    ×