என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பிய சிறுவன் சேலத்தில் சரண்
- திருநெல்வேலியை சேர்ந்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்
- தனிப்படை போலீசார் விசாரணை
வேலூர்
வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் செயல்படுகிறது. இங்கு குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 6 சிறுவர்கள் காவலாளிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பிய வர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சேலத்தில் உள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நேற்று முன்தினம் ஒரு சிறுவன் சரண் அடைந்தான்.
பின்னர் அந்த சிறுவன் செங்கல்பட்டில் உள்ள சீர்திருத்த பள்ளியில் தங்க வைக்கப்பட்டான். திருநெல்வேலியை சேர்ந்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






