என் மலர்
வேலூர்
- 2 மணி நேரத்தில் சிக்கினர்
- சுவர் ஏறி குதித்து துணிகரம்
வேலூர்:
வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் அடைக் கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் 2-வது முறையாக நேற்று மீண்டும்தப்பிச்சென் றனர்.
சமூகநலத்துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப் படும் 18 முதல் 21 வயதுக்குட் பட்ட இளைஞர்கள் அடைக்கப் படுகின்றனர்.
21 வயதிற்கு பிறகு அவர்கள் வழக்கமான சிறைச் சாலைக ளுக்கு மாற்றப்படுவர். அதன் படி, வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 42 இளைஞர்கள் அடைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 5 இளை ஞர்கள் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றனர்.
இந்த தகவலறிந்ததும் பாதுகாப்பு இல்லத்தில் அடைக்கப்பட் டிருந்த மற்ற இளைஞர்கள் கட்டிடம் மீது ஏறி தகராறில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரா ஜேஷ்கண்ணன், துணைசூப்பிரண்டு திருநாவுக் கரசு தலைமையில் போலீசார் பாதுகாப்பு இல்லம் முன்பு குவிக் கப்பட்டதுடன், தப்பியோடிய இளைஞர்களை தேடும் பணியில் போலீசார் துரிதமாக ஈடுபட்டனர்.
தப்பிச் சென்ற 5 இளைஞர்களையும் அடுத்த 2 மணிநேரத்திற்குள் போலீசார் மடக்கிப் பிடித்த னர்.
இச்சம்பவத்தை அடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கோட்டாட் சியர் கவிதா தலைமையில் வரு வாய்த்துறை, சமூக நலத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு இல் லத்திற்கு நேரில் சென்று விசா ரணை நடத்தியதுடன், அங்கு தகராறில் ஈடுபட்டிருந்த மற்ற இளைஞர்களை சமாதானம் செய்யும் நடவடிக்கையிலும் ஈடு பட்டனர்.
இதே அரசு பாதுகாப்பு இல் லத்தில் இருந்து 17 வயது சிறு வன் உள்பட 6 இளைஞர்கள் கடந்த மார்ச் 27-ந் தேதி இரவு பணியில் இருந்த பாது காப்பு இல்ல கண்காணிப்பா ளர், துணை கண்காணிப்பாளர், தலைமை பாதுகாவலர் உள்பட 5 பேரை தாக்கிவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றனர்.
இந்த தாக்குதலில் பாதுகாவலர் குமாரவேலுக்கு பலத்த காய மும், மற்ற 4 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. தப்பிச் சென்றவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு சிறுவன் உள் பட 4 இளைஞர்கள் சென்னை யில் கைது செய்யப்பட்டனர்.
ஒரு இளைஞர் சேலத்தில் இளஞ்சிறார் நீதிக்குழும நீதிபதி முன்பு சரணடைந்தார். தலைம றைவாக உள்ள மற்றொரு இளை ஞரை போலீசார் தேடி வருகின் றனர்.
இந்நிலையில், வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து நேற்று மீண்டும் 5 இளைஞர்கள் தப்பிச்சென்று பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றிய தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காட்பாடி ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது,
காட்பாடி ஒன்றிய துணைத் தலைவர் கோவிந்தன் முன்னிலையில் சேனூர் மந்தவெளியில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கும், ஜாப்ராபேட்டையில் உள்ள உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் பழரசம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய நிர்வாகி குமார், வினோத்குமார் சேனூர் கவுரவத் தலைவர் அசோக்குமார், செயலாளர் நவீன் குமார், ஜாப்ராப்பேட்டை மன்ற தலைவர் வெங்கடேசன், பொருளாளர் பார்த்திபன், அஜித்குமார் மற்றும் திரளான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை
- தலைமறைவாக உள்ள 3 ேபரை பிடிக்க தீவிரம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 38).
இவர், அதே பகுதியில் வழக்கறிஞர் கார்த்தி என்பவரின் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.
