search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணல் தங்கோ 120-வது பிறந்தநாள் விழா
    X

    அண்ணல் தங்கோ 120-வது பிறந்தநாள் விழா

    • தமிழியக்கம் சார்பில் நடந்தது
    • வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் பங்கேற்பு

    குடியாத்தம்: ஏப்.13-

    குடியாத்தம் அபிராமி மகளிர் கல்லூரியில் தமிழியக்கம் வேலூர் மாவட்ட கிளை, அபிராமி மகளிர் கல்லூரி தமிழ் துறை, கு.மு.அண்ணல்தங்கோ அறக்கட்டளை சார்பில் தனித்தமிழ் பெயர் மாற்றப் போராளி கே.மு.அண்ணல்தங்கோ 120 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    வேலூர் மாவட்ட தமிழியக்க செயலாளர் ஜெயகர் வரவேற்றார், தமிழியக்க மாநில செயலாளர் மு.சுகுமார் தொடக்க உரையாற்றினார்.அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.என்.ஜோதிகுமார், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், அபிராமி கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.வெற்றிவேல், தமிழியக்க வட தமிழக ஒருங்கிணைப்பாளர் கு.வணங்காமுடி, வேலூர் மண்டல செயலாளர் சு. மோகன்குமார், அபிராமி கல்லூரி தமிழ்துறை தலைவர் சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    தமிழியக்கப் பொருளாளர் புலவர் பதுமனார், பொதுச்செயலாளர் பேராசிரியர் அப்துல்காதர் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.

    நிகழ்ச்சிக்கு வேலூர் விஐடி வேந்தரும் தமிழியக்க நிறுவன தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அண்ணல் தங்கோவின் பெருமைகளும் அவர் தமிழுக்காக ஆற்றிய தொண்டு குறித்தும் விரிவாக பேசினார்.

    அவரால் குடியாத்தத்திற்கு பெருமை, வேலூர் மாவட்டத்திற்கு பெருமை, தமிழகத்திற்கே பெருமை அவருக்கு தமிழக அரசு ரூபாய் 50 லட்சத்தில் மணிமண்டபத்துடன் கூடிய திருவுருவச் சிலை அமைக்க அறிவிப்பை வெளியிட்டதற்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் புலவர் க. எத்திராசனார், முனைவர்கள் தமிழ்திருமால், பா.சம்பத்குமார், வே.சரளா ஆகியோருக்கு முத்தமிழ் முகவரி விருது வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அண்ணல்தங்கோ பேரன்கள் செ.தமிழ்ச்செல்வன், செ.அருள்செல்வன் பேசினர்.

    தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தமிழியக்கத்தின் சார்பில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ரூ.50 லட்சம் செலவில் குடியாத்தத்தில் அண்ணல் தங்கோ திருவுருவச் சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் அறிவித்தார். முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் அவருக்

    கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வது.

    ரூ.3½ கோடியில் மொழி ஞாயிறு பாவாணர் கோட்டம் மற்றும் திருவருட்சிலையை சென்னையில் நிறுவ இருக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக முதல் - அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அண்ணன் தங்கோ குடும்பத்தினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×