என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Security Home"

    • 2 மணி நேரத்தில் சிக்கினர்
    • சுவர் ஏறி குதித்து துணிகரம்

    வேலூர்:

    வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் அடைக் கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் 2-வது முறையாக நேற்று மீண்டும்தப்பிச்சென் றனர்.

    சமூகநலத்துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப் படும் 18 முதல் 21 வயதுக்குட் பட்ட இளைஞர்கள் அடைக்கப் படுகின்றனர்.

    21 வயதிற்கு பிறகு அவர்கள் வழக்கமான சிறைச் சாலைக ளுக்கு மாற்றப்படுவர். அதன் படி, வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 42 இளைஞர்கள் அடைக்கப் பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 5 இளை ஞர்கள் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றனர்.

    இந்த தகவலறிந்ததும் பாதுகாப்பு இல்லத்தில் அடைக்கப்பட் டிருந்த மற்ற இளைஞர்கள் கட்டிடம் மீது ஏறி தகராறில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரா ஜேஷ்கண்ணன், துணைசூப்பிரண்டு திருநாவுக் கரசு தலைமையில் போலீசார் பாதுகாப்பு இல்லம் முன்பு குவிக் கப்பட்டதுடன், தப்பியோடிய இளைஞர்களை தேடும் பணியில் போலீசார் துரிதமாக ஈடுபட்டனர்.

    தப்பிச் சென்ற 5 இளைஞர்களையும் அடுத்த 2 மணிநேரத்திற்குள் போலீசார் மடக்கிப் பிடித்த னர்.

    இச்சம்பவத்தை அடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கோட்டாட் சியர் கவிதா தலைமையில் வரு வாய்த்துறை, சமூக நலத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு இல் லத்திற்கு நேரில் சென்று விசா ரணை நடத்தியதுடன், அங்கு தகராறில் ஈடுபட்டிருந்த மற்ற இளைஞர்களை சமாதானம் செய்யும் நடவடிக்கையிலும் ஈடு பட்டனர்.

    இதே அரசு பாதுகாப்பு இல் லத்தில் இருந்து 17 வயது சிறு வன் உள்பட 6 இளைஞர்கள் கடந்த மார்ச் 27-ந் தேதி இரவு பணியில் இருந்த பாது காப்பு இல்ல கண்காணிப்பா ளர், துணை கண்காணிப்பாளர், தலைமை பாதுகாவலர் உள்பட 5 பேரை தாக்கிவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றனர்.

    இந்த தாக்குதலில் பாதுகாவலர் குமாரவேலுக்கு பலத்த காய மும், மற்ற 4 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. தப்பிச் சென்றவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு சிறுவன் உள் பட 4 இளைஞர்கள் சென்னை யில் கைது செய்யப்பட்டனர்.

    ஒரு இளைஞர் சேலத்தில் இளஞ்சிறார் நீதிக்குழும நீதிபதி முன்பு சரணடைந்தார். தலைம றைவாக உள்ள மற்றொரு இளை ஞரை போலீசார் தேடி வருகின் றனர்.

    இந்நிலையில், வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து நேற்று மீண்டும் 5 இளைஞர்கள் தப்பிச்சென்று பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×