வெட்டுவானம் அம்பேத்கர் நகரில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி விஜய் நேற்று காலை காரில் புறப்பட்டார். அப்போது, அவரை வழி மடக்கிய கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விஜய், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் விஜய்யை கத்தியால் வெட்டியதாக சுதர்சன், பாரத், சரத்குமார், பழனி, ஜெயபிரகாஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள சரண்ராஜ், பன்னீர்செல்வம் அவரது மனைவி வடிவழகி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதில் ஏற்பட்ட தகராறில் பன்னீர் தரப்பினர் வழக்கறிஞர் கார்த்தியின் கார் டிரைவரான விஜய்யை கொலை செய்ய முயன்றுள்ளனர்" என்று போலீசார் தெரிவித்தனர். இது ெதாடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகர மன்ற தலைவர் ஆய்வு
- 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் ஆற்றின் இருபக்கமும் கரைகளிலும் சுமார் 1500-க்கும் அதிகமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன அந்த வீடுகளை கடந்தாண்டு அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆற்றின் இருபுற கரைகளிலும் வெள்ள தடுப்பு சுவர் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆற்றின் கரையின் இரு பகுதியிலும் ராட்சத எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் சீர் செய்யும் பணிகளும் தொடர்ந்து வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை நேற்று குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை பணி மேற்பார்வையாளர் சிவாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வசந்தாஆறுமுகம், மகாலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 2 பக்க கரைகளில் தலா 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது சுமார் 5 மீட்டர் உயரத்திற்கும் 7 மீட்டர் அகலத்திற்கும் இந்த வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.
- பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம்சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. நேற்று காலை தண்ணீர் தேடி சுமார் 2 வயது உள்ள பெண் புள்ளிமான் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாகவே வந்துள்ளது .
அப்போது நாய்கள் துரத்தியதால் பயந்துபோன மான் குடியாத்தம் போடிப்பேட்டை நீரேற்று நிலையம் அருகே வந்தது.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த மானை பத்திரமாக மீட்டு குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா உத்தரவின் பேரில் வனத்துறையினர் விரைந்துசென்று அந்த மானை மீட்டு கல்லப்பாடி காப்புக்காடுகள் பகுதியில் விட்டனர். தற்போது கோடைகாலம் துவங்கி விட்டதால் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் வனவி லங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து விடுகிறது கடந்த சில தினங்களுக்கு முன்பும் தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று குடியாத்தம் நகருக்குள் நுழைந்தது.
வனத்துறையினர் உடனடியாக தனி கவனம் செலுத்தி வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிறப்பு மிக்க ராமபிரான் கோவில் உள்ளது.
இங்கு அனைத்து விஷேச தினங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இதனைதொடர்ந்து இன்று தமிழ்வருட பிறப்பு முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி உடன் கோவில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு தவன பந்தலின் கீழ் ஸ்ரீ ராமசுவாமிக்கு விசேஷ பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சந்தனத்தால் ஸ்ரீ கல்யாண ராமர் திருக்கோல விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பன்னீர் புஷ்பத்தால் விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டு ராஜோபசார பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையானது நடைபெற்றது.
இதில் நெல்வாய் சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்.
- காவிரி-குண்டாறு இணைப்பை நாங்கள் தான் செய்து வருகிறோம்.
- கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. நிச்சயம் காவிரி-குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும் என்றார்.
வேலூர்:
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதைதொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் உள்ள பெரும் தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அதை நான் பார்க்கவில்லை, எனக்கு அது தெரியாது. இதையெல்லாம் அரசியலுக்காக அவர் செய்கிறார்.
காவிரி-குண்டாறு இணைப்பை நாங்கள் தான் செய்து வருகிறோம். வெளிநாட்டில் நிதி வாங்கி பணிகளை செய்து வருகிறோம்.
தற்போது கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. நிச்சயம் காவிரி-குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும் என்றார்.
- விவசாயிகள் புகார்
- நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் துணை தாசில்தார் சுகுமார் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
தேர்தல் வாக்குறுதிகள் கூறியபடி நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் பணிகள் பாதிப்பு அடைகிறது.
எனவே ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். விவசாய நிலங்களை அளப்பதற்கு ரூ.800 கட்டணமாக வசூலிக்கின்றனர்.
