என் மலர்
நீங்கள் தேடியது "Sent a letter to the Prime Minister and protested"
- தலைமை தபால் நிலையத்தில் ஆயிரம் கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
- ராகுல் காந்தியின் பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டம் அனைவருக்கும் சமம் நிர்வாகிகள் கூறினர்
வேலூர்:
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வேலூர் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்கா ராமன் தலைமையில் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு வேலூர் தலைமை தபால் நிலையத்தில் ஆயிரம் கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
ஐஎன்டி யூசி மாவட்ட தலைவர் பிரேம்குமார், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் வாஹித் பாஷா, ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் நோபல் லிவிங்ஸ்டன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கடிதங்களை அனுப்பினர்.
அந்த கடிதத்தில் ராகுல் காந்தியின் பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டம் அனைவருக்கும் சமம் என கடிதத்தில் தெரிவித்துள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.






