என் மலர்
நீங்கள் தேடியது "Corona spread in Vellore"
- வீடுகளுக்கு மருந்து தெளிப்பு
- 4 பேருக்கு பாதிப்பு
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரை சேர்ந்த 70 வயது முதியோருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று பரிசோதனையில் தெரிய வந்தது.
கொரோனா மீண்டும் பரவல்
இதையடுத்து அவரை சுகாதாரத்துறை ஊழியர்கள் முதியவரையும் அவரது குடும்பத்தாரையும் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று பரவல் இருப்பது தெரியவந்தது. மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா தொற்று பரவிய வீட்டிற்கு இன்று காலை கிருமி நாசினி தெளித்தனர்.
இதேபோல் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவருக்கும் தொற்று பரவி இருப்பது தெரிய வந்தது. அவரது முகவரிக்குச் சென்ற சுகாதாரத் துறை ஊழியர்கள் நர்ஸ் வீட்டில் இல்லாததும் அவர் சென்னையிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதும் தெரியவந்தது.
கிருமி நாசினி தெளிப்பு
வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவில் வேலை செய்யும் ஆண் ஊழியர் ஒருவருக்கும் தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.