இதனால் பாமர ஏழைகள் பாதிப்பு அடைகின்றனர். எனவே நில அளவைக் கட்டணத்தை குறைக்க வேண்டும். புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் விடாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதால் அவற்றை சீரமைக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வழங்குவது போல் விவசாயிகளுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்வது இல்லை அதேபோல் குறைத்தீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
- தமிழியக்கம் சார்பில் நடந்தது
- வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் பங்கேற்பு
குடியாத்தம்: ஏப்.13-
குடியாத்தம் அபிராமி மகளிர் கல்லூரியில் தமிழியக்கம் வேலூர் மாவட்ட கிளை, அபிராமி மகளிர் கல்லூரி தமிழ் துறை, கு.மு.அண்ணல்தங்கோ அறக்கட்டளை சார்பில் தனித்தமிழ் பெயர் மாற்றப் போராளி கே.மு.அண்ணல்தங்கோ 120 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்ட தமிழியக்க செயலாளர் ஜெயகர் வரவேற்றார், தமிழியக்க மாநில செயலாளர் மு.சுகுமார் தொடக்க உரையாற்றினார்.அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.என்.ஜோதிகுமார், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், அபிராமி கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.வெற்றிவேல், தமிழியக்க வட தமிழக ஒருங்கிணைப்பாளர் கு.வணங்காமுடி, வேலூர் மண்டல செயலாளர் சு. மோகன்குமார், அபிராமி கல்லூரி தமிழ்துறை தலைவர் சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழியக்கப் பொருளாளர் புலவர் பதுமனார், பொதுச்செயலாளர் பேராசிரியர் அப்துல்காதர் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சிக்கு வேலூர் விஐடி வேந்தரும் தமிழியக்க நிறுவன தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அண்ணல் தங்கோவின் பெருமைகளும் அவர் தமிழுக்காக ஆற்றிய தொண்டு குறித்தும் விரிவாக பேசினார்.
அவரால் குடியாத்தத்திற்கு பெருமை, வேலூர் மாவட்டத்திற்கு பெருமை, தமிழகத்திற்கே பெருமை அவருக்கு தமிழக அரசு ரூபாய் 50 லட்சத்தில் மணிமண்டபத்துடன் கூடிய திருவுருவச் சிலை அமைக்க அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் புலவர் க. எத்திராசனார், முனைவர்கள் தமிழ்திருமால், பா.சம்பத்குமார், வே.சரளா ஆகியோருக்கு முத்தமிழ் முகவரி விருது வழங்கினார்.
நிகழ்ச்சியில் அண்ணல்தங்கோ பேரன்கள் செ.தமிழ்ச்செல்வன், செ.அருள்செல்வன் பேசினர்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தமிழியக்கத்தின் சார்பில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ரூ.50 லட்சம் செலவில் குடியாத்தத்தில் அண்ணல் தங்கோ திருவுருவச் சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் அறிவித்தார். முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் அவருக்
கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வது.
ரூ.3½ கோடியில் மொழி ஞாயிறு பாவாணர் கோட்டம் மற்றும் திருவருட்சிலையை சென்னையில் நிறுவ இருக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக முதல் - அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அண்ணன் தங்கோ குடும்பத்தினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு பூஜை நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் 500ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் இன்று அஷ்டமி திதியை முன்னிட்டு காலபைரவருக்குசிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பன்னீர் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை உடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் சுகர் மில் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன்.இவரது மகன் கோவிந்தன் (வயது 36). இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார்.
கோவிந்தன் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கம் பாப்சு நகரில் தனியாக தங்கி இருந்தார்.
நேற்று இரவு அரப்பாக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கோவிந்தன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் கோவிந்தன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிந்தனின் தாயார் பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் மகிழ்ச்சி
- வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சில மாதங்க ளாகவே அதிகப்படியான குரங்குகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இவை அங்கு இருக்கும் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதும், வீடு, கடைகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதும், மேலும் குழந்தைகளை மிரட்டி வருவதுமாக அட்டகாசத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே இருந்து வந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதியிடம் கூறினர். சுகன்யா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா வனத்துறை அதிகாரிகளிடம் சென்று குரங்கு பிடிக்கும் கூண்டினை பெற்றுக்கொண்டு அப்பகுதி இளைஞர்களின் மூலம் சுமார் 25 குரங்குகள் பிடிக்கப்பட்டது.
பின்னர் அருகே இருந்த தீர்த்தம் வனப்பகுதியில் கொண்டு போய் பிடிப்பட்ட குரங்குகளை பத்திரமாக கொண்டு போய் விட்டனர். இந்த செயலால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.






